Saturday, 24 July 2021

எந்த விரலில் தங்கம் மோதிரம் அணிவது நல்லது:

தங்க உலோகம் அணிவது ஜோதிட ரீதியாக மட்டுமல்லாமல், ஆன்மிக ரீதியாகவும் நன்மை அளிக்கிறது. அதாவது நேர்மறை சக்திகள், கதிர்களை ஈர்க்கக்கூடிய வல்லமை தங்கத்திற்கு உண்டு. அதனால் தான் நேர்மறை சக்திகள், கதிர்கள் நிறைந்த கோயிலுக்கு செல்லும் போது தங்க நகை அணிந்து செல்வதால், நம் உடலும், உள்ளமும் நேர்மறையான சக்திகள் பெற்றிடலாம்.



ஜோதிடத்தின் படி, ஆள்காட்டி விரலில் தங்க மோதிரம் அணிவது மனம் ஒருநிலைப் படும். மற்றும் ராஜ யோகத்தை அடைய உதவும். மறுபுறம், மோதிர விரலில் தங்க மோதிரம் அணிவது குழந்தைக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

உங்களுக்கு சளி-குளிர் அல்லது சுவாச நோய் இருந்தால், தங்க நகைகளை சிறிய விரலில் அணிய வேண்டும்.

திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை அடைவதில் தங்க நகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. திருமணமான பிறகு, குழந்தை பிறக்கும் வரை வைரத்தை அணிவது திருமண வாழ்க்கைக்கு நல்லதாக கருதப்படுவதில்லை

No comments:

Post a Comment