Thursday, 11 March 2021

போதாயன அமாவாசை என்றால் என்ன?

போதாயன சூத்ரம்’ என்ற நுாலில் அமாவாசை பற்றி எழுதியவர் போதாயனர் என்ற ரிஷி. இவருக்கும், இவரது சீடரான ஆபஸ்தம்பருக்கும் திதிகளை நிர்ணயம் செய்வதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஆபஸ்தம்பர் குருவிடமிருந்து விலகி தனியாக சூத்ரம் இயற்றினார். இதுவே ஆபஸ்தம்ப சூத்ரம் எனப்பட்டது. இருவர் வழியிலும் வைதிகக் கிரியைகளைச் செய்யும் முறை இன்றளவும் உள்ளது. போதாயனரின் கணக்குப்படி, அமாவாசைக்கு மறுநாள் வரும் பிரதமை திதி, அன்றைய சூரிய அஸ்தமனத்துக்குள் முடிந்து, துவிதியை துவங்கி, வானில் சந்திரப்பிறையும் தெரியும் எனக் கணக்கிட்டால், அமாவாசையின் முதல்நாளான சதுர்த்தசி அன்றே பிதுர்க்கடனை செய்ய வேண்டும் எனக் கூறுகிறார். அதுவே போதாயன அமாவாசை. ஆபஸ்தம்பரின் கணக்குப்படி பிதுர்க்கடன் செய்யும் போது அமாவாசை திதி இருக்க வேண்டும் என்பது கருத்து. இதைப் பின்பற்றுபவர்கள் அமாவாசை திதியிருக்கும் அன்றே பிதுர்க்கடன் செய்கிறார்கள்

No comments:

Post a Comment