Saturday, 3 July 2021

சந்திராஷ்டமம் ஒரு பார்வை

சந்திராஷ்டமம் ஒரு பார்வை 

உடல் மற்றும் மனதின் இயக்கத்தில் கோள்சார சந்திரனால் ஏற்படும் "தற்காலிக" தன்மை மாற்றமே சந்திராஷ்டமம் என்பது பொதுவான கருத்து...

ஜோதிடப்படி, ராசிக்கு 8ல் சந்திரன் சஞ்சரிக்கும் 2 1/2 நாட்கள், இன்னும் துல்லியமாக ஜென்ம நட்சத்திரத்திலிருந்து 16/17 நட்சத்திரங்களில் சந்திரன் சஞ்சரிக்கும் அந்த ஒருநாள், மேலும் துல்லியமாக அந்த ராசியின் ஒரு பாதத்தில் நிகழும் 6 மணி நேரமே (peak of chandrastama) சந்திராஷ்ட காலமாகும்.

"சந்திராஷ்டமம்" எல்லோரையும் பாதிக்குமா என்றால், இல்லை என்பதே நிஜம். காரணம், ஏனைய கிரகங்களின் தொடர்பு பார்வை சிலருக்கு சந்திராஷ்டமத்தால் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. இருப்பினும், சிலருக்கு சந்திராஷ்டம ராசிக்கு (8) முன்/பின் ராசிகளில் (7/9) சந்திரன் வரும்போது பாதிப்பு ஏற்படுகிறது என்பதையும் மறுக்கமுடியாது. காரணம், அடுத்தடுத்த நட்சத்திரங்களுக்குள் ஏற்படும் ஒளித் தொடர்பே இதற்கு காரணம் எனலாம். இது தவிர, சிலரின் ஜென்ம ராசிக்கு 12ம் வீட்டில் சந்திரன் சஞ்சரிக்கும்போது பாதிப்பு வருவதாகச் சொல்வது சந்திராஷ்டமம் அன்று. அதுபோல சிலருக்கு 6ம் வீடுகளில் வரும்போது பாதிப்பு ஏற்படுவதாகக் கூறுவதும் சந்திராஷ்டமம் இல்லை. சிலர் மோசமான தசாபுக்தி காலங்கில் ஏற்படும் சந்திராஷ்டமம் கடுமையாக இருக்கிறது எனக் கூறுவதும் ஆய்வுக்குரியதே!

இதைவிட ஜென்ம சந்திரனுடன் சனி,ராகு,கேது போன்ற பாவ கிரகங்கள் சேர்ந்திருக்கும்போது ஏற்படும் சந்திராஷ்டம பதிப்பு பெரும் மன உளைச்சலைத் தரும் என்பது அடியேனின் நீண்ட நாள் ஆய்வாகும்!

சரி, சந்திரனால் ஏற்படும் இந்த சந்திராஷ்டமத்தால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்?

மேற்சொன்னபடி இது உடல் மற்றும் மனத்தின் இயக்கத்தில் ஏற்படும் தற்காலிக மாற்றமே, அது எவ்வாறெனில் வாதம், க், பித்தத்தில் ஏற்படுத்தும் மாற்றமாகும். அதனால் சிலருக்கு ஒற்றைத் தலைவலி, வாந்தி, மயக்கம், கிருகிருப்பு, தலை சுற்றல், வயிற்றுப்போக்கு, கோபம், தாபம், மோகம், காமம், பயம், குழப்பம் என பல விததங்களில் பாதிப்புகளை உண்டாக்கும். ஆனால் சிலருக்கு மட்டும் சந்திராஷ்டம நாள் மிகச் சிறப்பான நாளாக அமைந்துவிடுகிறது. காரணம், மற்ற நாட்களைவிட அன்றுதான் அவர்கள் அதிக சுறுசுறுப்பாக காணப்படுவர்.

எமது ஆய்வுப்படி நீர் ராசிகளான கடகம், விருச்சிக மற்றும் மீன ராசியினருக்குததான் சந்திராஷடமம் உடல் மற்றும் மனதளவில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதில் சந்திரன் நீசமாகும் விருச்சிக ராசியினரே முதல் தரம். அதற்கடுத்ததாக காலபுருஷனுக்கு பாதக ஸ்தானமாக கும்ப ராசியினருக்கு சந்திரனால் பாதங்கள் ஏற்படுகிறது என்பது ஆய்வுக்குரியது. மற்றடி சந்திராஷ்டம் என்பது தற்காலிமே!

எல்லாம் சரி, இதற்கு பரிகாரம் என்று ஒரு துறை இருக்கிறதல்லவா? வாருங்கள் அதையும் காணலாம். சந்திராஷ்டமத்துக்கு நானுணர்ந்த வகையில் பரிகாரங்களைக் கூறுகிறேன், பாதிப்பு இருப்பதாகச் சொல்பவர்கள் மட்டும் முயற்சி செய்து பாருங்கள், நிச்சயம் பலன் கிடைக்கும்!

பரிகாரங்கள்:−

1. உங்கள் நட்சத்திர விருட்சத்தை தொட்டு, வணங்கி அதனடியில் சிறிது நாழிகை இருந்து பாருங்கள்

3. அன்றைய தினம் காலணியின்றி வெறும் காலில் நடந்து பழகுங்கள்

3. கையில் கல் உப்பை 2 நாழிகை வைத்துக்கொண்டு அமருங்கள், அல்லது குளிக்கும் நீரில் இந்துப்பை கலந்து குளியுங்கள்

4. கடல், ஆறு, குளத்தில் அதிகாலை/இரவு நேரங்களில் (மதியம் தவிர்க்கவும்) குளியுங்கள் அல்லது அதனருகில் அமருங்கள்

5. பொன்னாங்கன்னி கீரை, கரிசலாங்கன்னி கீரை, சோற்றுக்கற்றாழை போன்றவற்றை சமைத்து சாப்பிடுங்கள்

6. சுடுமணலில் வெறும் காலில் நடந்து பழகுங்கள்

7. வெறும் தரையில் விரிப்புகளின்றி படுத்து உறங்குங்கள், ஆண்கள் எனில், வெறும் துண்டு மட்டும் போதும்!

8. உங்களுக்கு மன அமைதியைத் தரும், மிகவும் பிடித்த கோவிலுக்குச் சென்று வாருங்கள்

9. அன்றைய நாளில் கோபம், தாபத்துடன் மற்றவருடன் விவாதம் செய்வதைத் தவிருங்கள் (தவிர்ப்பதும் பரிகாரமே)

10. தலை மற்றும் உடல் முழுக்க தயிர் தேய்த்து குளியுங்கள் அல்லது உணவில் தயிர் சேர்த்துக்கொள்ளுங்கள் (சைனஸ் இருப்பவர்கள் தவிர்க்கலாம்)

11. விநாயகருக்கு உகந்த அருகம்புல் சாற்றை பருகுங்கள், சைனஸ் இருப்பவர்கள் சுடு நீரில் கலந்து பருகலாம்

இப்படியாக உங்களுக்கு ஒத்துவரும் மேற்சொன்ன பரிகாரங்களைச் செய்து சந்திரனால் ஏற்படும் பாதகத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள்

No comments:

Post a Comment