நாமகரணம்....
பொதுவாக குழந்தைபிறந்தது முப்பது நாளில் பெயர்சூட்டுதலையே நாமகரணம் சூட்டுதல் என்கின்றோம்.
இதை ஒருசடங்காக செய்யவேண்டுமென்பது மரபு ஆனால் இன்றையதலைமுறையினர் அதை ஒருபொருட்டாக கருதுவதில்லை ஏதாவதொருவெப்சைட்டில் சென்று வாயிலும் நுழைய முடியாத ஒரு பெயரை குழந்தை பிறக்கும் முன்னரே தேர்வுசெய்து அதை வைத்தும் விடுகின்றனர்.
அதனால் பெயர் சூட்டுதல் ஒருசடங்கு என்பதே இப்போது மாறிப்போனது.
நாமகரண சம்ஸ்காரம் என்ற பெயரில் அறியப்படும் ஒருசடங்கு நம் முன்னோர்கள் நடத்திவந்தனர்.
குழந்தைபிறந்து பதினைந்து நாளிலிருந்து முப்பது நாளுக்குள் இச்சடங்கு பொதுவாக செய்து வந்தனர்.
அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில் தாய் குழந்தையை நீராட்டி புதிய ஆடைகளைஅணிவித்து மனையில் அமர்ந்திருக்கும் தந்தையின் பின்புறமாகச்சென்று குழந்தையை தந்தையிடம் கொடுத்துவிட்டு அவரின் இடதுபுறம் அமர்ந்துகொண்டு குழந்தையை வாங்கியபின்
தந்தை இறைசிந்தனையுடன் குழந்தைக்கு அதன் பெயரை காதில் மூன்று முறை குழந்தையின் காதில் சொல்லுதலே நாமகரணம் செய்வித்தல்.
ஆண்குழந்தையானால் சக்தியை பிரதிபலிக்கும் பெயர் வழங்கவேண்டும்.
பலம். ஐஸ்வர்யம். சேவை என்பவற்றைக்குறிக்கும் பெயர்கள் உத்தமமானது.
பெண் குழந்தை எனில் எளிதில் உச்சரிக்க கூடியதும் தெளிவான பொருள் விளங்குவதும் கேட்பவர் மனதில் மகிழ்ச்சி யூட்டும்படியான சுபம் நிறைந்த தும் நெடில் ஓசையில் முடியும்படியானதுமான பெயர்கள் உத்தமம்.
இவற்றில் கவனிக்க வேண்டியது பெயரில் கூடுதல் எழுத்துக்கள் இல்லாதவையாக இருத்தல் நலம்.
ஒருபெயரில் என்ன இருக்கிறது என்று கேட்பதுவே இன்றைய கண்ணோட்டம் என்றாலும் ஒரு தனிநபரின் பெயர் அவரில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எண்ணியல் மற்றும் மனநிலை அறிஞர்கள் அங்கீகரித்துள்ளனர்.....
No comments:
Post a Comment