Wednesday, 27 January 2021

வயிற்றுப் புண்ணை குணமாக்கும் அகத்தி கீரை.

வயிற்றுப் புண்ணை குணமாக்கும் அகத்தி கீரை.

அகத்தி - அகத்தை சுத்தப்படுத்துவதால் அதை அகத்தி கீரை என அழைக்கின்றனர். வாய் மற்றும் வயிற்றுப் புண்ணை ஆற்றும் ஆற்றல் உண்டு.

அகத்தி - அகத்தை சுத்தப்படுத்துவதால் அதை அகத்தி கீரை என அழைக்கின்றனர். வாய் மற்றும் வயிற்றுப் புண்ணை ஆற்றும் ஆற்றல் உண்டு. அகத்திக்கீரையுடன் சுத்தமான பசு நெய்யும் சின்ன வெங்காயமும் சேர்த்து கூட்டாகவோ, பொரியலாகவோ செய்து தொடர்ந்து சாப்பிட்டுவர மிகச் சிறந்த பலன்களைத் தரும். அகத்தி என்றாலே முதன்மை, முக்கியம் என்று பொருள்படும். இது நமது அகத்தின் தீயை அகற்றுவதால் அதை அகத்தி என அழைக்கின்றனர்.

அகத்தியில் அடங்கியுள்ள சத்துக்கள்:

நீர்-73 சதவீதம் புரதம்-8.4சதவீதம் கொழுப்பு-1.4 சதவீதம் தாதுப்புக்கள்-2.1சதவீதம் நார்ச்சத்து-2.2சதவீதம் மாவுச்சத்து-11.8சதவீதம் இந்த கீரையில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இக்கீரையில் அடங்கியுள்ள புரதச்சத்து மிகச் சிறந்த புரதமாக கருதப்படுகிறது. சுண்ணாம்புச்சத்து, இக்கீரையில் அதிக அளவில் உள்ளது. இது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. இக்கீரையில் உயிர்ச்சத்துக்கள் நிறைய உள்ளது. வைட்டமின் ஏ 100கி, 9000 கலோரிகள் உள்ளது.

தயாமின் சத்து - 0.21 மிகி
ரைபோப்ளேவின்- -0.09 மிகி
வைட்டமின் சி - 169 மிகி உள்ளது.
அகத்தியின் சிறப்பு:
மருந்திடுதல் போகுங்காண்
வன்கிராந்தி - வாய்வாம்
திருந்த அசனம் செரிக்கும். வருந்தச்
சகத்திலெழு பித்தமது சாந்தியாம்
நாளும் அகத்தியிலை தின்னு மவர்க்கு

விளக்கவுரை:

இது மருந்து உண்ணும் காலத்தில் தவிர்த்தல் நல்லது. இக்கீரை வாதத்தை சரிசெய்யும். இது அதிகப்படியான மலமிலக்கியாகும். வயிற்றில் உள்ள கெட்ட புழுக்களை கொல்கிறது. பித்தத்தை சமன் செய்கிறது.

மருத்துவப் பயன்கள்:

அகத்திக் கீரையில் இலையும், பூவும், காயும், பட்டையும், வேரும் மருந்தாகப் பயன்படுகின்றன. இக்கீரை காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை சமன் படுத்தும் இயல்புடையது. குடல்புண், அரிப்பு, சொறி சிரங்கு முதலிய தோல் நோய்கள் இக்கீரையை உணவாக உண்பதால் குணமாகும். தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலிக்கு அகத்திக் கீரையைப் பச்சையாக மென்று சாற்றை உள்ளே விழுங்க இந்நோய்கள் நீங்கும். ரத்தப் பித்தம், ரத்த கொதிப்பு ஆகியவை அகத்திக்கீரையை உண்பதால் அகலும்.

பயன்பாடு:

அகத்தி கோழி, மாடு போன்ற கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகின்றது. அகத்தி இலையிலிருந்து தைலம் தயார் செய்கிறார்கள். அகத்தியின் பட்டையும் வேரும் மருந்துப் பொருள்களாக பயன்படுகிறது. அகத்தி மரக்குச்சிகள் கூரை வேய்வதற்கு பயன்படுகிறது.

அகத்திப்பட்டையின் சாறு சிரங்குக்கு மருந்தாகப் பயன்படுகிறது. வேர் மூட்டு வலிக்கு மருந்தாக அரைத்து பயன்படுத்தப்படுகிறது. வெண்மை நிற அகத்தி மரம் பொம்மை செய்யவும், வெடிமருந்து செய்யவும் பயன்படுகிறது. வெற்றிலைக் கொடிக்கால்களில் வெற்றிலைக் கொடி படரவும் மிளகுத் தோட்டத்தில் மிளகுக்கொடி படரவும் அகத்தி மரம் பயன்படுகிறது.

இந்த கீரையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது இருதயத்திற்கு ஆரோக்கியத்தை தருகிறது. வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை அதிகம் உண்பவர்களுக்கு ரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கிறது. அகத்தி கீரையில்-16.22 சதவீதம் வைட்டமின் சி உள்ளது. இது ரத்த குழாய்கள் தடிமன் ஆவதை தடுத்து நிறுத்துகிறது. கொழுப்புகளை கரைக்கிறது. வைட்டமின் சி சத்து குறைவாக உள்ளவர்களை பக்கவாதம், ரத்த குழாய் அடைப்பு, மாரடைப்பு போன்றவைகள் தாக்கும்.

பொலிவிழந்த தோலிற்கு கருவளையங்கள் நிறைந்த முகத்திற்கு அகத்தி ஒரு நல்ல தீர்வாக அமைகிறது. ரத்த சோகையை நீக்கு கிறது. பிராணவாயு சரியாக செல்லாததால் தோல் பொலிவிழந்து காணப்படும். இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்து கொள்ளுதல் தோலுக்கு நல்ல நிறத்தை தருகிறது.

அகத்தி இப்பணியை செவ்வனே செய்கிறது. நுண்கிருமிகள் வளர்வதை தடுத்து நிறுத்துகிறது. எச்.ஐ.வி. போன்ற உயிர் கொல்லி கிருமிகளையும் தடுக்கிறது. நோய் தொற்று உள்ளவர்கள், அந்த கிருமி தொற்று இருப்பவர்களுக்கு அதன் வளர்ச்சி தடுக்கப்படுகிறது.

ரைபோப்ளேவின் சத்து குறைவாக இருப்பவர்களுக்கு தலைவலி அதிகமாக இருக்கும். அடிக்கடி வரும் 200-400மிகி ரைபோப்ளேவின் எடுத்துக் கொண்டால் இதற்கு நல்ல தீர்வு. அகத்தி இதற்கு உறுது ணையாக இருக்கும்.

களைப்பு, சதைவலி, மரமரப்பு, அசதி போன்ற குறைபாடுகள் பாஸ்பரஸ் குறைப்பாடுகளினால் ஒரு நாளைக்கு 1200 கி தேவைப்படும். ஆண் மலட்டு தன்மை, விந்தணுக்கள் குறைபாடு போன்றவைகளுக்கு நல்ல தீர்வு.

அகத்தி கீரையை அரைத்து உச்சந்தலையில் ஒரு மணிநேரம் வைத்திருந்து குளித்தால் உடல் உஷ்ணம் குறையும். இளநரை ஏற்படுவதையும் தடுக்கும்.

அகத்தி கீரை சாற்றில் சிறிது உப்பு சேர்த்துக் குடித்தால் வாந்தி ஏற்பட்டு பித்த நீர் வெளியாகும். இதனால் உடலில் உள்ள பித்தம் குறையும்.

அகத்தி கீரையை அரைத்து ஆறாத நாள்பட்ட புண்கள் மீது தடவினால் விரைவில் ஆறிவிடும்.

பூவைச் சமைத்து உண்டு வர மலச்சிக்கல் குறையும். அகத்தி இலைச்சாற்றை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்த ஒரு மாதத்தில் இருமல் குறையும்.அகத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் சாற்றோடு - அதே அளவு தேன் கலந்து உண்டு வர வயிற்று வலி நீங்கும்.

அகத்தி கீரையுடன் சம அளவு தேங்காய் சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, அதில் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து, கரும்பட்டை, தேமல், சொரி, சிரங்கு உள்ள இடத்தில் பற்றுப்போட்டால் முழுமையாக குணமடையும்.

அகத்திக்கீரை, மருதாணி இலை மற்றும் மஞ்சள் மூன்றை யும் சமஅளவு எடுத்து அரைத்துத் தடவினால், கால்களில் ஏற்படும் பித்த வெடிப்புகள் குணமாகும்.

4 comments:

  1. அய்யா..வெ.சாமி அவர்களுக்கு நமஸ்காரம்.
    அய்யா.. அகத்தியை பற்றி..நானும் அளிக்கிறேன் அய்யா.

    அகத்தி :
    அகத்தியின் வேறுபெயர்கள் :
    முனி , அச்சம் , கரீரம்.

    இத்தாவர *குடும்பப் பெயர் : Fabaceae.*
    *தாவரவியல் பெயர் : Sesbania Grandiflora.*
    தாவர வேதிப் பொருட்கள் : இதன் பட்டையில் Tanin என்ற வேதிப் பொருள் உள்ளது.

    *ஆங்கிலப் பெயர் : Swamp Tree.*

    தாவரத்தின் புற அமைப்பு :

    20−30 அடி உயரம் வளரும். சிவப்பு மற்றும் வெள்ளை நிறப் பூக்கள் பூக்கும். இந்ந அடிப்படையில் இது 2− வகையாகப் பிரிக்கப்படுகிறது..
    அவை....
    சிவப்பு பூ... செவ்வகத்தி.
    வெள்ளைப் பூ... அகத்தி .

    பயன்படும் பகுதி.... இலை , பூ , பட்டை , வேர்.
    சுவை : சிறு கைப்புச் சுவையாக இருக்கும்.

    தன்மை : தட்பம்
    பிரிவு : கார்ப்பு.

    ReplyDelete
  2. செய்கை பார்த்தீங்கன்னா...இலகுமல காரி , சமனகாரி , விஷநாசக்காரி.

    *அறிந்து கொள்ளுங்கள்...!*

    * இலகுமலகாரி (Aperient)என்றால்... உபத்திரவம் இல்லாமல் மலத்தை ஒரு முறை வெளியாக்கும் மருந்து.

    * சமனகாரி (Sedative)என்றால்.. தாதுக்களின் கொதிப்பைத் தணிக்கும் மருந்து.

    * விஷநாசக்காரி (Antidote) என்றால் விஷத்தை முறிக்கும் மருந்து.

    அகத்திக் கீரையை உண்ணில்... இடு மருந்தும் பயித்திய தோஷமும் நீங்கும்.

    அகத்தி...அகம் + தீ. நம் உடம்பிலுள்ள தீ யைக் குறைக்கும். அதாவது உடம்பிலுள்ள அதிகப்படியான சூட்டை(உஷ்ணத்தை) தணிக்கக் கூடிய மருந்து...இவ் அகத்தி என்பதேயாம்.

    * அகத்திக் கீரையை... காம்பு, பழுப்பு, புழுக்கள், தூசி நீக்கிவிட்டு, நீரில் அலசி சுத்தப் படுத்தி துவட்டலாகச் செய்து சாப்பிடலாம்.

    இவ்வாறு வாரம் ஒருமுறை அல்லது இருமுறை சாப்பிட்டுவர உடலிலுள்ள உஷ்ணம் தணியும். கண்கள் குளிர்ச்சி பெறும். மலச்சிக்கல், நீரடைப்பு, பித்த மயக்கம் நீங்கும்.

    * அகத்தி இலையின் சாறு இரு துளிகளை மூக்கில் விட ... காய்ச்சல் குறையும்.

    * இந்த இலையை அரைத்து, அடிபட்டு இரத்தம் சொறியும் காயங்களுக்கு வைத்து கட்டச் சீழ்பிடிக்காமல் விரைவில் ஆறும்.

    * அகத்திப் பூவின் சாறை கண்ணில் விட கண் நோய்கள் குணமாகும்.

    ReplyDelete
  3. அகத்தி வேர்ப்பட்டை , ஊமத்தன் வேர் சம அளவு எடுத்து, அரைத்து கீல் வாயுவுக்கும், வாத வீக்கங்களுக்கும் பற்று போட குணம் ஆகும்.

    * அகத்தி மரப்பட்டை, மற்றும் வேர் பட்டை குடிநீர் செய்து குடித்துவர... அம்மைக் காய்ச்சல், கை, கால் எரிச்சல், நெஞ்சு எரிச்சல், நீர்க்கடுப்பு,தாகம் நீங்கும்.

    *அறிந்து கொள்ளுங்கள்.....*

    அகத்திப் பூ... சங்கோசனகாரி சமனகாரி.

    *சங்கோசனகாரி (Astringent) : அதாவது... சதை, நரம்பு முதலியவற்றை சுருங்கச் செய்யும் மருந்து.

    * சமனகாரி ...மேலே குறிப்பிடப் பட்டுள்ளது..

    காலையில்.. 1 அல்லது 1 1/2 பலம் எடை உள்ள அன்று மலர்ந்த அகத்திப் பூவைச் சுத்தம் செய்து, நீரில் கழுவி, பொடியாக அரிந்து, பசுவின் பாலில் போட்டு வேகவைத்து , சிறிது சர்க்கரைச் சேர்த்து, 5 அல்லது 7 நாட்கள் சாப்பிட்டு வர... பித்தம், உட்காங்கை தீரும்.

    பூவைச் சிறு துண்டுகளாக அரிந்து துவட்டலாகச் செய்து சாப்பிட்டால்.. பல பிணிகள்( நோய்கள் ) தீரும்.

    * சுத்தப்படுத்தின அகத்திக் கீரையை இடித்துப் பிழிந்து வடிகட்டியச் சாறு.. 1/2 படி, நல்லெண்ணெய் ... 1/2 படி.
    இவை இரண்டையும் நன்கு பழகின தைல மண்பாண்டத்தில் இட்டு அடுப்பிலேற்றி... சிறு தீயாக வைத்து, சாறு சுண்டி மெழுகுபதம் வரும்போது..கஸ்தூரி மஞ்சள், பளிங்கு சாம்பிராணி, பச்சைக் கிச்சிலிக் கிழங்கு, விளாமிச்சம் வேர்..வகைக்கு 1/2 பலம் வீதம் இடித்துச் தூள் செய்து போட்டு... தைலத்தை கீழிறக்கி வடித்து, ஆறிய பின் சீசாவில் பத்திரப்படுத்தி...வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து...குளித்துவர...பித்தம் தணியும். பித்தத் தலைவலி தீரும். கண்கள் குளிர்ச்சி பெறும்.

    குறிப்பு : அன்றைய தினம்...பகல் உறக்கம், அலைச்சல் திரிச்சல் கூடாது.
    ஞாபகத்தில் கொள்க. இதுவே பத்தியம்.

    * அகத்தி மரத்தின் வேர்ப்பட்டையை..முக்கால் அல்லது ஒரு பலம் எடுத்து, சிறு துண்டுகளாக நறுக்கி இடித்து, மண்பாண்டத்திலிட்டு..1/2 படி சுத்தமான நீர்விட்டு, அடுப்பில் வைத்து, சிறு தீயாக வைத்து, சுண்டக் காய்ச்சி.. அதாவது.. 1/8 படியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி வேளைக்கு... 1 அல்லது 1 1/2 அவுன்ஸ் வீதம்.. தினம் மூன்றுவேளை கொடுத்துவர... பித்தத்தால் உண்டான தேக எரிச்சல், துர்ப்பலம், தாகம் முதலியவை தீரும். பின்னும்.. உதிரக் கொதிப்பினால் சரீரத்தில் கண்ட தழும்புகளையும் அடக்கும்.

    ReplyDelete
  4. அறிந்து கொள்ளுங்கள்...*

    அகத்திக்கீரை வேர்....பலகாரி , சங்கோசனகாரி....மேலே குறிப்பிடப்பட்டூள்ளது.

    *பலகாரி (Tonic) : அதாவது..தாதுக்களுக்கு பலம் கொடுக்கும் மருந்து.*

    இதன் வேர்... உடல் பலம் தரும் மருந்தாகும்.

    முக்கியக் குறிப்பு : மருந்துண்ணும் காலத்தில்... அகத்திக் கீரையை உபயோகிக்க கூடாது..

    மேலும்...அடிக்கடி உண்டால்... உடல் வெளுத்து உடல் வீக்கம், வயிற்றுக் கடுப்பு, கழிச்சல் பொன்றவற்றை உண்டாக்கும்.

    மருந்து உட்கொள்வதற்கு முன்...ஶ அகத்திக் கீரைச் சாறு, அல்லது கசாயம் ...முதல்நாள் உட்கொண்டு..மறுநாள் மருந்து உண்ணலாம்.

    ஆகவே... வாரம் ஒருமுறை உண்டு வந்தாலே மேற்கண்டபிணிகள் யாவும் நீங்கி நலம் பெறலாம்.

    வாழ்க வளமுடன்.

    Jansikannan60@gmail.com.

    ReplyDelete