Friday, 24 September 2021
கொஞ்சம் சாஸ்திரம் தெரிந்து கொள்வோமா !!
கொஞ்சம் சாஸ்திரம் தெரிந்து கொள்வோமா !!
1. கிழக்கு நோக்கிச் சாப்பிட ஆயுள்வளரும்.
தெற்கு நோக்கிச் சாப்பிட புகழ் உண்டாகும்.
மேற்கு நோக்கிச் சாப்பிட செல்வம் வளரும்.
வடக்கு நோக்கிச் சாப்பிடக் கூடாது
2. பித்ருக்களின் திதியன்று வீட்டில் அன்னதானம் செய்ய முடியாவிட்டால் உணவு விடுதியில் (ஹோட்டல்) பத்துடோக்கன் வாங்கி ஏழைகளிடம் கொடுத்து உண்ணச் செய்யலாம்.
அவர்களிடம் பணமாகக் கொடுக்கக் கூடாது.
3. அன்னத்தால் பிராணனையும் பிராணனால் பலத்தையும் பலத்தால் தவத்தையும் தவத்தால் சிரத்தையையும் சிரத்தையால் புத்தியையும் மனத்தால் சாந்தியால் சித்தத்தையும் சித்தத்தால் நினைவால் ஸ்திதப் பிரக்ஞையால் விஞ்ஞானத்தையும் விஞ்ஞானத்தால் ஆத்மாவையும் பெறுவதால் அன்னத்தைக் கொடுப்பது இவை எல்லாவற்றையும் கொடுத்தாகிறது.
என தைத்தரீயோபநிஷத் கூறுகிறது. எனவே முடிந்த போது முடிந்த அளவிற்கு அன்னதானம் செய்யுங்கள்.
4. அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும்.
ஆயுள் குறையும்.
எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது.
5. பசிக்கும் போது மட்டுமே தான் சாப்பிட வேண்டும்.
6. மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது.
உடலில் உள்ள விஷமும் முறிகிறது.
7. உணவில் சீரகம் (சீர் அகம்) சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது.
8. வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது.
வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது.
9. கடுகு உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது.
10. இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம் தலை சுற்றல் வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை.
11. உணவு உண்பதற்கு முன்பு கை கால் வாய் போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும்.
12. காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும்.
13. உணவு உண்ணும் போது பேசக் கூடாது.
படிக்கக் கூடாது.
இடதுகையை கீழே ஊன்றக் கூடாது
14. வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது.
15. காலணி அணிந்துக் கொண்டு உண்ணக் கூடாது.
16. சூர்ய உதயத்திலும் மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.
17. உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
18. நிலவின் ஒளியில் உண்ணக் கூடாது. பௌர்ணமியில் நிலாச் சாப்பாடு தனியாகச் சாப்பிடக் கூடாது.
பலருடன் சேர்ந்து சாப்பிடலாம்.
19. இருட்டிலோ நிழற்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது.
20. சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது. நின்று கொண்டு சாப்பிடக் கூடாது.
21. அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது.
22. சாப்பிடும் போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது. தட்டை மடியில் வைத்துக் கொண்டும் படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது.
23. இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதும் விரலில் ஒட்டி உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும்;.
24. வெங்கலம் அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது.
25. புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும்.
26. வெள்ளித் தட்டில் மற்றும் வாழை இலையில் சாப்பிட்டால் நல்ல அழகு அறிவு மன ஒருமைப்பாடு குடும்ப ஒற்றுமை கிடைக்கும்.
27. நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவுப் பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது.
28. இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ; ஆகியவற்றை சேர்க்கக் கூடாது.
29. உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ அப்பளமோ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது.
30. அதே போல் முதலில் கீரையோ வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர்.
வாழ்வில் நாம் செய்யக் கூடாதவை:
1. நம்மை விடப் பெரியவர்கள் முன் கால் மேல் கால் போட்டு அமரக் கூடாது.
2. செவ்வாய், வெள்ளி ஆகிய இரு நாட்களிலும் தலைமுடி வெட்டுதல் நகம் வெட்டுதல் சவரம் செய்து கொள்ளுதல் கூடாது.
3. தலைமுடிக்கு மந்திரங்களை எளிதில் கிரகிக்கும் தன்மை உண்டு. தலைமுடியைக் கொண்டு பில்லி சூனிய ஏவல் வைக்கவும் செய்வர். எனவே தலைமுடியையும் நகத்தையும் எக்காரணம் கொண்டும் பிறர் பார்க்கும் படி வெளியில் எறியலாகாது.
4. நான்காம் பிறைச் சந்திரனைப் பார்க்கக் கூடாது.
5. செப்புப் பாத்திரத்தில் பாலை வைக்கக் கூடாது. பால் திரிந்து விடும். அதிக உப்பு அதிக காரம் அதிக இனிப்பு அதிக புளிப்பு சேர்க்கக் கூடாது. காளானைக் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடக் கூடாது.
6. பட்டு வேட்டி மற்றும் புடவைகளை அணிந்துக் கொண்டு வைதீக காரியங்களைச் செய்யக் கூடாது.
7. கர்ப்பிணி பெண்கள் மாலை வேளையில் சாப்பிடக் கூடாது.
8. மருந்து மாத்திரை ஆகியவற்றை முகர்ந்து பார்க்கக் கூடாது.
9. பெருமூச்சு விடுவது மிகப் பெரும் தவறு அதனால் துன்பங்கள் தான் அதிகரிக்கும் பெருமூச்சு விடுபவரின் மூச்சுக் காற்று அருகில் உள்ளவர் மேல் படக் கூடாது. பட்டால் அவருக்கும் கெடுதல் ஏற்படும்.
10. இலவசமாக யாரிடமும் எள் பெறக் கூடாது.
11. நமக்கு ஒருவர் இட்ட உணவைப் பழிக்கக் கூடாது.
12. வீட்டில் எலுமிச்சை மூடியில் விளக்கேற்றக் கூடாது.
13. விளக்கில் அல்லது நெருப்பில் தீப்பற்றிய துணியை மீண்டும் உடுத்திக் கொள்ளக் கூடாது.
14. விளக்கு வைத்த பிறகு தலை வாருதல் முகம் கழுவுதல் பேன் எடுத்தல் போன்றவற்றைச் செய்யக் கூடாது.
15. வெள்ளிக்கிழமை அரிசி புடைப்பது அரிசி வறுப்பது கூடாது.
மிளகாய் வறுப்பது மிளகாய் பொடி அரைப்பது கூடாது.
இதெல்லாம் ஒரு 80 வருடங்களுக்கு முன்பு மிகச் சரியாக கடைபிடித்து வந்தார்கள்.
அதனால் தான் அவர்களின் ஆயுள் 120 வயது வரை திட காத்திரமாக இருந்தது.
ஆனால் இப்போது பல வகையான நோய்கள் சிறுவயதிலேயே தொற்றிக் கொள்கிறது.
முடிந்த வரை வெளி உணவுகளை தவிர்த்து விடுங்கள்.
இப்போது தான் யூடியூப் இருக்கிறதே நீங்களே அழகாக சமைக்கலாமே !!
ஆரோக்கியம் உங்கள் கையில் இருக்கிறது...
அய்யா...வெ.சாமி. அவர்களே...! மிக மிக நல்ல தகவல். இது சாஸ்திரமோ... அய்யா ? அட்வைஸ் இல்லையா.. அப்போ சரி.
ReplyDeleteVery nice ayya.
ReplyDelete