Wednesday, 12 May 2021

பொன் மொழிகள்

Ponmozhigal

* துன்பங்களை பலர் பொறுத்து கொள்கின்றனர். ஆனால், அவமதிப்பை சகிப்பவர்கள் வெகு சிலர் தான்.
—தாமஸ்.

* தவறுகளை ஒப்புக் கொள்ளும் தைரியமும், அதை திருத்திக் கொள்வதற்கான பலனும் தான் வெற்றிக்கான வழி. —லெனின்.

* பிறருடைய அன்புக்கு பாத்திரமாவதை விட பிறரது நம்பிக்கைக்கு பாத்திரமாவது பன்மடங்கு மேல்.
—டொனால்டு.

* வற்றி போனால்தான், கிணற்றின் அருமை தெரியும். —பிராங்க்ளின்.

* தொழில் இல்லாத கல்வி, நீரின்றி வாடும் தாவரத்தைப் போன்றது. — போவீ.

* வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை. அதேபோல வாழ்வில், உயர்வும் ஒரே நாளில் கிட்டி விடாது.
—அரிஸ்டாட்டில்.

* உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் இருக்கும்; உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்வு இருக்கும். —சாக்ரடீஸ்.

* உற்சாகம் இல்லாத உள்ளங்களுக்கு சோம்பல் சரணாலயம்; மூடர்களுக்கு அது ஓய்வு நாள். —செஸ்டர்பீல்டு.

* பிறரை விட தான் புத்திசாலி என்று ஜம்பம் பேசுபவன் எளிதில் பிறரிடம் ஏமாந்து போவான். —ஈசாப்.

* கடமை உணர்வே உன் நேர்மையான வாழ்க்கைக்கு ஆதாரம். —ஹென்றி.

No comments:

Post a Comment