கர்ப்பிணிகள் கவனிக்கவும்
இன்று எத்தனை ஸ்பெசலிஸ்ட் டாக்டர் இருக்காங்க..கண் காது மூக்கு நரம்பு எலும்பு என ஒவ்வொரு உறுப்புக்கும் தனி திறமை பெற்றசிறப்பு மருத்துவர் இருக்காங்க..ஒவ்வொரு உறுப்பும் மனித உடலில் மிக முக்கியம்.
இதை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்து ஒவ்வொரு உறுப்பும் பலம் பெற வேண்டும் நலம் பெற வேண்டும் என பிரார்த்தனை செய்யும் பாடல் தமிழில் உள்ளது என்றால் அது கந்த சஷ்டி கவசம்தான்.மற்ற மொழிகளில் இப்படி ஒரு சிறந்த கவச பாடல் இருக்கா என்பது சந்தேகமே.
கர்ப்பிணி வயிற்றில் வளரும் குழந்தை ஒவ்வொரு உறுப்பும் நன்கு முழுமையாக வளர்வது மிக அவசியம். அதற்கு கந்த சஷ்டி கவச பாராயணமே மிக சிறப்பு.
குழந்தை ஆரோக்கியமாக,அறிவாற்றலுடன் பிறக்க தினசரி கந்த சஷ்டி கவசம்,கந்த குரு கவசம் படிக்கவும்..பழங்கள் அதிகம் உண்ணவும் நம்ம ஊர் நாட்டு பழங்கள் மட்டும் எடுத்துக்கொள்ளவும்..
கர்ப்பமான பெண்கள் 2 வது மாதத்தில் இரட்டை பிள்ளையாரை வணங்கவும்..3வது மாதத்தில் சூலம் வரைந்து வணங்கவும் 4 வது மாதத்தில் நாகம் வரைந்து வணங்கவும் 5 வது மாதத்தில் பரமசிவனை பூஜிக்கவும்.6 வது மாதத்தில் ஆறுமுகனையும் 7 வது மாதத்தில் ஏழு வகை அம்மனையும் 8 வது மாதத்தில் விஷ்ணுவையும் 9 வது மாதத்தில் நவகிரகங்களையும் 10 வது மாதத்தில் இஷ்ட தெய்வத்தையும் பூஜிக்கவும் .இதனால் பிறக்கின்ற குழந்தை அறிவு ,அதிர்ஷ்டம்,கொண்டதாக இருக்கும்..!!
No comments:
Post a Comment