Thursday, 28 January 2021

பாலாரிஷ்டம்.....

பாலாரிஷ்டம்
பாலாரிஷ்டம் என்றால் பாலனுக்கு கேடு என்பதாம்.
இப்பாலாரிஷ்டம் என்பது சந்திரன் குழந்தை ஜெனனமானபோது ராசியிலோ அம்சத்திலோ தீய இல்லத்தை அடைந்திருந்தாலும் அல்லது நீச்சம் பெற்றிருந்தாலும் குழந்தைக்கு பாலாரிஷ்டம் ஏற்படும்.
12,வயதுவரை பாலாரிஷ்டம் என்றும்.
20,வயதுவரை எவ்வனாரிஷ்டம் என்றும்.
32,வயதுவரை அற்ப ஆயுள் எனவும்.
50,வயதுவரை மத்திமாயுள் எனவும்.
80,வயதுவரையில் தீர்க்காயுள் எனவும் கூறப்படுகிறது....

அன்னையவள் முற்பிறப்பில் ஈட்டிய தீவினை வயத்தால் ஆண்டு நான்கும்.
பின்னுமொரு நான்காண்டும் பிதுர் பாவத்தால் சிசு வினையின் பெருக்கால் பின்பு
மன்னு மொரு நான்காண்டும் அரிட்டமது சம்பவிக்கும் வருமுன் நான்காயச்
சென்றவயதின் பின்னர் வயதளவைக் கண்டுரைப்பார் தூயோரன்றே..
         (குப்புசுவாமியம்)
குழந்தை 4,வயது வரை தாய் செய்த கர்ம ஊழ்வினைப்பயனாலும்,
8,எட்டு வயதுக்குள் தந்தை செய்த கர்ம ஊழ்வினைப்பயனாலும்,
11,வயதுக்குள் தனது பூர்வ கர்மப்பயனாலும் தோஷம் உண்டாகும்.
இதன் பின்னர் வயதில் ஏற்படும் திசை புத்தி பலன்களைக்கொண்டு அரிட்டம் சொல்ல வேண்டும்...

பாலாரிஷ்டத்தை இரண்டு வகையாகப்பிரித்துக்கூறுவர்.
அசைவத்தியோ பாலாரிஷ்டம்,
அசைவத்தியோ பாலாரிஷ்டம் என்பது குழந்தை பிறந்தவுடனோ அல்லது,2-3மாதத்திற்குள்ளாக அன்றி1வருடத்திற்குள்ளாவது உண்டாவது.. இதற்கு விதிவிலக்கு யாதெனில் சுப கிரகங்கள் கேந்திரம் பெற்றிருப்பதுவே...

செளம்மிய பாலாரிஷ்டம் என்பது பிறந்தபோது உண்டான திசைமுடிவிற்குள் சம்பவிக்கும் தோஷம்...

குரு பகவான் ஆயுள் கர்த்தா என்பதால் குழந்தை பிறந்த போது, ஆட்சி, உச்சம், நட்பு, மூலத்திரிகோணம் போன்ற நல்ல அமைப்பில் இருந்தால் குழந்தைக்கு நீண்ட ஆயுள் உண்டு..

ஜோதிடர் ஒரு குழந்தைக்கு சாதகம் கணிப்பதற்கு முன் ஆயுள் நிர்ணயம் செய்ய இயலுமா?.அதனாலே பாலாரிஷ்டம் இல்லாத குழந்தைதானா என்பதை அறிந்த பின்னர் சாதகம் கணிப்பதே சிறந்தது.
(இதனாலே குழந்தைக்கு சாதகம் கணிப்பதென்பது 1வயது முதல்3வயதுவரை செய்வதில்லை பல ஜோதிடர்கள்)

இலக்கிணத்திற்கு,6,8,ல் பாவக்கிரகங்கள் இடம் பெற்றால் குழந்தை பிறந்தவுடன் மரணமென்றும். ஜெனன லக்கினத்தில் செவ்வாய் இருந்தாலும் அல்லது லக்ன த்திற்கு6,8,ல் சனியுடன் கூடியிருந்தாலும் குழந்தை இறக்கும்.
லக்ன த்திற்கு,68,ல் சந்திரனிருந்து சுபர்களாகிய புதன். குரு. சுக்கிரன் பார்வை பட்டால் எட்டாண்டுகள் இருக்கும் என்பதாம்...

எல்லா கிரகங்களும் ஸ்திர ராசியிலிருந்து சனி அம்சம்ஏறி இவை கேந்திர கோணமாகியிருந்தால் எண்ணிக்கை யில் அடங்காத வயதுடையவரென்க..
(இப்படி ஒரு அமைப்பு உண்டாவது கடினமே)
6,ல் புதனும்,7,ல்குருவும்,8,ல் சுக்கிரனும், தனித்தனி யாக இருந்தாலும். தனுசில் செவ்வாயும் மீனத்தில் சனி இருக்க மற்ற கிரகங்கள் எல்லாம் இவர்களுக்கிடையில் இருந்தால் நீண்ட ஆயுளுடன் நிறைய அதிசயங்களை நடத்திக்கொண்டிருப்பார்கள். 
லக்னத்திற்கு8,ல் பாவக்கிரகங்களிருப்பின் அக்குழந்தை ஏழுநாள் வரை இருக்கும். அதன்மேலும் உயிரோடிருப்பின் அக்குழந்தையின் கண் களுக்கு
தோஷம் உண்டாகும்.
லக்னத்தில் செவ்வாய் இருப்பினும்,6,8,12,ல் சனி செவ்வாய் இருப்பினும்.
லக்னம்,5,7,8,9,12,ஆகிய வீடுகளில் ஏதேனும் ஒன்றில் சூரி செவ் சனி இவர்களில் ஏதேனும் ஒருவருடன் அல்லது பலருடன் தேய்பிறை சந்திரன் கூடியிருக்கப்பிறந்த குழந்தைக்கு சரீர பீடையும் அரிட்டதோஷமும் உண்டாம்....

3 comments:

  1. Mon.13, Sep. 2021 at 10.09 am.

    தேவார ஸ்தலம் :

    இரும்பூளை :

    தலம் : இரும்பூளை என்பது ஆலங்குடி. கும்பகோணம் நீடாமங்கலத்திலிருந்து 6 கி.மீ தொலைவில், அமைந்துள்ளது.
    தட்சிணாமூர்த்தியே குரு.

    இறைவன் : ஆபத்சகாயேச்சுவரர்
    இறைவி : ஏலவார் குழலி
    தீர்த்தம் : அமிர்தப் பொய்கை
    தலவிருட்சம் : பூளைச் செடி

    பதிக வரலாறு :

    "திருக்கருக்குடி நாதனைக்" கண்டு கையாரத் தொழுது வாயாரப் பாடியபின் இரும்பூளை அடைந்து..

    ஏரார் இரும்பூளை இடங்கொண்ட ஈசன்
    காரார்கடல் நஞ்சமுது உண்ட கருத்தே

    என பதிகம் பாடுகிறார்.

    இத் திருக்கருக்குடி (மருதாந்த நல்லூர்)...கும்பகோணம் மன்னார்குடி சாலையில் 5 கி.மீ தொலைவில், மெயின்சாலையிலிருந்து 1 கி.மீ உள்ளே செல்ல வேண்டும்.

    இராமன் பூசித்து வணங்கியதாகக் கூறுவர். பெருமான் மணலால் ஆனவர்.

    இறைவன் : கருக்குடிநாதர்
    இறைவி : கல்யாண நாயகி
    தீர்த்தம் : ஓம தீர்த்தம்

    நனவிலும் கனவிலும் நாளும் தன்னொளி
    நினைவிலும் எனக்குவந்து எய்து நின்மலன்
    கனைகடல் வையகம் தொழுக ருக்குடி
    அனலெரி யாடும்எம் அடிகள் காண்மினே.

    பொருள் :

    நினைவிலும் கனவிலும் மனத்தில் தோன்றும் நினைப்பினும் எனக்கு முன் எதிரே ஞானஒளி வடிவில் காட்சி தருபவர் ஈசன்.

    கடலால் சூழப்பெற்ற இவ்வுலகம் போற்றும் கருக்குடியில்... கையில் தீயேந்தி ஆடும் பெருமான், அவரைச் சென்று கண்டு வணங்கி உய்வீராக.

    *பெருமான் மணலால் ஆனவர் என்பதால்...தற்போது... இடிபாடுகள் அதிகம்.. ஆகவே, திருக்குடமுழுக்குச் செய்யப்பட வேண்டும்.*

    jjansi281@gmail.com

    ReplyDelete