Tuesday, 8 June 2021

அன்றாட வாழ்க்கையில் சரம் ஸ்திரம் உபயத்தை பயன்படுத்துவது எப்படி?

அன்றாட வாழ்க்கையில் சரம் ஸ்திரம் உபயத்தை பயன்படுத்துவது எப்படி?

* மேஷம்-  சர ராசி
* ரிஷபம் - ஸ்திர ராசி
* மிதுனம்- உபய ராசி
* கடகம்-  சர ராசி
* சிம்மம்- ஸ்திர ராசி
* கன்னி- உபய ராசி
* துலாம்- சர ராசி
* விருச்சிகம்- ஸ்திர ராசி
* தனுசு- உபய ராசி
* மகரம்- சர ராசி
* கும்பம்- ஸ்திர ராசி
* மீனம்-  உபய ராசி

"சரம்" என்றால் வளர்ச்சி அடைவது.
" ஸ்திரம் " என்றால் நிலையானது.
" உபயம் " என்றால் நிலையற்றது 

தினசரி இதை எப்படி பயன்படுத்துவது:

1.  நாம் கடன் வாங்கும் பொழுது அன்றைய நேரத்தில் லக்னம் சர ராசியில் அமைந்தால், கடன் தொகை மேலும் மேலும் வளரும் அதனால் சர லக்னத்தில் கடன் வாங்க கூடாது.
கடன் வாங்கும் பொழுது உபய லக்னத்தில் வாங்க வேண்டும்.

2. இதே போல் மருத்துவமனைக்கு செல்வது, நகை அடகு வைப்பது, ஒருவருக்கு பணம் தருவது, போன்றவற்றை சர லக்னத்தில் செய்ய கூடாது. உபய லக்னத்தில் தான் செய்ய வேண்டும்.

3. தொழில் தொடங்குவது, கொடுத்த பணத்தை வாங்குவது, இப்படி  வளர்ச்சி அடைய கூடிய விஷயங்களை சர லக்னத்தில் செய்யலாம்.

4. திருமணத்திற்கு முகூர்த்த லக்னம் குறிப்பது, சொந்த வீடு கட்டுவது, சொந்த வீட்டிற்கு குடிபோவது, வீடு நிலம் வாங்குவது ,போன்ற நிலையான விஷயங்களை ஸ்திர லக்னத்தில் செய்யலாம்.

No comments:

Post a Comment