Monday, 12 July 2021

பிண்ட தானத்திற்கு மிகச்சிறந்த இடமான கயா

பிண்ட தானத்திற்கு மிகச்சிறந்த இடமான கயா

அசுர குலத்தில் தோன்றிய கயாசுரன் கடுமையான தவத்தை மேற் கொண்டபோது தேவலோகமே நடுங்கியது.. 

இதை கண்ட தேவர்கள் பிரம்மனை நாடினர் .பிரம்மதேவர் தேவர்களுடன் சிவபெருமானை நாடினார்கள்.

 சிவபெருமான் அனைவருடன் இணைந்து விஷ்ணுவை நாடினார்கள்.

அவர்களின் பயத்தைப் போக்க பகவான் விஷ்ணு கயா அசுரனிடம் வேண்டிய வரத்தைக் கேள் என நேரடியாகக் கேட்டார்.. 

இதைக் கேட்ட தேவர்கள் நடுங்கிப் போனார்கள்.

இருப்பினும் கயாசுரன் உடனடியாக பகவான் விஷ்ணுவிடம் தேவர்கள் ரிஷிகள் துறவிகளை  காட்டிலும் என் உடல் புனிதமாக போற்றப்பட வேண்டும். 

என்னை தொடுப்பவர்களுக்கு  புனிதம் கிட்ட வேண்டும் என வேண்டினான்.. 

விஷ்ணு பகவானும் அவன்விருப்பத்தை வரமாக அருளினார் .

இதைக் கேட்ட தேவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். கயாசுரன் பின்விளைவுகளை பிற்காலத்தில் உணரத்தொடங்கினர்.

 கயாசுரன் வரத்தை அறிந்த பலர் தங்களது இறுதி காலத்தில் அவனை தரிசித்து சுலபமாக சொர்க்கத்தை அடைந்தனர். 

இதனால் நரக லோகம் முழுவதும் கலைக்கப்பட்டு விடுமோ என்ற கவலையில் யமராஜர் பிரம்ம தேவரை நாடினார் .

நரக லோகம் கலைக்கப்பட்டால் அதில் தனக்கு ஆட்சேபணை இல்லை என்றும். 

அதே சமயத்தில் நரக வேதனையை நினைத்து ஏற்படும் பயமே ஒருவனை நல்வினை பாதைக்கு தூண்டும் என்பதை சிந்திக்க வேண்டும் என யமராஜர் வாதாடினார். 

தீய செயல்களைச் செய்தாலும் கயாசுரன் இந்த தொடர்பினால் கடைந்தேறிவிடலாம்  என்ற தைரியம் ஏற்பட்டுவிட்டதால் இயற்கையின் நீதியே குளறுபடி ஆகிவிடும் என்றும் எமராஜர் தெரிவித்தார்....

எமராஜரின் செய்தியில் உண்மை இருப்பதை உணர்ந்த பிரம்மா அவரை அழைத்துக்கொண்டு பகவான் விஷ்ணுவை நாடினார்.

 பகவான் விஷ்ணுவும் கயாசுரனிடம்  விவரத்தை ஒளிமறைவுயின்றி கூறி ...

ஒரு யாகத்தை நிகழ்த்த அவருக்கு அவனது உடலையே தானமாக கேட்டார்.. 

நல்ல காரியத்திற்கு தன் உடல் பயன்படட்டுமே . ஆனால் அதைக் காட்டிலும் வேறு மகிழ்ச்சி இல்லை என்று கூறிய கயாசுரன் உடனடியாக வேள்விக்காக தன் உடலையே அர்ப்பணித்தான் .

 பிரம்மா தலைமையில் நடைபெற்ற அந்த வேள்வியில் அனைவரும்பங்கெடுத்துக் கொண்டனர்.. 

அத்தருணத்தில் கயாசுரன் உடல் தொடர்ச்சியாக ஆடிக் கொண்டிருந்தது. எவ்வளவு முயற்சி செய்தும் அந்த ஆட்டத்தை தடுக்க முடியவில்லை.. 

அப்போது பகவான் விஷ்ணு தனது கதை மூலமாக கயாசுரன் உடல் ஆட்டத்தை நிறுத்தினார் .

கயாசுரன் உடல் மார்பின்மீது தர்மசீலா என்ற கல்லை வைத்து தம் திருநாமத்தை  வைத்து  கல்மீது அழுத்தினார் விஷ்ணு. கயாசுரன் யாகத்திற்காக உடலை அர்ப்பணித்த இடமே கயா என்று போற்றப்படுகிறது.

 அதற்கு முன் பகவான் விஷ்ணுவிடம் கயாசுரன் எல்லா தெய்வங்களும் தன்னுடைய உடல் மீது உறைய வேண்டும் என்றும். 
இந்த க்ஷேத்திரம் கயா என்ற தன் பெயரால் அழைக்க வேண்டுமென்றும் வரம் கேட்டான்.

 இத்திருத்தலம் சிராத்தம் கொடுப்பவர்கள் பித்ருக்கள் அனைவரும் பிரம்மலோகம் செல்ல வேண்டும் என்றும் வரத்தை கேட்டுப் பெற்றுக்கொண்டான். 

இவ்வாறுதான்​ கயாசுரன் பெற்ற வரத்தினால் மூதாதையர்கள் தன் வம்சத்தில் யாராவது ஒருவர் கயாவுக்கு வந்து தம்மை கரையேற்ற  மாட்டார்களா என ஏங்கிக் காத்திருப்பார்கள் பித்ருக்கள்...

இத்தனை பிரசித்திப்பெற்ற ஷேத்திரம் கயாவுக்கு நம் முன்னோர்களைத் திருப்திப்படுத்த ஒருமுறையேனும் சென்று வருவோம்...
அடியேன்🙏🏻#கிருஷ்ணனின்_சேவகன் #ஸ்ரீராமஜெயம்  🐘

No comments:

Post a Comment