ஒரே நேரத்தில் பிறந்தாலும் கர்மம் வெவ்வேறே..!
பலருக்கு உள்ள கேள்வி/சந்தேகம், பலர் சோதிடத்தை நம்பாமல் இருப்பதற்கு காரணமாக கூறும் சாக்கு, ஒரு நாளில் அதே நிமிடத்தில் பல குழந்தைகள் பிறக்கிறார்கள் எல்லோருக்கும் வாழ்க்கை ஒரே மாதிரியா அமைகிறது?, இல்லையே ஒருவன் பணக்காரனாகவும் இன்னொருவன் பிச்சைக்காரனாகவும் ஒவ்வொருவரின் வாழ்க்கை ஒவ்வொரு விதத்தில் அல்லவா அமைகிறது இதற்கு காரணம் என்ன?, இதை பலர் விளக்குவதில்லை தெரியவில்லை என்றால் என்ன ஜாதகம் சோதிடம், இதற்கான விரிவான பதிலை இந்த பதிவில் பதிகிறேன் மேற்கொண்டு படிக்கவும்..!
ஒவ்வொரு மனிதனும் கர்மம் சேர்க்கிறான் அவன் வாழும் ஒவ்வொரு நொடியும் கர்மம் சேர்க்கவும்/கழிக்கவும் செய்கிறான், அவன் சேர்க்கும் நல் கர்மம் தீய கர்மம் பொறுத்தே அதன் தாக்கத்துடனே பிறக்கிறான், அவன் இன்னாருக்கு மகனாக/மகளாக பிறக்க வேண்டும் என்பதும் அவனது கர்மம் பொறுத்தே நிர்ணயம் செய்யப்படுகிறது, ஒருவர் சேர்க்கும் கர்மம் அவருக்கு மட்டுமே சொந்தமானது/தனித்துவமானது, அவர் சேர்த்த கர்மத்தை அவரால் மட்டுமே கழிக்க/சரிசெய்ய இயலும், யாருடைய கர்மத்தையும் யாரும் அனுபவிக்க இயலாது, அவரவர் கர்மம் அவரவருக்கே, ஆனால் ஒரே ரத்தம்/சதை என்கிற பெற்றோர்/உடன்பிறந்தோர் கர்ம தொடர்பே, அதாவது உங்கள் பெற்றோரின்/சகோதரரின் கர்மா உங்களின் கர்ம பலனை அனுபவிப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தும் அதாவது பிரதிபலிப்பு, இதனால் உங்கள் கர்ம பலனை நீங்கள் அனுபவிப்பதில்/கழிப்பதில் தடை உருவாகும், உங்களுக்கு திருமணம் ஆக வேண்டிய அமைப்பு இருந்தாலும் திருமணம் நடைபெறாமல் போவதற்கு காரணம் உங்கள் பெற்றோர்/உடன்பிறந்தவரின் கர்ம தாக்கமாகும் இதே போல் தான் உங்கள் கர்ம தாக்கம் அவர்களை பாதிக்கும், நன்றாக கவனியுங்கள் இது தாக்கம் மட்டுமே, நீங்கள் எந்தவிதத்திலும் அவர்களின் கர்மத்தை குறைக்கவோ/கூட்டவோ போவதில்லை, அதே போல் தான் அவர்களும் உங்கள் கர்மத்தை கூட்டவோ/குறைக்கபோவதில்லை, இதுவும் ஒரு காரணம் பலர் ஒரே நேரத்தில் பிறந்தாலும் அவர்களின் வாழ்க்கை வெவ்வேறு விதத்தில் இருக்க, ஆனால் இதை விட இன்னொரு காரணமும் உண்டு அது என்ன மேற்கொண்டு படியுங்கள்..!
ஜாதகத்தில் ஒவ்வொரு பாவத்துக்கும் பல நூறு காரகங்கள், ஒவ்வொரு கிரகங்களுக்கும் பல்வேறு காரகங்கள், ஒரே ஊரில், ஒரே நேரத்தில், இடத்தில், ஒரே பெற்றோருக்கு இரு குழந்தைகளாக பிறந்தாலும் அவர்களின் வாழ்க்கை வெவ்வேறு தான், ஏனெனில் ஒவ்வொருவரின் கர்மாவும் ஒவ்வொரு விதம், உங்களுடைய கர்மாவை நீங்கள் மட்டுமே அனுபவிப்பீர்கள், ஆனால் அதை அனுபவிக்கும் போது பெற்றோர்/உடன்பிறப்பால் ஏற்படும் அவர்களின் கர்ம பிரதிபலிப்பு உங்கள் கர்மாவை நீங்கள் அனுபவிக்க தடை/தாமதம் ஏற்படுத்தும், மேலும் ஒவ்வொரு வீடு/கிரகத்துக்கு பல நூறு காரகங்கள், இரட்டை பிறவி என்றாலும் ஒருவருக்கு ஒரு காரகம் கிடைத்தும் இன்னொருவருக்கு கிடைக்காமல் போவதும், அந்த தனிப்பட்ட நபர் சேர்த்த/செய்த கர்மாவே, அதன் தாக்கம் தன்னுடன் ஒட்டிபிறந்தவன் ஒரு காரகத்தை அனுபவிக்க தான்னால் அதை அனுபவிக்க இயலாமல் பார்த்து தவிப்பது, ஒரே லக்னம்/ராசி கிரகநிலை என்றாலும் ஒருவருக்கு ஒரு பாவத்தில் கிடைக்கும் காரகம் மற்றவருக்கு கிடைக்காமல் போகலாம் ஏனெனில் அது அந்த தனிப்பட்ட ஆத்மாவின் கர்மபலன், ஒருவர் நன்றாக வாழ்வதும் இன்னொருவர் தாழ்ந்துபோவதும் அவரவர் சுய கர்மபலனே என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஆகவே தான் ஒரே நேரத்தில் ஒரே ஊரில் ஒரே பெற்றோருக்கு பிறந்தாலும் இருவருக்குள்ளும் வேறுபாடு அதிகம் இருக்கும், இருவரின் வாழ்க்கையும் வெவ்வேறாகும்.
No comments:
Post a Comment