Saturday, 12 June 2021
எதற்காக சாவு வீட்டில் சமைக்க கூடாது என்கிறார்கள்? மீறி சமைத்தால் என்ன விபரீதம் ஏற்படும்.
பொதுவாக இந்த உலகிலில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் மரணித்த ஆக வேண்டும் என்பது விதிக்கப்பட்ட விதியாகும். இதிலிருந்து எவராலும் தப்ப இயலாது. மனிதர்கள் மட்டுமல்ல, அணைத்து ஜீவராசிகளுக்கும் இது பொதுவானது.நமது இந்து மத சடங்குகளில் இந்த இறுதி சடங்கும் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதிலும் இறந்தவரின் வீடுகளுக்கு தீட்டு என்று ஒரு விஷயம் கடைபிடிக்கப்படும். அதாவது தீட்டு என்று சொல்லப்படும் நாட்களில் அவர்களது வீடுகளில் உணவு உண்ணவோ இல்லை நீர் அருந்தவோ மாட்டார்கள்.இது எதற்காக கடைபிடிக்கப்பட்டது என்றால், இறந்த உடலில் இருந்து வெளிப்படும் சில நுண்ணுயிர் கிருமிகள் அதிகபட்சமாக 16 நாட்கள் வரையில் உயிர் வாழக்கூடியது. அந்த தீட்டு நாட்களில் இறந்தவர் வீடுகளில் சமைக்க மாட்டார்கள். 16 நாட்கள் கழிந்து வீடுகளுக்கு சுண்ணாம்பு பூசி, படைத்த பின்னர் தான் அவர்கள் சமைக்க தொடங்குவார்கள்.இப்படி செயும்போது கிருமிகள் அழிந்து சுத்தமான சூழ்நிலை உருவாகும். அதனால் தான் இறந்தவர்களின் வீடுகளில் சமைக்க மாட்டார்கள். அருகில் இருக்கும் உறவினர்களின் வீடுகளிலோ கடைகளிலோ வாங்கி உண்ணுவார்கள்.
No comments:
Post a Comment