Wednesday, 3 February 2021

விக்னம்....

விநாயகரும் பாதக ராசிகளும்..!

சோதிடத்தில் ஒவ்வொரு ராசி வீட்டிற்க்கும் பாதக வீடு உண்டு, பாதகம் என்பது தடைகள் ஆகும், பாதகம் என்பதை விக்னம் என்றும் கூறலாம், விக்னத்தை தவிடு பொடியாக்குபவர் விநாயகர், நாரத புராணம் எனும் நூலில் ஒவ்வொரு ராசிக்கும் உரிய விநாயகரின் ரூபத்தை/பெயரை நாரதர் கூறியுள்ளார், அந்த அந்த ராசி பாதகமாக வருபவர் அதன் விக்னத்தை விலக்கும் விநாயகரின் பெயரை கூறி வழிபட்டால் பாதக ஸ்தானத்தின் பலனை எதிர்கொள்ளும் ஆற்றலை பெறலாம்..!

மேஷம்: வக்ரதுண்ட..!
ரிஷபம்: ஏகதந்த..!
மிதுனம்: கிருஷ்ண பிங்காக்ஷா..!
கடகம்: கஜவக்த்ரா..!
சிம்மம்: லம்போதரா..!
கன்னி: விகாதா..!
துலாம்: விக்னராஜா
விருச்சிகம்: தூம்ரவர்ணா..!
தனுசு: பாலச்சந்திரா..!
மகரம்: விநாயகா..!
கும்பம்: கணபதி..!
மீனம்: கஜானனா..!

வழிபடும் முறை: அவரவர் பிறந்த ஹோரையில் தினமும் குறைந்தது 18 முறை கூறி மனதார தடைகள் விலக பிராத்திக்கவும், நல்லதே நடக்கும், அடுத்த பதிவில் சந்திப்போம்..!

1 comment: