Saturday, 24 April 2021

பிரம்மஹத்தி தோஷம் தீர்க்கும் பிராகார வலம்....



பிரம்மஹத்தி தோஷம் தீர்க்கும் பிராகார வலம்; நமசிவாய சொல்லி பலிபிடத்தில் நமஸ்காரம்



சிவ வழிபாடு என்பது சிந்தையில் தெளிவைத் தரும். ஞானத்தையும் யோகத்தையும் தந்தருளும் என்கிறது சிவ புராணம். சிவ வழிபாட்டை பூர்த்தி செய்யும் விதமாக மூன்று முறை பிராகார வலம் வந்து வேண்டிக்கொண்டால், நினைத்த காரியங்கள் அனைத்தும் ஈடேற்றித் தருவார் சிவபெருமான். ஞானமும் யோகமும் கிடைக்கப் பெறலாம்.



சோம வாரம் என்று சொல்லப்படும் திங்கட்கிழமை சிவபெருமான் குடிகொண்டிருக்கும் தலங்களுக்குச் சென்று தரிசிப்பதும் வழிபடுவதும் மிகுந்த பலன்களைத் தந்தருளக் கூடியவை. சித்தமெல்லாம் சிவமயம் என்பார்கள் சிவனடியார்கள். முக்தி கிடைக்க, சிவமே கதியென்பார்கள். மாத சிவராத்திரியில், சிவ வழிபாடு செய்யலாம். நமசிவாய மந்திரம் சொல்லி சிவலிங்கத் திருமேனியை தரிசித்துப் பிரார்த்தனை செய்வது, பீடைகளை விலக்கும்; தரித்திரத்தைப் போக்கும். இல்லத்தில் நல்ல அதிர்வுகளை உண்டுபண்ணும்.

அதேபோல், சிவ வழிபாட்டில் பிரதோஷம் என்பதும் மிக மிக முக்கியமானது. திரயோதசி திதியில் வருகின்ற பிரதோஷத்தன்று சிவனாருக்கும் நந்திதேவருக்கும் பதினாறு வகையான அபிஷேகங்கள் நடைபெறும். இந்த அபிஷேக ஆராதனையைக் கண்ணாரத் தரிசிப்பதே மகா புண்ணியம் என்பார்கள்.

சிவாலயங்களில் பாடல் பெற்ற திருத்தலங்கள் என உண்டு. 274 பாடல் பெற்ற திருத்தலங்கள் உள்ளன என விவரிக்கிறார்கள் சிவாச்சார்யர்கள். அதேபோல், வைப்புத்தலங்கள் என்று இருக்கின்றன. அதாவது அந்த ஆலயத்துக்கு நால்வர்கள் நேரடியாக வராமல், வேறொரு ஆலயத்தில் இருந்தபடியே அந்தத் தலம் குறித்தும் பாடியுள்ளனர். இதனை வைப்புத்தலங்கள் என்று போற்றுகின்றனர்.

பாடல் பெற்ற தலங்கள், வைப்புத் தலங்கள் என்பவற்றுடன் இந்த இரண்டுமில்லாத ஆலயங்களும் ஏராளமாக இருக்கின்றன. எந்த சிவாலயமாக இருந்தாலும் நாம் எத்தனை முறை பிராகார வலம் வருகிறோம் என்பதைக் கொண்டு அவற்றுக்கான பலன்கள் உள்ளன என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சிவன் கோயிலுக்குச் சென்று பிள்ளையார் தொடங்கி வழிபடுவோம். சிவனாரையும் கோஷ்ட தெய்வங்களையும் வழிபடுவோம். அம்பாளை தரிசிப்போம். இதன்பின்னர், பிராகார வலம் வந்து, கொடிமரம், பலி பீடம் இருக்குமிடத்தில் நமஸ்கரிக்க வேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சிவ வழிபாட்டை பூர்த்தி செய்யும் விதமாக மூன்று முறை பிராகார வலம் வந்து வேண்டிக்கொண்டால், நினைத்த காரியங்கள் அனைத்தும் ஈடேற்றித் தருவார் சிவபெருமான். ஞானமும் யோகமும் கிடைக்கப் பெறலாம்.

ஐந்து முறை பிராகார வலம் வந்து சிவனாரை நமஸ்கரித்து வேண்டிக்கொண்டால், எடுத்த காரியத்திலெல்லாம் வெற்றிக் கிடைக்கப் பெறலாம். காரியத்தடைகள் அனைத்தும் அகலும். ஏழு முறை பிராகாரத்தை வலம் வந்து கொடிமரத்துக்கு அருகில், பலிபீடத்துக்கு அருகில் நமஸ்கரித்து வேண்டிக்கொண்டால், நற்குணங்கள் கொண்ட வாழ்க்கைத் துணை அமைவார்கள். நல்ல வித்துகளாக வாரிசுகள் இருப்பார்கள். தோஷங்கள் அனைத்தும் விலகிவிடும் என்கிறார் பாஸ்கர குருக்கள்.

ஒன்பது முறை பிராகார வலம் வந்து வேண்டிக்கொண்டால், சந்தான பாக்கியம் கிடைக்கும். சந்ததி, வாழையடி வாழையென செழிக்கும். வளமுடனும் நலமுடனும் வாழச் செய்வார் ஈசன்.

11 முறை பிராகார வலம் வந்து பிரார்த்தனை செய்தால், நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழலாம். சகல சம்பத்துகளுடன் வாழ அருளுவார் தென்னாடுடைய சிவனார்.

பதிமூன்று முறை பிராகார வலம் வந்து நமஸ்கரித்து பிரார்த்தனை செய்தால், குடும்பத்தில் மூதாதையர்களுக்கு இருந்த குலதெய்வ தோஷம், பித்ரு தோஷம் முதலானவையெல்லாம் நீங்கிவிடும்.

பதினைந்து முறை வலம் வந்து நமஸ்கரித்து சிவபெருமானை வேண்டிக்கொண்டால், அசையும் சொத்துக்களும் அசையாச் சொத்துகளும் கிடைக்கப் பெற்று, கடன் தொல்லையில் இருந்து மீண்டு வாழலாம்.

பதினேழு முறை பிராகார வலம் வந்து வேண்டிக்கொண்டால், செல்வம் பெருகும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். மூன்று தலைமுறைக்கான சொத்துகள் சேரும். வம்சம் தழைத்தோங்கும் என்பது உறுதி.

108 முறை பிராகார வலம் வந்தால், பிரம்மஹத்தி முதலான சகல தோஷங்கள் அனைத்தும் விலகும் என்றும் ஆயிரத்து எட்டு முறை பிராகார வலம் வந்து பிரார்த்தனை செய்து நமஸ்கரித்தால், இந்த இப்பிறவிலும் ஏழ் பிறவியிலும் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கப் பெறலாம் என்றும் முக்தி நிச்சயம் .



3 comments:

  1. அய்யா..வெ.சாமி..அவர்களுக்கு.. நமஸ்காரம்.

    வைப்புத்தலம் : 255..வைப்புத் தலங்கள் உள்ளன. (அபிதாம சிந்தாமணியீல் 246− வைப்புத் தலங்கள் காணப்படுகின்றன. (1982 புது தில்லியில் புதுப்பிக்கப் பெற்றது)

    வைப்புத் தலங்களை எண்ணும்போது சிலர் பரிதிநியமம், கொடுமுடி போன்ற பிற தலங்களையும் எண்ணியுள்ளனர். அவை பாடல் பெற்ற தலங்கள்.

    வைப்புத் தலம் என்பது....

    ஒரு தலத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனைப் போற்றிப் பாடும்பொழுது... அதே திருப்பாட்டில் வேறொரு தலத்தில் உறையும் பிரானையும் சேர்த்துப் பாடும் மரபு உண்டு. அத்தலமே வைப்புத்தலம் எனப்படும்...அய்யா.

    திருஞான சம்பந்தர் பாடிய தலங்கள்...
    அத்துங்குடி,அத்தி,அமுதனூர்,அறப்பள்ளி, ஆழைப்பள்ளி,இடைப்பள்ளி,உஜ்ஜைனி,காட்டூர்,காற்றூர்,கிழையம்,கிள்ளிகுடி,கீழையில்,குடப்பாக்கில்,குணவாயில்,குத்தங்குடி,குருத்தங்குடி,குன்றியூர்,கூரூர்,
    சடைமுடி,சிறப்பள்ளி,செங்குன்றூர்,
    சேலூர்,தக்களூர்,திருவண்குடி,
    திருஆலந்துறை,திருநற்குன்றம்,நெடுவாயில்,பூழியூர்,பேரூர்,போற்றூர்,மத்தங்குடி,மாண்டீச்சுரம்,மாத்தூர்,மாயூரம்,
    வஞ்சி,வடமாகறல்,வரந்தை,வழுவூர்,வாதவூர்,வாரணாசி,வெள்ளாறு.

    ReplyDelete
  2. சுந்தரரின் தலம் :

    அளப்பூர்,அழைப்பள்ளி,அறைமேற்றளி,
    ஆழியூர்,இளையான்குடி,ஈசனூர்எங்களூர்,ஏறனூர்,கச்சையூர்,கஞ்சாறு,கடங்களூர்,
    கருகல்குரல்,கருப்பூர்,களந்தை,காட்டூர்,
    காவம்,காரிக்கரை,குடப்பாக்கில்,குண்டையூர்,குயில் ஆலந்துறை,குரங்குத்தளி,குருக் கேந்திரம்,குன்றையூர்,கூறனூர்,கைம்மை,கொண்டல்,கொழுநல்,கோட்டுக்காகோணம்,கோர்த்திட்டை,தகடூர்,தஞ்சாக்கை,தஞ்சை,தண்டங்குறை,தண்டத்தோட்டம்,தாழையூர்,திங்களூர்,திருமலை,திருஆதிரையான்பட்டி
    னம்,தெள்ளாறு,தென்னூர்,தேங்கூர், தேசனூர்,தேறனூர்,நங்களூர்,நம்பனூர்,
    நாங்கூர்,நலனூர்,நாலாறு,நாற்றானம், நிறையனூர்,நின்றவூர்,நீலமலை,நெடுவாயில்,படம்பாக்கம்,பட்டி,பரப்பள்ளி,பாசனூர்,பாட்டூர்,பாதாளம்,புரிசை,பூங்கூர்,
    பூந்துறை,பேரூர்,பொன்னூர்,மாகோதை,
    மறையனூர்,மாகாளேச்சரம்,மாகோணம்,மாறன்பாடி,பீறைக்காடு,மிழலை,முதல் வனூர்,முந்தையூர்,மூவலூர்,வடபேறூர்,
    வரிஞ்ஞை,விடங்களூர்,வெள்ளாறு,
    வேங்கூர்,வேலனூர்,வேளார்நாட்டு வேளூர்..ஆகும்.

    ReplyDelete
  3. நாவுக்கரசர் தலம்...!

    அகதீச்சுரம், அக்கீச்சுரம், அண்ணல் வாயில், அசோகந்தி, அத்தமனமாலை, அத்தீச்சுரம், அயனீச்சுரம், அரணநல்லூர்,
    அரிச்சந்திரம், அளப்பூர், அழைப்பள்ளி, ஆடகேச்சுரம், ஆழியூர், ஆழைப்பள்ளி, ஆன்பட்டி, இடவை, இடைக்குளம், இடைத்தானம், இராப்பட்டீச்சுரம், இளங்கோயில்,இளமர், இறைக்காடு, இரும்புதல் ஆவூர்க் கூற்றம், இறையான் சேரி, உஞ்சேனைமாகாளம், உஜ்ஜைனி, உஜ்ஜை மாகாளம், உண்ணீர், உதய மாலை, உருத்திரகோடி, ஊற்றத்தூர், எச்சில் இளமர், எழுமூர், எமநல்லூர், ஏமகூடமலை, ஏமப்பேரூர், ஏயீச்சரம், ஏர், ஏமூர், ஓரேடகம், கச்சிப்பலதாளி, கச்சிமயானம்,கஞ்சாறு, கடம்பை இளங்கோயில், கடைக்குடி, கண்ணை, கந்தமாதனமாலை, கரபுரம், கருந்திட்டைக் குடி, கருமாரி, கழுநீர்க்குன்றம், காம்பீலீ, காளிங்கம், காறை, குக்குடேச்சரம், குணவாயில், குமரி, குன்றியூர், கூந்தலூர், கூழையூர், கொங்கணம், கொங்கு, கொடுங்கோளூர், கொண்டல், கொல்லிமலை, கோட்டுக்கா, கோர்த் திட்டை, சாணக்குடி, சித்தவடம், சிவப் பள்ளி, செந்தில், செம்மங்குடி, சேற்றூர், சையமலை, சோமேசம், ஞாழல்கோயில், தக்களூர், தஞ்சை, தஞ்சை தனிக்குளம், திருத்தவத்துறை (லால்குடி), தவப்பள்ளி, தளிச்சாத்தங்குடி, தீண்டீச்சுரம், திரிபுராந் தகம், திருக்குளம், திருவேட்டி, துடையூர், தெள்ளாறு, தென்களக்குடி, தேரூர், தேவனூர், தேவன்குடி, தேவீச்சரம், தேனூர், தோமூர், நந்திகேசுவரம், நல்லக்குடி, நல்லாற்றூர், நாகளேச்சரம், நியமல்லூர், நியமம், நிறைக்காடு, நெடுவாயில், நெய்தல்வாயில், பட்டி, பரப்பள்ளி, பழையாறு, பாதாளம், பாவநாசம்(பொதியமலை), பாற்குளம், பிடிவூர், பிரம்பில், பிறையனூர், புதுக்குடி, புரிச்சந்திரம், புலிவலம், திரிபுவனம், புற்குடி, பூங்கூர், பூந்துறை, பெருந்துறை, பெருரூர், பேராவூர், பேரூர், பேறனூர், பொய்கைநல்லூர், பொருப்பள்ளி, மகேந்திரமலை, மகாமேரு, மணற்கால், மக்கீச்சுரம், மணீக்கோயில், மணிமுத்தம், மந்தாரம், மாகாளம், மாகாளேச்சரம், மாகுடி, மாதானம், மாந்தி, மாரிபம், மாவூர், மூவலூர், மூழையூர், மொக்கணி, வழுவூர், வளவி, வளைகுளம், வன்னி, வாரணாசி, விடைவாய்க்குடி, வீந்தமாமலை, விவீச்சுரம், விராடபுரம், விளத்தூர், விளைத்தொட்டி, வெகுளீச்சரம், வெள்ளாறு, வேங்கூர், வேதம், வேதீச்சுரம்..ஆகும்.

    ReplyDelete