Sunday, 20 June 2021

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே.
தாலாட்டு பாடும் அன்னையின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே.

தகப்பனின் கண்ணீரை
கண்டோரில்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

என்னுயிர் அணுவில்
வரும் உன்னுயிர் அல்லவா.
மண்ணில் வந்த நான்
உன் நகல் அல்லவா.
காலங்கள் கண்ட பின்னே
உன்னை கண்டேன்

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே.
தாலாட்டு பாடும் அன்னையின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே.

கண்டிப்பிலும் தண்டிப்பிலும்
கொதித்திடும் உன் முகம்.
காய்ச்சல் வந்து படுக்கையில்
துடிப்பதும் உன் முகம்.

அம்பாரியாய் ஏற்றிக்கொண்டு
அன்று சென்ற ஊர்வலம்.
தகப்பனின் அணைப்பிலே
கிடந்ததும் ஓர் சுகம்.

வளர்ந்தவுமே யாவரும்
தீவாய் போகிறோம்.
தந்தை அவனின் பாசத்தை
எங்கே காண்கிறோம்.

நமக்கெனவே
வந்த நண்பன் தந்தை.

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே.
தாலாட்டு பாடும் அன்னையின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே

No comments:

Post a Comment