Saturday 12 June 2021

தீர்க சுமங்கலி பவா என்றல் என்ன?

🌼  *தீர்க சுமங்கலி பவா என்றல் என்ன? அறிந்துகொள்ளுங்கள்*

🌼 தீர்க சுமங்கலி பவா.....! 
என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.
🌼 திருமணத்தில் ஒன்று,
🌼 60 வயது ஷஷ்டியப்த பூர்த்தியில் ஒன்று,
🌼 70 வயது பீமரத சாந்தியில் ஒன்று,
🌼 80 வயது சதாபிஷேகத்தில் ஒன்று,
🌼 96 வயது கனகாபிஷேகத்தில் ஒன்று!

🌼 இவைகள் பற்றி ஒரு சிறு விளக்கம். 

🌼 ஷஷ்டியப்த பூர்த்தி, பீம ரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்ற சடங்குகளை நடத்திக்கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை.

🌼 பெரும் பாக்கியமும் பூர்வ புண்ணியமும் செய்தவர்களுக்கே இந்த மணவிழா காணும் பாக்கியம் அமைகிறது.

🌼 இது போன்ற வைபவங்கள் பொதுவாக ஆயுள் விருத்தியைப் பிரதானமாகக் கொண்டே அமைகின்றன.

🌼 சகல தேவர்களையும் மகிழ்விக்கும் பொருட்டு அன்றைக்கே வேத பாராயணங்களும், ஹோமங்களும் நடைபெறுகின்றன.

🌼 உறவு முறைகள் கூடி நின்று குதூகலப்படும் போது, ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியரின் மனம் மகிழும்.

🌼 நமக்கென்று இத்தனை சொந்தங்களா என்கிற சந்தோஷம் அவர்களின் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும்.

🌼 பூமி 360 பாகைகளாகவும் அந்த 360 பாகைகளும் 12 ராசி வீடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

🌼 இந்த 360 பாகைகளையும் கடந்துசென்று ஒரு வட்டப் பாதையை பூர்த்தி செய்வதற்கு 

⚜சூரியனுக்கு ஓர் ஆண்டும்,
⚜செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டும், ⚜சந்திரனுக்கு ஒரு மாதமும்,
⚜புதனுக்கு ஒரு வருடமும்,
⚜வியாழனுக்கு 12 வருடங்களும்,
⚜வெள்ளிக்கு ஒரு வருடமும்,
⚜சனி பகவானுக்கு 30 வருடங்களும், ⚜ராகுவுக்கு ஒன்றரை வருடங்களும், ⚜கேதுவுக்கு ஒன்றரை வருடங்களும், ஆகின்றன.

🌼 இந்த சுழற்சியின் அடிப்படையில் ஒருவர் ஜனித்து, அறுபது வருடங்கள் நிறைவடைந்த தினத்துக்கு அடுத்த தினம், அவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்புகளும் வருடம், மாதம் போன்றவையும் மாறாமல் அப்படியே அமைந்திருக்கும்.

🌼 மிகவும் புனித தினமான அன்றுதான், சம்பந்தபட்டவருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி வைபவம் மிகவும் ஆச்சாரமான முறையில் தெய்வாம்சத்துடன் நிகழ வேண்டும்.

🌼 ஷஷ்டியப்த பூர்த்தி தினத்தன்று வேத பண்டிதர்களின் முன்னிலையில் நிகழ்த்தப்படும்.

🌼 பூஜையின் போது 84 கலசங்களில் தூய நீரை நிரப்பி மந்திரங்களை உச்சரித்து ஹோமங்கள் நடைபெறும்.

🌼 அங்கே உச்சரிக்கப்படும் வேத மந்திரங்களின் சத்தம் மூலம் கலசத்தில் உள்ள நீர் தெய்வீக சக்தி பெற்று, புனிதம் அடைகிறது.

🌼 பின்னர், அந்தக் கலசங்களில் உள்ள நீரைக் கொண்டு ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியினருக்கு அபிஷேகம் நடைபெறும்.

🌼 அபிஷேகத்துக்குப் பயன்படும் இந்த 84 கலசங்கள் எதைக் குறிக்கின்றன?

🌼 தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது என்பதை நாம் அறிவோம்.

🌼 இந்த அறுபது ஆண்டுகளுக்கான தேவதைகளையும், இந்த தேவதைகளின் அதிபதிகளாகிய...

⚜அக்னி,
⚜சூரியன்,
⚜சந்திரன்,
⚜வாயு,
⚜வருணன்,
⚜அஷ்ட திக் பாலகர்கள் பாலாம்பிகை,
⚜அமிர்த கடேஸ்வரர்,
⚜நவநாயகர்கள்..

சேர்த்து குறிப்பதற்காகத்தான் 84 கலசங்கள் என்பது ஐதீகம்.

🌼 பிரபவ முதல் விஷு வரையான 15 ஆண்டுகளுக்கு அக்னி பகவானும்,

🌼 சித்ரபானு முதல் துன்முகி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சூரிய பகவானும்,

🌼 ஹேவிளம்பி முதல் விரோதிகிருது வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சந்திர பகவானும்,

🌼 பரிதாபி முதல் அட்சய வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு வாயு பகவானும்..
அதிபதிகள் ஆவார்கள்.

🌼 தன்னுடைய 60-வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வென்ற மனிதன் 60 வயதில் இருந்துதான், தனது என்ற பற்றையும் துறக்க முயல வேண்டும்.

🌼 தன்னுடைய மகன், மகள், சொந்த பந்தம் என்ற கண்ணோட்டம் மறைந்து உற்றார் உறவினர் அனைவரும் தன் மக்களே…. எல்லோரும் ஒரு குலமே என்கிற எண்ணம் 70 வயது நிறைவில் பூர்த்தி ஆக வேண்டும்.

🌼 தான், தனது என்ற நிலை மறந்து அனைவரையும் ஒன்றாகக் காணும் நிலை பெற்றவர்களே 70-வது நிறைவில் பீஷ்ம ரத சாந்தியைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறார்கள்.

🌼 காமத்தை முற்றிலும் துறந்த நிலையே பீஷ்ம ரத சாந்திக்கான அடிப்படை தகுதியாகும்.

🌼 70-வது வயதில் இருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி உள்ள எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண முயல வேண்டும்.

🌼 ஒவ்வொரு உயிரிலும் உறையும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும்.

🌼 அவனுக்கு ஜாதி, மதம், இன பேதம் எதுவும் இல்லை.

🌼 இப்படி அனைத்திலும் இறைவனை, அனைத்தையும் இறைவனாகக் காணும் நிலையை ஒரு மனிதன் 80 வயதில் பெறும் போதுதான் சதாபிஷேகம் (ஸஹஸ்ர சந்திர தர்ஸன சாந்தி – ஆயிரம் பிறை கண்டவன்) காணும் தகுதியை அவன் அடைகிறார். அப்போது சதாபிஷேகம் செய்துகொள்ள வேண்டும்

🌼 இறையோடு இரண்டரக் கலந்து இறை சிந்தனை கொண்ட தம்பதிகளுக்கு 96 வயதில் கனகாபிஷேகம் செய்து இந்த ஜென்மாவின் ஐந்தாவது மாங்கல்யம் பூட்டி தீர்க்க சுமங்கலி பவா ஆசிக்கு உரியதாக அமைகிறது.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

No comments:

Post a Comment