Wednesday, 14 April 2021

வயலில் பொம்மை எதுக்கு..?

வயலில் பொம்மை எதுக்கு..?

வயலில் நடப்படும் பொம்மை கண் திருஷ்டிக்காகவோ, பறவைகளை விரட்டவோ அல்ல..வயலில் பயிர்கள் நன்கு செழித்து வளர எவ்வளவுதான் தண்னீர் பாய்ச்சி,இயற்கை உரங்கள் போட்டு கண்ணும் கருத்துமாய் பார்த்துக்கொண்டாலும் அவையும் உயிருள்ள குழந்தைகள்தான். ,தன் தாயை போல தன் வயலின் முதலாளியை நினைக்கிறது. விவசாயி நாற்று நட்டது முதல் பயிர் வளர்வது வரை அந்த வயலில் சுற்றிக்கொண்டே இருப்பார் ...அந்த மனித வாடையால்தான் வயலில் விளையும் தாவரத்தில் பச்சையமே உருவாகிறதாம்..

சூழ்நிலை காரணமாக வெளியூர் போகும்போதோ அல்லது அடுத்த வயலில் வேலை செய்யும் போதோ அந்த விவசாயி இல்லாமல் பயிர்கள் சோர்ந்து விடுமாம்...அப்படி ஆகாமல் இருக்க தன் விய்ற்வை படிந்த சட்டையை வேட்டியை ஒரு வைக்கோல் பொம்மையில் சுற்றி காட்டின் நடுவே நட்டுவிட்டால் காற்ரின் மூலம் அவர் துணியில் இருக்கும் வியர்வை பரவி அவர் நடமாடிக்கொண்டிருக்கிறார் என்ற உணர்வை பயிர்களுக்கு தந்து அவைகளுக்கு உற்சாகத்தை கொடுக்குமாம்..

பயிர் நன்கு செழிப்புடன் இருக்குமாம் இதுதான் உண்மை ஒரு முதிய விவசாயி சொன்னது.ஆனால் இப்போது ஏதாவது துணியை சுற்றி பயிருக்கு கண் திருஷ்டி படக்கூடாது என நினைத்து பொம்மை வைக்கிறார்கள் ...பறவை வரக்கூடாதுன்னு நினைச்சு வைக்கிறாங்க..

No comments:

Post a Comment