Tuesday, 1 June 2021

ஆக்சிஜனை அதிகரிக்கும் உணவுகள்!

நம் உடலில் ஆக்சிஜன் அளவை அதிகமாக ஈர்த்துக் கொள்ளக் கூடிய உணவுகளை, 'ஆக்சிஜன் ரேடிகல் அப்சார்ப் கெப்பாசிட்டி' எனப்படும், ஓ.ஆர்.ஏ.சி., மதிப்பை வைத்து கண்டுபிடிப்பர். இதில், குறிப்பிட்ட உணவை பரிசோதனை கூடத்தில் வைத்து, ஆராய்ச்சி செய்யப்படும். ஓ.ஆர்.ஏ.சி., அதிகம் உள்ள உணவை, நாம் அன்றாடம் சாப்பிடும் போது, நம் உடலில் ஆக்சிஜன் அளவை சீராக நிர்வகிக்க முடியும்; ஆக்சிஜன் அளவும் அதிகரிக்கும்.

ஆக்சிஜனை கிரகிக்கும் தன்மை அதிகம் உள்ள மசாலா பொருள் கிராம்பு. 100 கிராம் கிராம்பை பரிசோதித்ததில், அதில் மூன்று லட்சம் ஓ.ஆர்.ஏ.சி., மதிப்பு உள்ளது தெரிந்தது. இதை மசாலா குழம்பு, தக்காளி சாதம், பிரியாணி என்று அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தினமும் ஒரு கிராம்பாவது நம் உடலுக்கு அவசியம்.

அடுத்து, மஞ்சளில் ஒரு லட்சத்து 2,700 ஓ.ஆர்.ஏ.சி., உள்ளது. மஞ்சளை தேனீரில் சிறிது சேர்த்துக் கொள்ளலாம். மஞ்சள், மிளகு சேர்த்து பால் குடிக்கலாம். சமையல் அனைத்திலும் தவறாமல் மஞ்சள் சேர்க்கலாம். நோய் எதிர்ப்பு சக்தியை தரும்; ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும்.

அடுத்து, பட்டை. இதை பொடி செய்து டீயில் சேர்த்துக் கொள்ளலாம். சமையலில் எதில் எல்லாம் சேர்க்க முடியுமோ, அவற்றில் எல்லாம் சேர்க்கலாம். கறிவேப்பிலை, சீரகம், சோம்பு, இஞ்சி, பூண்டு இவற்றிலும் ஆக்சிஜனை ஈர்க்கும் தன்மை அதிகம். கறிவேப்பிலையை ஒதுக்காமல் மென்று சாப்பிட பழக வேண்டும்.

துளசி செடியை சுற்றி வரும் போது துாய்மையான ஆக்சிஜன் கிடைக்கும். 10 இலைகளைப் பறித்து, சுத்தமாக கழுவிய பின், மென்று சாப்பிடலாம். நம் முன்னோர்கள் செய்வதில் நிச்சயம் அர்த்தம் இருக்கும். துளசிக்கு இதனால் தான் அத்தனை முக்கியத்துவம் கொடுத்தனர்.

இது தவிர, எலுமிச்சையை சாறு பிழிந்து குடிக்காமல், முழு பழத்தை வெட்டி, அப்படியே நீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி குடிக்க வேண்டும். பட்டாணி, பீன்ஸ், சோயா, கொண்டைக் கடலை, காராமணி ஆகியவற்றில் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தும், 'லெகாமா குளோபின்' என்ற கூட்டு வேதிப்பொருள் உள்ளது.

இவை புரதம், இரும்பு சத்து அதிகம் உள்ளவை. இரும்பு சத்து குறைபாடு இருந்தால், ஆக்சிஜன் குறைய வாய்ப்பு உள்ளது. ரத்தத்தில் உள்ள இரும்பும், புரதமும் சேர்ந்த ஹீமோகுளோபின், ஒவ்வொரு செல்லுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்லக் கூடியது.
பசலை கீரை, முருங்கை கீரை, தர்பூசணி, அவித்த வேர்க்கடலை, அன்னாசி உட்பட, இந்த சீசனில் கிடைக்கும் இரும்பு சத்து அதிகம் உள்ளவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது, ஆக்சிஜன் அளவை அதிகரிக்க உதவும்.

No comments:

Post a Comment