Sunday, 13 December 2020

மருதாணி செடிக்கு உள்ள மருத்துவ குணநலன்கள்

மருதாணி செடிக்கு உள்ள மருத்துவ குணநலன்கள்.:

மருதாணி செடியில் இருக்கும் இலை, பூ, காய், குச்சி, இவைகள் அனைத்தும் நன்மைகளை தரக்கூடியது.

மருதாணிச் செடியில் இருக்கும் மருதாணி பூவிற்கு, மன அழுத்தத்தை குறைக்கக் கூடிய சக்தி இருக்கிறது என்பது நம்மில் பல பேருக்கு தெரியாது. இரவு நேரத்தில்  சரியான தூக்கம் இல்லாதவர்கள், இந்த மருதாணி செடியில் இருக்கும் பூக்களை பறித்து முடிந்தால் தலையணையாக செய்து தலைக்கு அடியில் வைத்து  உறங்கலாம். 

மருதாணி பூவை ஒரு வெள்ளைத் துணியில் மூட்டையாக கட்டி, தலையணைக்கு அடியில் வைத்து உறங்குங்கள். இந்த மருதாணி பூவில் இருந்து வரக்கூடிய  நறுமணம், உங்களது கண்களை தூக்கம் தழுவுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

மருதாணி இலைகளை அறைத்து கைகளிலும் கால்களிலும் வைத்துக் கொண்டால் மிகவும் நல்லது. இது எல்லோருக்கும் தெரிந்த ஒரு  விஷயம் தான். இருந்தாலும் கால் நகங்களில் வரும் சேற்றுப்புண், பாத வெடிப்பு, கை நகங்களில் சொத்தை இவைகளுக்கு நல்ல மருந்தாக இந்த மருதாணி இலை  விழுது இருந்துவருகிறது. வெறும் மருதாணி இலையை மட்டும் அறைக்காமல் அதில் ஒரு கொட்டைப்பாக்கு வைத்து அறைத்தால் இன்னும் அதிகப்படியான  பலனை அடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

வாய்ப்புண் உள்ளவர்கள், மருதாணி செடியில் இருக்கும் இலைகளை பறித்து நன்றாக கழுவி, தண்ணீரில் போட்டு, கொதிக்கவைத்து அந்த கஷாயத்தை வாய்  கொப்பளித்தால் வாய்ப்புண் ஆறும். வாய்ப்புண் ஆறும் வரை வாரத்திற்கு ஒரு முறை இந்த முறையை பின்பற்றி வரலாம். 

அடுத்ததாக மீதமிருப்பது மருதாணி குச்சு. இந்த மருதாணி குச்சிகளை சிறு சிறு துண்டுகளாக உடைத்து உங்கள் வீட்டு அலமாரியில் வைத்து வந்தால் கண்ணுக்கு  தெரியாத பூச்சி தொல்லையில் இருந்து விடுபடலாம்

No comments:

Post a Comment