Saturday, 10 April 2021

மிளகில்_இருக்கு_சூட்சுமம்



#மிளகில்_இருக்கு_சூட்சுமம்

 ஒரே ஒரு மிளகு போதும்... உண்ணும் உணவு சுவையாக.

இரண்டு மிளகெடுத்து இரண்டொரு ஆடாதோடா இலை சேர்த்தால் இருமல், சளி காணாமல் போகும்.

மூன்று மிளகெடுத்து வெங்காயம் சேர்த்து தலைக்கு தேய்த்தால் கேசம்கூட முசு முசுவென்று வளரும்.

 நான்கு மிளகும், சுக்கும் சிறிது கலந்தால் நெஞ்சுவலி சொல்லாமல் போகும்.

ஐந்து மிளகும் சுக்கும் திப்பிலியும் இணைந்தால் கோழை ஓடியே போகும்.

ஆறு மிளகெடுத்து பெருஞ்சீரகம் (சோம்பு) இடித்து உண்ண, மூலநோய் வந்த சுவடின்றி தானே மறையும்.

ஏழு மிளகை பொடி செய்து நெய் கலந்து அன்னம் பிசைந்து உண்டால் நல்ல பசி எடுக்கும். தொண்டைப்புண்ணும் தொண்டைக்கட்டும் விட்டுப் போகும்.

எட்டு மிளகோடு பெருங்காயம் சேர்த்துக்கொண்டால் வாந்திகூட எட்டி நிற்கும்.

ஒன்பது மிளகும் துளசியும், ஒவ்வாமையை (அலர்ஜி) துரத்தியடிக்கும்.

பத்து மிளகை வாயில் போட்டு கடித்து மென்று விட்டு, பகைவன் வீட்டிலும் பயமேயின்றி விருந்துண்ணலாம்.....நன்றி.

No comments:

Post a Comment