Sunday, 25 July 2021

இரவு தூங்கும் முன் உப்பை இப்படி செய்து விட்டு தூங்கினால் வீட்டில் நடக்கும் பிரச்சனைகள் அனைத்தும் தீரும்

கல் உப்பு மற்றும் எலுமிச்சை பழத்திற்கு திருஷ்டிகளை நீக்கும் அதீத சக்தி உண்டு. அதனால் தான் இதனை பில்லி, சூனியம், ஏவல் போன்ற கெட்ட காரியத்திற்கு, பூஜை, புனஸ்காரங்கள் என்று நல்ல காரியத்திற்கும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. நாம் வீட்டில் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் அனாவசியமாக போட்டுக் கொண்டிருந்தால் அந்த வீட்டில் நல்ல சக்திகளின் ஆதிக்கம் குறைந்துள்ளது என்பது தான் அர்த்தம். இது போன்ற சமயங்களில் துர் சொப்பனங்கள் வருவது, துர் சம்பவங்கள் நிகழ்வது போன்றவை ஏற்படுவது உண்டு. இதில் இருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள இரவு தூங்கும் பொழுது என்ன செய்ய வேண்டும்? என்பதை தெரிந்துக் கொள்ள தொடர்ந்து பதிவு நோக்கி பயணிப்போம்.




செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அல்லது பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் எலுமிச்சை பழத்தை நிலை வாசலில் இரண்டு பக்கங்களிலும் வைப்பது திருஷ்டி தோஷத்தை போக்கும் அற்புதமான ஒரு பரிகாரமாக இருந்து வருகிறது. எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அதில் குங்குமம் தடவி நிலை வாசலில் இரண்டு பக்கங்களிலும் வைத்து விட வேண்டும். மறுநாள் அதனை கால் படாத இடங்கள் அல்லது செடிகளுக்கு உரமாக போட்டு விடலாம். அதை அப்படியே காய்ந்து கால்களின் மிதிபடுமாறு வைக்கக் கூடாது. இதனால் குடும்பத்தில் தேவையில்லாத சண்டை, சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஒற்றுமையாக இருக்கும் குடும்பத்தில் கூட குழப்பங்கள் உருவாகும். எனவே இதில் கவனம் செலுத்துங்கள்.


வெள்ளிக் கிழமைகளில் கல் உப்பு வாங்குவது அதிர்ஷ்டத்தை தரும், லட்சுமி கடாட்சத்தை உண்டு பண்ணும் என்பார்கள். இதற்காக எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் உப்பு வாங்க வேண்டிய அவசியம் இல்லை! நீங்கள் உப்பு வாங்கும் பொழுது வெள்ளிக் கிழமையாக பார்த்து வாங்கினால் மட்டும் போதும். உப்பு மகாலட்சுமிக்கு இணையானது எனவே அதனை வீணாக்குவது என்பது கூட தோஷத்தை ஏற்படுத்தும்.



நீங்கள் இரவில் தூங்கும் பொழுது உங்களுடைய தலையணைக்கு அடியில் எலுமிச்சை பழத்தை வையுங்கள். இந்த எலுமிச்சை பழம் நீங்கள் கோவில்களில் இருந்து வாங்கி வங்கி வந்த எலுமிச்சைபழம் ஆக இருக்கலாம். கோவிலில் இருந்து வாங்கும் எலுமிச்சை பழத்தை எப்பொழுதும் வீணாக கூடாது. அதனை வீட்டிற்கு வந்தவுடன் ஜூஸ் போட்டு குடித்து விடலாம்.



ஒரு கண்ணாடி டம்ளரில் உங்கள் கைகளால் ஒரு கைப்பிடி அளவிற்கு கல் உப்பை போட்டுக் கொள்ளுங்கள். அதனை அப்படியே நீங்கள் தூங்குவதற்கு முன்பு உங்கள் கட்டிலுக்கு அடியில் உங்கள் தலைக்கு நேராக வையுங்கள். மறுநாள் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக அந்த தண்ணீரை கொண்டு போய் வாஷ் பேசினில் கொட்டி, கண்ணாடி டம்ளரை கழுவி வைத்து விடுங்கள். அல்லது ஓடும் நீர் மற்றும் கால் படாத இடங்களில் ஊற்றி விடுங்கள். இந்த தண்ணீரை எப்பொழுதும் செடிக்கு ஊற்ற கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுக்கு ஏற்பட்டுள்ள தரித்திரம், பீடை, திருஷ்டிகள் அனைத்தும் விலகும் என்பது நியதி.




நீங்கள் குலதெய்வ கோவிலுக்கு செல்பவராக இருந்தால் அங்குள்ள மண் மற்றும் அங்கு கொடுக்கும் எலுமிச்சை பழத்தை சேர்த்து ஒரு பொட்டலமாக கட்டி எடுத்து வந்து விடுங்கள். அதனை எப்பொழுதும் உங்கள் பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள். மறுமுறை நீங்கள் குலதெய்வ கோவிலுக்கு செல்லும் பொழுது அதனை புதியதாக புதுப்பித்துக் கொள்ளலாம். குலதெய்வ கோவிலில் இருந்து எடுத்து வந்து வைக்கப்படும் இந்த பொருட்கள் உங்கள் வீட்டிற்கு மிகச் சிறந்த பாதுகாப்பு அரணாக இருந்து செயல்படும். இதனால் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள் அனைத்தும் நீங்கி ஒற்றுமை பலப்படும்.

No comments:

Post a Comment