குடைமிளகாய் தரும் மருத்துவ நன்மைகள்:
◆குடைமிளகாயை உணவில் சேர்த்து வந்தால் ட்ரைகிளிசரைடு அளவையும் கொழுப்பையும் குறைக்கும். உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது சைனஸ், சளி மற்றும் தொண்டை வலி ஆகியவற்றை குணப்படுத்துகிறது.
◆குடைமிளகாய் வைட்டமின்கள் ஏ மற்றும் சி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இதில் இருக்கிறது. குடைமிளகாய் வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது.
◆நீங்கள் புற்றுநோயைத் தவிர்க்க விரும்பினால், இன்று கேப்சிகம் உட்கொள்ளத் தொடங்குங்கள். இது புற்றுநோயை வெல்லும் திறன் கொண்டது. உலகெங்கிலும் உள்ள நிபுணர்களும் விஞ்ஞானிகளும் புற்றுநோய்க்கான சிகிச்சைக்காக கேப்சிகம் குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
◆குடைமிளகாய் உங்களுக்கு ஆற்றலைத் தருகிறது மற்றும் உடலை சுறுசுறுப்பாக்குகிறது. குடைமிளகாய் வயிறு உப்புசம், வாயு தொல்லை பிரச்சனையை போக்கும்.
◆இளமையில் கண் தொடர்பான பிரச்சினைகள் வராமல் தடுக்க குடைமிளகாய் உதவுகிறது.
◆குடைமிளகாயில் உள்ள “வைட்டமின் சி’ கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது.
◆சர்க்கரை நோய் உள்ளவர்கள் குடைமிளகாயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் சர்க்கரை அளவு குறையும்.
No comments:
Post a Comment