Sunday, 27 June 2021

ஆண் ராசிகள்,பெண் ராசிகள். .

ஆண் ராசிகள் எல்லாம் கொஞ்சம் முரட்டு ராசிகள் ,முன்கோபம் ,பிடிவாதம் ,
கடும் உழைப்பு ,கம்பீரம் கொண்ட ராசிகளாக இருக்கும்

மேசம்,மிதுனம்,சிம்மம்,துலாம்,தனுசு,கும்பம் இவைகள் ஆண் ராசிகள்..இவற்றில் பெண்கள் பிறந்தால் ஆண்களை போல் துணிச்சல் தைரியத்துடன் செயல்படுவார்கள்.

பெண் ராசியில் ஆண்கள் பிறந்தால் பணிந்தும் ,பொறுமையுடனும் செயல்படுவார்கள் ரிசபம்,கடகம்,கன்னி,விருச்சிகம்,மகரம்,மீனம் பெண் ராசிகள்..பெண் ராசிகளில் பெண்கள் பிறந்தால் அவர்கள் அழகை இன்னும் மெருகூட்டும்...நளினம்,அழகு மேம்படும்.

உதாரணமா மேசம் ராசி ,மேச லக்னத்தில் ஒரு பெண் பிறந்தால் ராசி லக்னம் இரண்டும் ஆணாக இருப்பதால் என்னாகும்..? நெஞ்சுல ஏறி உட்கார்ந்துக்கிட்டு மூஞ்சியில ஓங்கி குத்துறாய்யா அந்த குத்து..எவனாவது காப்பாத்துனானா..? என புருசன் கதற வேண்டியதுதான்..

ஆண் ராசியில் பிறந்த பெண்கள் தைரியம் ,துணிச்சலுடன் வாழ்வில் நிறைய போராடி ஜெயிப்பார்கள்.

கணவன் ஒத்துழைப்பு இல்லாவிட்டாலும் ஒற்றை ஆளாய் பொறுப்பை சுமந்து குடும்பத்தை தூக்கி நிறுத்துவதும் இந்த பெண்கள்தான் !!

No comments:

Post a Comment