Monday, 12 April 2021

தியானம்.....

ஒரு சித்தர் தவம் செய்து கொண்டு இருப்பார்..அவரை சுற்றி புற்று வளர்ந்து அவரையே மூடிவிடும்..நீண்ட கால தவம் என்பதை அப்படி சினிமாவில் காட்டுவர்.சும்மா இருந்தால் என்ன நடக்கும்.எதையும் நினைக்காமல் மனதை அலைபாய விடாமல் தேங்க வைத்தால் என்ன நடக்கும் என இன்றைய விஞ்ஞானிகள் ஆராய்கிறார்கள்..வியப்பான முடிவு கிடைக்கிறது.

நீங்கள் ஒரு வேலை செய்யும்போது மூளை அது சம்பந்தமான கட்டளைகளை மட்டும் உறுப்புகளுக்கு பிறப்பிக்கிறது.அடுத்து அடுத்து என்ன செய்ய வேண்டுமோ அதை செய்கிறது.ஆனால் சும்மா இருக்கும்போது மூளையும் சும்மாதானே இருக்க வெண்டும்..? ஆனால் அப்படி இருக்கவில்லை.மாறாக மிக பரபரப்பாக இயங்குகிறது.எல்லா செல்களும் பிரகாசமாக இருக்கிறது..

.தினமும் பதினைந்து நிமிடங்களாவது தியானம் செய்ய பழகுங்கள்..மூளையில் உள்ள பல புதிய நூற்றுக்கணக்கான செல்கள் தியானத்தினால் ஊக்குவிக்கப்பட்டு இயங்க ஆரம்பிக்கின்றன. இதனால் அறிவு கூர்மை பெறுகிறது. எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை அதிகரிக்கிறது.

காலையிலோ மாலையிலோ எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.கவலை தரும் விசயங்களையோ சந்தோசமான நிகழ்வுகளையோ நினைக்காமல் நேராக அமர்ந்து கண்ணை மூடி இருந்தாலே போதும்..வடக்கு திசை பார்த்தபடி அமருங்கள்..மூச்சு உள்ளே போவது வருவதை மட்டும் கவனிங்க..போதும்.

No comments:

Post a Comment