Monday, 21 June 2021

ஒரு நாயகமாய் - பாசுரம்

ஒரு நாயகமாய் - 
பாசுரம்:
ஒருநா யகமாய் ஓடவுலகுட னாண்டவர்,
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்,
பெருநா டுகாண இம்மையிலே பிச்சை தாம்கொள்வர்,
திருநா ரணன்தாள் காலம் பெறச்சிந் தித்துய்ம்மினோ.









Translation:

Once he ruled the world as one sovereign
Soon the masses behold him seeking offerings
Bitten by stray-dogs 'n holding broken urns.
So rush to mull the feet of Thirunaranan!




பதம் பிரித்தது:

ஒரு நாயகமாய் ஓட உலகுடன் ஆண்டவர்
கரு நாய் கவர்ந்த காலர், சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்.
திரு நாரணன் தாள் காலம்பெறச் சிந்தித்து உய்ம்மினோ.

பொழிப்புரை:

பூமண்டலம் முழுமைக்கும் அத்விதீயப்ரபுவாய் வெகுகாலமளவும் உலகங்களை யெல்லாம் அரசாட்சி புரிந்தவர்கள் (ஒரு காலவிசேஷத்திலே தரித்ரர்களாகி) கரிய நாய்களால் கவ்வப்பட்ட கால்களையுடையவராயும் உடைந்த பிச்சைப் பாத்திரத்தையுடைவர்களாயும் ஆகி உலகமெல்லாம் திரண்டுவந்து காணும்படியாக இப்பிறவியிலேயே தாங்களே பிச்சை யெடுப்பர் (செல்வத்தின் தன்மை இத்தகையதாதலால்) திருநாராயணனுடைய திருவடிகளை விரைவாக தியானித்து உஜ்ஜூவியுங்கோள்

No comments:

Post a Comment