Wednesday, 12 May 2021

சங்குப் பூ எனப்படும் காக்கட்டான்மலர் ...

 இதன் வேரிலிருந்து விதைகள் வரை இந்தத் தாவரம் முழுவதும் பல மருத்துவ பலன்கள் நிறைந்துள்ளன. 
இலையை மஞ்சளுடன் பயன்படுத்தினால் கட்டி, வீக்கம் கரைக்கும். வேருடன் மிளகு சேர்த்து கொதிக்க வைத்து கசாயம் செய்து காலை  மாலை அருந்திவர சளி கோழை நீங்கும். 
ஆனால் இவற்றைப் பக்குவத்துடன் பயன்படுத்த வேண்டியுள்ளதால் உட்கொள்ளும்  முன்னர் மருத்துவரின் ஆலோனைப் பெற வேண்டியது மிகவும் அவசியம்.
 
பெண் உறுப்புபோல் தோன்றும் இம்மலர் பெண்களின் கர்ப்பப்பைத் தொடர்பான மாதவிடாய் சிக்கல்கள், குழந்தையின்மைச் சிக்கல்கள் மற்றும் சிறுநீர் தொற்றுகளைச் சரி செய்யக்கூடியது எனவும் சில மருத்துவக் குறிப்புகள் கூறுகின்றன. இம்மலர்கள் மனசோர்வு, மனக்கவலை, உடலில் உள்ள அமிலத்தன்மை ஆகியவற்றை நீக்கவல்லது. சங்குப்பூவில் ஆண்டி ஆக்சிடன்ட்  (Antioxidant) நிறைந்துள்ளதால் இது நம் உடலில் உள்ள உயிரணுக்கள் சேதமைடவைதைப் பெருமளவு தடுத்து நம்மை ஆரோக்கியமுடன் இருக்கச்செய்வதுடன் நம் சருமம் இளைமையுடன் தோன்றவும் உதவுகிறது. மூச்சுத் திணறல், இருதய சம்பந்தமான நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.
 
தாய்லாந்து, சீனா உட்பட பல ஆசிய நாடுகளின் நட்சத்திர உணவகங்களில் ராயல் உணவுவகைகளில் இந்த மலர் சேர்க்கப்படுகிறது. தாய்லாந்தில் அஞ்சான் மலர் என்றும் ஆங்கிலத்தில் பட்டர்ஃபளை பீ ஃப்ளவர் (Butterfly Pea Flower)  என்று அழைக்கப்படுகின்றன. 
 

அது என்ன புளூ டீ னு கேக்குறீங்களா? அதைச் செய்யறது மிகவும் சுலபம்!. ஒரு டம்ளர் சுடு நீரில் 5 நீல நிற உலர்ந்த  மலர்களைப் போட்டு 10 நிமிடம் ஊறவைத்தால் புளூ டீ ரெடி!! இதனுடன் தேன் கலந்து குடிக்கலாம்.

No comments:

Post a Comment