Tuesday, 6 April 2021

இம்யூனிட்டிக்கு பெஸ்ட் இஞ்சி: எப்படி பயன்படுத்துவது?

பெரும்பாலான இந்தியர்களின் சமையலறையில் இஞ்சி, முக்கிய மருத்துவப் பொருளாக பங்காற்றி வருகிறது.


நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையான முறையில் மேம்படுத்தி கொள்ள நாம் பெருமளவில் ஈடுபட்டதை மறந்துவிட முடியாது. தற்போதும், கொரோனா வைரஸின் தாக்கம் உச்சத்தில் இருந்து வரும் நிலையில், அதே நிலையே தொடர்கிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துகிறது என்ற ஒற்றை காரணத்தால், பெரும்பாலான இந்தியர்களின் சமையலறையில் இஞ்சி, முக்கிய பங்காற்றி வருகிறது.

இஞ்சியில் 60 வகையான தாதுக்கள், 30 வகையான அமினோ அமிலங்கள், கண்டறியப்படாத 500 வகையான என்சைம்கள் ஆகியவை இஞ்சியை சிறந்த நோய் எதிர்ப்புச் சக்திமிக்க பொருளாக நிலைப்பெற வைத்திருக்கிறது 


இஞ்சி, தொண்டைப் பகுதியில் ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்ய உதவுவதோடு, பதற்றம் மற்றும் தலைவலியை குறைக்கவும், உடலில் தேங்கியுள்ள லாக்டிக் அமிலத்தை இரத்த ஓட்டத்தில் கலக்கச் செய்யவும், தோல் திசுக்களின் மூலமாக வெளியேற செய்யவும் உதவுகிறது. மேலும், சிறந்த பாக்டீரியா எதிர்ப்பு பொருளாகவும், இயற்கை ஒட்டுண்ணிகளை விரட்டவும், உடலில் உள்ள வைட்டமின் பி-12 உற்பத்தியை மேம்படுத்தவும் இஞ்சி உதவி வருகிறது.

இஞ்சியை எளிமையான முறையில், இந்திய முறை சமையலில் பயன்படுத்தி வருகிறோம். குறிப்பாக, வயிறு சம்பந்தப்பட்ட நோய்களை போக்கவும், பதற்றத்தை தளர்த்தவும், ஒரு கப் சூடான இஞ்சி தேநீர் போதுமானது ஆகும்.

1 comment:

  1. இஞ்சி:

    தாவரவியல் பெயர்:Zingiber Officinalis.
    குடும்பப் பெயர்:Zingiberaceae.
    ஆங்கிலப் பெயர்:Green Ginger.
    சமஸ்கிருதம்:Adrakam.
    மலையாளம்:Inji.
    தெலுங்கு:Allamu.
    கன்னடம்:Hashi-Shunti.
    ஹிந்தி:Adrakh.
    வளரியல்பு:சிறு செடி
    இத்தாவரத்தின் புற அமைப்பு:

    மட்டநிலத் தண்டைக்கொண்டு,பல பருவங்களுக்கு வாழும் சிறு செடிகள்.மட்ட நிலத்தண்டிலிருந்து வேற்றிடத்து வேர்கள் தோன்றுகின்றன.தனி இலைகள்."ஸ்பைக் மஞ்சரி" உடையது.

    பயன்படும் பகுதி:கிழங்கு.
    சுவை:கார்ப்பு
    தன்மை:வெப்பம்
    பிரிவு:கார்ப்பு
    தாவர வேதிப் பொருட்கள் :
    "Gingerin" என்னும் ஒலியோரெசினும்.. Phellandrene, Gingerol என்ற நறுமண எண்ணெயும் உள்ளது.

    இஞ்சி−யின் வேறு பெயர்கள் : ஆத்திரகம், நறுமறுப்புமதில்,அல்லம்.

    செய்கைகள் : பசித்தீத்தூண்டி, அகட்டுவாய்வகற்றி, வெப்பமுண்டாக்கி.

    மருத்துவக் குணங்கள்:வாத,பித்த,கப நோய்கள், அஜீரணம்,இருமல்,கண்நோய்,கப நோய்கள்,பொருமல், வாந்தி,நீரிழிவு நோய் ஆகியவை குணமாகும்.

    நோய் தீர்க்கும் முறை:

    1)இஞ்சி முறப்பாவை நாள்தோறும் சாப்பிட்டுவர உடல் கோளாறுகள்,குடல்நோய்,வயிற்றுவலி,வாந்தி, மார்புச்சளி, வயிற்றுப்பொருமல்,இரைப்பு நோய் தீரும்.

    2)இஞ்சியை மென்று உமிழ்நீரைத் துப்ப,வாய்ப்புண், தொண்டைப் புண்,குரல் கம்மல் நீங்கும்.

    3)இஞ்சிச்சாற்றை கற்கண்டுடன் சேர்த்துக் கொடுக்க நீரிழிவு நோய் குணமாகும்.

    4)இஞ்சிச்சாறு, மாதுளம் பழச்சாறு, வகைக்கு..15மி.லி. கலந்து தேவையான தேன் சேர்த்து...10 மி.லி. வீதம் தினமும் 3−வேளைகள் உண்டுவர..இருமல், இரைப்பு, கபநோய்கள் நீங்கும்.

    5)இஞ்சிச்சாறு, சிறுவெங்காயச்சாறு, எலுமிச்சைச்சாறு..இவைகளை சமமாகக் கலந்து, தினமும் காலை, மாலை, 30 கிராம் வீதம் உண்டுவர.. இரைப்பு, இருமல், பித்த நோய்கள் தீரும். உடல் அசதி நீங்கி புத்துணர்ச்சி பெறும்.

    6) இஞ்சியை பால் விட்டு அரைத்து 10 கிராம் எடுத்து, 20 மி.லி. பாலுடன் கலந்து தினமும் 2 வேளைகள் சாப்பிட்டு வர.. மயக்கம், வாதவலிகள், பித்தத்தினால் தோன்றும் நோய்கள், இளைப்பு, அஜீரணம், இருமல் நீங்கும்.


    <> <> <> <> <> <> <> <> <> <> <>


    இஞ்சி லேகியம் :
    ---------------


    தேவையான பொருட்கள் :

    1) சுக்கு − 35கி
    2) மிளகு − "
    3) திப்பிலி − "
    4) சீரகம் − "
    5) ஏலம் − "
    6) வாய்விடங்கம் − "
    7) கிராம்பு − "
    8) தாளிச பத்திரி − "

    9) மேல்தோல் நீக்கிய இஞ்சிச்சாறு − 1.4 லி.
    10) கண்டங்கத்தரி சாறு − "
    11) நெரிஞ்சில் சமூலம் சாறு − "
    12) வெள்ளை முள்ளங்கிச் சாறு − "
    13) எலுமிச்சம் பழச்சாறு − "

    14) பசும்பால் − 2.8 லி.
    15) பனை வெல்லம் − "

    16) தேன் − 350 கி.
    17) நெய் − 700 மி. லி.


    செய்முறை :

    1 − 8 வரையிலான சரக்குகளை சேர்த்து கலந்து,பின்னர்.. எல்லாச் சாறுகளையும், பாலையும் ஒன்றாகக் கலந்து, அதில் பனை வெல்லத்தையும் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.

    தீரும் நோய்கள் :

    வாயு, பித்தம், சூலை, வலிப்பு, பொருமல், வாந்தி, அஜீரணம், பசியின்மை, ருசியின்மை ஆகியன நீங்கும்.

    அளவு :

    6−12 கிராம் வீதம் இரண்டு வேளைக்கு(காலை, மாலை) சாப்பிடலாம்.


    <¢> <¢> <¢> <¢> <¢> <¢> <¢> <¢> <¢> <¢> <¢>


    இஞ்சித் தைலம் :
    −−−−−−−−−−−−−−−


    தேவையான பொருட்கள் :

    1) இஞ்சிச் சாறு : 800 மி.லி.
    2) முசு முசுக்கை சாறு : "
    3) கையாந்த கரைச் சாறு : "
    4) நல்லெண்ணெய் : "
    5) பசும்பால் : "

    6) சந்தனம் : 87.5 கி
    7) மிளகு : "
    8) குங்குமப் பூ : "

    9) வெட்டி வேர் : 17.5 கி.
    10) சாம்பிராணி : 3.5 கி.

    தயாரிக்கும் விதம் :

    இஞ்சிச் சாறு, முசுமுசுக்கைச் சாறு, கையாந்த கரைச் சாறு, நல்லெண்ணெய், பசுவின் பால் இவ்வனைத்தையும் தைலப் பாத்திரத்திலிட்டு, சந்தனக் கட்டையும், மிளகும்.. பசும்பால் விட்டரைத்து, அந்த எண்ணெயில் சேர்த்து.. பதமாகக் காய்ச்சி.. வடிகலத்தினுள்.. குங்குமப் பூ, வெட்டிவேர், சாம்பிராணி, இம்மூன்றையும் பொடித்துத் தூவி...இதில் வடித்தெடுத்தத் தைலத்தை பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.

    உபயோக முறை :

    வெளி உபயோக முறை.

    தீரும் நோய்கள் :

    இத்தைலத்தால் ஸ்நானஞ் செய்ய.. உச்சந்தலை நோய், வாதத்தாலுண்டாகிய தேகக் கடுப்பு, அதிகரித்த காது நோய்கள், முகநோய், கப நோய் போன்ற நோய்கள் குணமாகும்.


    <*><*><*><*><*><*><*><*><*><*><*><*><*>







    ReplyDelete