Wednesday, 2 December 2020

தோப்புக்கரணம்

தினமும் 10 நிமிடம் தோப்புக்கரணம் போடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

thoppu ksaranam updatenews360
Quick Share

தோப்புக்கரணம் போடுவது என்பது  முன்பெல்லாம் பள்ளிகளில் மிக சாதாரணமாக  குழந்தைகள் தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம்   எழுத தவறினாலோ ஆசிரியர்கள் குழந்தைகளை தோப்புக்கரணம்   போட சொல்வார்கள். அதே சமயத்தில் கடவுளின் மீது கொண்ட   பேரன்பினால் பிள்ளையார் முன்பு தோப்புக்கரணம் போடுவது வழக்கம். ஆனால்   தோப்புக்கரணம் போடும் பழக்கம் தற்காலத்தில் குறைந்து கொண்டே தான் வருகிறது.  ஆனால் தோப்புக்கரணம் போடுவதில் ஏராளமான நன்மைகள் இருக்கின்றது என்று உங்களுக்கு   தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள். தோப்புக் கரணம் போடுவதால் நம் உடலில் பல நல்ல விதமான   மாற்றங்கள் நடக்கின்றது. அதைப் பற்றி இங்கு காண்போம்.

தோப்புக்கரணம் போடும் முறை:

தோப்புக்கரணம்   போடுவதற்கு என்று   சரியான வரைமுறை உள்ளது. தோப்புக்கரணம்   போடும் போது, வலது கையை இடது காதின் கீழ்   பகுதியிலும், இடது கையை வலது காதின் கீழ் பகுதியிலும்   சற்று இறுக்கமாக அழுத்திப் பிடித்துக் கொள்ளுங்கள். பின்பு   முட்டியை முழுமையாக மடக்கியவாறு கீழே உட்கார்ந்து எழ வேண்டும்.  சுமாராக 10 நொடிகள் உட்கார்ந்து எழ வேண்டும். உட்காரும் போது, கைகளை   காதிலிருந்து எடுக்காமல் நேராக உட்கார வேண்டும். உடல் வளையாமல் இருப்பது   அவசியமாகும். முக்கியமாக நேராக நின்று தோப்புக் கரணம் போடுவது அவசியமாகும்.

தோப்புக்கரணம் வகைகள்:

  • வலது   கையை இடது   காதிலும், இடது   கையை வலது காதிலும்   பிடித்து தோப்புக் கரணம்   போடுவது ஒரு முறையாகும்.
  • இடது   கையை வலது   காதிலும், வலது   கையை இடது காதிலும்,   பிடித்து கால்களை பின்னலாக  வைத்து செய்வது குசா தோப்புக் கரணம்   ஆகும்.
thoppu ksaranam updatenews360"); -webkit-mask-repeat: no-repeat; -webkit-mask-size: contain; -webkit-mask-position: center center; width: 222.222px;">

இருவர் சேர்ந்து செய்தல்: 

தன்னுடைய காதை   எதிரே நிற்பவர்கள்   பிடித்தும், எதிரே நிற்பவர்களின்   காதை இங்கு நிற்பவரும் பிடித்து தோப்பு   கரணம் போடலாம். இது சற்று கடினமான முறை   என்றாலும் நீங்கள் முறையாக பயிற்சி செய்து   பின்பு செய்யலாம்.

எத்தனை தோப்புக்கரணம் போடலாம்:

ஒரு   நாளைக்கு   15 முதல் 50  முறை வரை தோப்பு   கரணம் போட வேண்டும்.  கர்ப்பிணி பெண்கள் தோப்பு   கரணம் போடக் கூடாது. அதுமட்டுமில்லாமல் மாத  விடாய் காலங்களில் பெண்கள் இந்த ஆசனம் செய்வது   தவிர்த்து விடுவது நல்லது.

இந்த  ஆசனத்தை   முதல் முறையாக   செய்து பழகுபவர்கள்  5 முறை வரை செய்தால்  போதுமானது.

தோப்புக்கரணம் போடுவதால்  ஏற்படும் நன்மைகள் :

  • தோப்புக்கரணம்   போடும் போது காதுகளை   அழுத்திப் பிடிப்பதால், காது   பகுதிகளில் அழுத்தம் ஏற்படுகிறது. எனவே   காதில் பிடித்துள்ள இடத்தில் இருக்கும்  நரம்புகளின் வழியாக அந்தப்பகுதியில் இருக்கும்   உடல் உறுப்புகள் தூண்டப்படுகிறது.
  •  தோப்பு   கரணத்தை 100% ஒரே அழுத்தத்தில்  செய்து விட முடியாது. ஆரம்ப   காலத்தில் கடினமாக இருக்கும். பின்பு  தான் இவை சரியான பழக்கத்திற்கு வரும்.

மூளையில் செல்கள் புத்துணர்சி :

  • தோப்புக்கரணம்   போடும் போது மூளையில்   உள்ள செல்கள் புத்துணர்ச்சி   அடைவதால் அது நம்மை சுறுசுறுப்பாக   வைக்க உதவுகிறது. காலை நேரங்களில் தோப்பு   கரணம் போட்டால் அது நமக்கு நாள் முழுவதும் சுறுசுறுப்பாக   இருக்க உதவி புரிகிறது.
  • மூளையில்  உள்ள வலது மற்றும் இடது பகுதி சமமான தூண்டுதல்  அடைய உதவுகின்றது. அதுமட்டுமில்லாமல் மூளைக்கு செய்திகளை பரிமாற்றம் செய்யும் காரணிகள் வலுப்பெற  உதவுகிறது.
  • இந்த   எளிமையான   உடற்பயிற்சியின்   மூலம் நியூரான் செல்கள் புத்துணர்ச்சி   அடைகின்றன. 

ஆட்டிசம் நோய் குணமாகும்:

குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில்  வளர்ச்சிக் குறைபாடாக இருப்பதையே ஆட்டிசம் நோய்   என கூறுவார்கள். ஆட்டிசம் மற்றும் மன இறுக்கம் போன்ற   நோய்கள் தோப்பு கரணம் போடுவதால் குணமடைவதாக ஆய்வுகள்   கூறுகின்றன. இந்த பயிற்சியை தினமும் 5 நிமிடம் செய்து வந்தால்  போதும் உடலில் பல விதமான மாற்றங்களை உணர முடியும் ஆய்வாளர்கள்  கூறுகின்றனர்.

மூளை செயல்திறன், பலம்  மற்றும் நினைவாற்றல்:

  • மந்தமாகவும், சோம்பேறித்தனமாகவும்   இருக்கும் குழந்தைகளை பள்ளியில்   தோப்புக்கரணம் போட சொல்வார்கள். காரணம்   அவர்களின் மூளையின் செயல்திறனானது, காதுகளின்   நுனிப்பகுதியை தொடுவதால், மூளை நினைவு செல்களின் வளர்ச்சி தூண்டப்பட்டு  ஞாபக சக்தி அதிகரிக்கும். நினைவாற்றலும் அதிகரிப்பது மட்டுமில்லாமல், அறிவுக்  கூர்மையும் வெளிப்பட உதவுகிறது.
  • தோப்புக்கரணம் போடும் போது இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்து  உட்கார்ந்து எழும் போது, மூளையில் உள்ள இருபகுதிகளுக்கும் ரத்த ஓட்டம் சீராக செல்லலும், இதனால்   மூளை பலமடையும்.
  • இந்த   தோப்பு   கரணத்தை தொடர்ந்து   செய்து வருவதால் மூளை  சுறுசுறுப்படைந்து, நினைவு   செல்கள் விழிப்படைய செய்கின்றது.
  • இத்தனை  நன்மைகள்   உள்ள தோப்பு   காரணத்தை நீங்களும்   தினமும் செய்து வாருங்கள், ஆரோக்கியமாக  வாழுங்கள் நண்பர்களே

No comments:

Post a Comment