Thursday, 15 July 2021

"☂8"-ன் சிறப்பு

"☂8"-ன் சிறப்பு




*"☂எட்டு"* போடுகிறவனுக்கு *"நோய்"* எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி...!
மனித உடல் அவரவர் கை அளவுக்கு எண்ஜான் அளவுமட்டும் இருக்கும்..

*உங்கள் வீட்டின் உள்ளோயோ அல்லது மாடியிலோ இடம் தேர்வு செய்து, * 6 க்கு 12 அடி அல்லது 8 க்கு 16 அடி அளவில் செவ்வக கோடு இட்டு  அதற்குள் 8 வடிவில் வரைந்து கொள்ளுங்கள்...! 
*"...இது தெற்கு வடக்காக நீளப் பகுதி இருக்கணும்..."*

காலை அல்லது மாலை , வடக்கு நோக்கி நின்று அந்த *8* வடிவ கோட்டின் மேல் உங்கள் நடை பயிற்சியை ஆரம்பியுங்கள்...!

*ஆண்கள் வலது கை பக்கம் பெண்கள் இடது கை பக்கமும் நடக்க ஆரம்பிக்கணும்.*

ஆரம்பித்த இடத்திற்கே வந்த பின் அதே வழியில் தொடர்ந்து *21 நிமிடம்* நடக்கணும் .

பின்பு மறுமுனையில் தெற்கு நோக்கி நின்று  இதேபோல் *21 நிமிடம்* கையை நன்கு விசிறி மிதமான வேகத்தில் 
நடை பயிற்சி செய்யணும்,  *42 நிமிடம்*.

*1.* பயிற்சி தொடங்கிய 
        அன்றே மார்பு சளி
        கரைந்து வெளியேறுவதை    
        காணலாம்.
*2.* இந்த பயிற்சியைஇருவேளை
        செய்துவந்தால், உள்ளங்கை     
        கை விரல்கள்   
        சிவந்திருப்பதை காணலாம். 
        அதாவது ரத்த ஓட்டத்தை 
        சமன்படுத்துகிறது என்று
        அர்த்தம்.
*3.* நிச்சயம் நீரிழவு நோய் 
        (சர்க்கரை வியாதி) குறைந்து 
        முற்றிலும் குணமாகும்.
        (பின்னர் மாத்திரை, 
        மருந்துகள் தேவை இல்லை).
*4.* குளிர்ச்சியினால் ஏற்படும் 
        தலைவலி, மலச்சிக்கல் 
       போன்றவை தீரும்.
*5.* கண் பார்வை அதிகரிக்கும். 
       ஆரம்ப நிலை கண்ணாடி 
       அணிவதை தவிர்க்கலாம்.
*6.* கேட்கும் திறன் அதிகரிக்கும்.
*7.* உடல் சக்தி பெருகும்- ஆதார 
       சக்கரங்கள் சரியாக 
       செயல்படும்.
*8.* குடல் இறக்க நோய் 
       வருவதை தடுக்கும்.
*9.* ரத்த அழுத்தம் நிச்சயமாக 
       கட்டுப்பாட்டில் வரும்.
*10.* பாத வலி, மூட்டுவலி 
          மறையும்.
*11.* சுவாசம் சீராகும் அதனால் 
          உள் உருப்புக்கள் பலம் 
         பெரும்...!

*"8"* வடிவில் நடை பயிற்சி செய்யும் பொழுது நீங்களே உணர்வீர்கள்...!

அந்த வடிவம் "முடிவில்லாதது" மட்டுமல்ல, நமது ஆதார சக்கரங்களை தட்டி எழுப்பி, சம
நிலை படுத்துகிறது என்பதை நமக்கு உடல் பயிற்சியாக சொல்லித்தந்தனர் சித்தர்கள்.

விருப்பம் உள்ளவர்கள், முயற்சி செய்து பலனடையுங்கள்...!  

நோய் இருப்போரும் நோய் இல்லாதோரும் இந்த *8 வடிவ நடை* பயிற்சி செய்யலாம்,

*1வது 21 நாளில் -* சர்க்கரை நோயால் வரும் உள்ளங்கால் எரிச்சல், குதிவாதம், வடகலை நாடி- இடகலை நாடி புத்துயிர் பெரும்...!

*2 வது 21 நாளில் -*
மூட்டு வலி, ஒட்டுக்கால், பிரச்னை குறையும்...!

*3 வது 21 நாளில் -*
தொடை பகுதி பலம் பெரும்...!

*4 வது 21 நாளில் -* ஆண்மை குறைபாடு, விதைப்பை குறைபாடு சர்க்கரை நோய் அளவு, விந்து நாத அணு குறை பாடு, கல்லீரல் மண்ணீரல் குறைபாடு, கர்ப்ப பை குறைபாடு குழந்தை பேறின்மை, மாதநாள் குறைபாடு, ஆண் பெண் இல்லற நாட்டமின்மை நீங்க ஆரம்பிக்கும் ...!

*5 வது 21 நாளில் -* வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் குறையும்...!

*6 வது 21 நாளில் -* இரத்த அழுத்தம், இதய நோய் , ஆஷ்துமா , காசம், நீர் உடம்பு, உடல் அதிக எடை குறைய ஆரம்பிக்கும்...!

*7 வது 21 நாளில் -* தொண்டை பகுதி பிரச்சனைகள், அடிக்கடி கழுத்து பிடிப்பு, முதுகில் வாய் பிடிப்பு வராது...!

*8 வது 21 நாளில் -* அன்னாக்கு பகுதி விழிப்படையும், வாய் கண் காது  கருவிகள் நோய் தன்மை தாக்காது, 2 நாசியிலும் சுவாசம் ஒரே நேரத்தில் ஓடும், மூளைப் பகுதி விழிப்படையும், மூளைப் பகுதி நோய் தீரும்...!

இதை செய்ய வயது வரம்பு இல்லை,  இப்பயிற்சி 
*"வாசி யோக"த்திற்கு இணையானது,* 
இந்த 8 நிலைகளில் உங்களின் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து உயிர்,  மனம் உடல் ஒன்றாகி காலன் தள்ளி நிர்ப்பான்...,
மெளனமாக நடக்கணும் அல்லது ஏதாவது இறை நாமத்தை மனதில் செபித்தவாறு நடக்கணும் , வாய் வழியாக சுவாசம் கூடாது..
.

No comments:

Post a Comment