Friday, 30 July 2021

செவ்வாய் தோஷம் திருமணத்தை தடை செய்யுமா?

செவ்வாய் தோஷம் திருமணத்தை தடை செய்யுமா?

 லக்னத்துக்கு 2, 4, 8, 12  ஆகிய இடங்களில் செவ்வாய் பகவான் இருந்தால் அதனை ஒரு சிலர் செவ்வாய் தோஷ ஜாதகம் என முடிவு செய்கின்றனர்.

1.   கடக லக்னம்சிம்ம லக்னம் ஆகிய இரண்டு லக்னங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எங்கிருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.

2.   செவ்வாய் அமர்ந்துள்ள இரண்டாம் வீடு மிதுனம்கன்னி வீடுகளாய் இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை.

3.   செவ்வாய் அமர்ந்துள்ள 4 ஆம் இடம் மேஷம்விருச்சிக ராசியாக இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை.

 

4.   செவ்வாய் இருக்கும் ஆகிய 7 – ஆம் இடம் கடகம்மகரம் ராசியாக இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை.

 

5.   செவ்வாய் இருக்கும் ஆகிய 8 ம் இடம் தனுசுமீனம் ராசியாக இருந்தால்  செவ்வாய் தோஷம் இல்லை.

 

6.   செவ்வாய் இருக்கும் ஆகிய 12 – ஆம் இடம் ரிஷபம்துலாம் ராசியாக இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை.

 

7.   சிம்மம் அல்லது கும்ப ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை.

 

8.   செவ்வாய் குருவுடன் சேர்ந்தால் தோஷம் இல்லை.

 

9.   செவ்வாய் சந்திரனுடன் சேர்ந்தால் தோஷம் இல்லை.

 

10.  செவ்வாய் புதனுடன் சேர்ந்தால் தோஷம் இல்லைபுதன் பார்த்தாலும் தோஷம் இல்லை.

 

11. செவ்வாய் சூரியனுடன் சேர்ந்தாலும்சூரியன் பார்த்தாலும் தோஷம் இல்லை.

 

12. செவ்வாய் இருக்கும் ராசியின் அதிபதி (கிரகம்லக்னத்துக்கு 1, 4, 5, 7, 9, 10 இவற்றை ஆகிய இடங்களில் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை.

 

13. லக்னத்துக்கு 8, 12 ல் செவ்வாய் உள்ள ராசி மேஷம்சிம்மம்விருச்சிகம்மகரம் ஆகிய ராசியாக இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை.

  14.  செவ்வாய் தனது உச்ச வீடான மகரம்சொந்த வீடான மேஷம்,           விருச்சிகத்தில் இருந்தால் தோஷம் இல்லை.

15. சனிராகு – கேது இவர்களுடன் கூடியாவதுஇந்த கிரகங்களால் பார்க்கப்பட்டாவது  செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை.

16. செவ்வாய் தன் நண்பர்கள் வீடான சூரியன்சந்திரன்குருஇவர்கள் வீட்டில் – அதாவது சிம்மம்கடகம்தனுசுமீனம் ஆகிய ராசிகளில் செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை.

பரிகாரம்

ஆண் – பெண் இருவருக்கும்வள்ளி – தெய்வானையுடன் கூடிய முருகன் சந்நிதியில் திருமணம் செய்ய வேண்டும்அல்லது திருமணம் ஆனவுடன் தம்பதியர் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று விட்டுதிருச்செந்தூர் அல்லது திருத்தணி சென்று முருகப் பெருமானை தரிசித்து வணங்கி வர வேண்டும்செவ்வாய் தோஷம் விலகும்.

No comments:

Post a Comment