Tuesday 9 November 2021

உயர் இரத்த அழுத்தத்திற்கு ஓமம் தண்ணீர் செய்வது எப்படி?

ஓமம் தண்ணீர் தயாரிக்கும் செயல்முறை மிகவும் எளிதான மற்றும் எளிமையான செயல்முறையாகும்.

ஒரு டீஸ்பூன் உலர்ந்த வறுத்த ஓமம் விதைகளை ஒரு கப் தண்ணீரில் ஒருநாள் இரவு முழுதும் ஊற வைக்கவும்.

மறுநாள் தண்ணீரைக் கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

அவை குளிர்ந்ததும் பருகி மகிழவும். இந்த பானத்தை வெறும் வயிற்றில் எடுத்துகொள்ளவது மிகவும் நல்லது.

6 comments:

  1. அய்யா.. வெ.சாமி. அவர்களே...! ஒமம் + மருத்துவ பயன்கள் அளிக்கிறேன்.

    ReplyDelete
  2. அதற்கு முன்பு.. அம்மான் பச்சரிசி மருத்துவ பயன்கள் அளிக்கிறேன்.

    ReplyDelete
  3. Thu.11, Nov.2021 at 8.17 am.

    சித்த மருத்துவம் :

    சித்த மருத்துவ மூலிகை + அதன் பயன்கள் :

    அம்மான் பச்சரிசி :

    வேறு பெயர்கள் :

    சித்திரப் பாலாடை, எம்மான் பச்சரிசி,பாலாட்டங் கொளை.

    தாவரவியல் பெயர் : Euphorbia Pilurifera.

    குடும்பப் பெயர் : Euphorbiaceae.

    ஆங்கிலப் பெயர் : Australian Sthima Weed.

    தெலுங்கு : Nanabalu.
    சமஸ்கிருதம் : Kshirini.
    மலையாளம் : Nilapala.
    ஹிந்தி : Dudhi.
    கன்னடம் : Akkigida.

    வளரியல்பு : பூண்டு.

    புற அமைப்பு :

    50 செ.மீ உயரம் உள்ளது. இலைகள் எதிரெதிராக அமைந்தவை. சொரசொரப்பானவை. பச்சை, சிவப்பு நிறங்களில் இலைகள் காணப்படும். தாவரத்தின் எப்பகுதியை ஒடித்தாலும் பால் வடியும்.

    .பயன்படும் பகுதி : இலை , பூ.
    சுவை : துவர்ப்பு , இனிப்பு.
    தன்மை : தட்பம்.
    பிரிவு : இனிப்பு.

    தாவர வேதிப் பொருட்கள் :

    இச்செடியில் ஆல்கலாய்டும், நறுமண எண்ணெயும், Latex -ம் உள்ளன.

    செய்கைகள் :

    குளிர்ச்சியுண்டாக்கி, எரு விளக்கி(மலமிளக்கி), துவர்ப்பி.

    மருத்துவ குணங்கள் :

    உடல் வறட்சி,வெட்டை, வாய்ப்புண், வயிற்றுப் புண், மலச்சிக்கல், உடற்சூடு, உடற்சோர்வு, நகச்சுற்று, வயிற்றுப் புழு, தாய்ப்பாலின்மை, ஆண்மைக் குறைவு முதலியன நீங்கும்.

    நோய் தீர்க்கும் முறைகள் :

    1) அம்மான் பச்சரிசி இலையை... நெய், பருப்பு சேர்த்து உணவாக சேர்த்துவர, உடல் வறட்சி, உடற்சூடு, வாய்ப்புண், வயிற்றுப் புண், மலச்சிக்கல் குணமாகும்.

    2) இதன் பாலினை மருக்கள், நகச்சுற்று, காலாணி, முகப்பரு இவைகளில் தடவிவர நீங்கும்.

    3) அம்மான் பச்சரிசி இலையை.. சிறிது நீர் விட்டு அரைத்து 5 கி. வீதம் காலை வேளையில், பசும்பாலுடன் கலந்து கொடுத்துவர, மலச்சிக்கல், சிறுநீர்க்கடுப்பு, வயிற்றுப்புண், உடற் வறட்சி தீரும்.

    ReplyDelete
  4. Thu.11, Nov.2021 at 8.17 am.

    jansi.kannan60@gmail.com

    ReplyDelete
  5. Thu. 11, Nov.2021 at 9.60 am.

    சித்த மருத்துவம் :

    ஓமமும் + பயன்களும் :

    ஓமம் :

    வேறு பெயர்கள் : பிரம தர்ப்பை, உக்கிர கந்தம், அக்கினிவர்த்தனம், தீப்பியகம், அசமதா.

    தாவரவியல் பெயர் :

    Carum Copticum (Old name Carum Roxburghianum.

    குடும்பப் பெயர் : Apiaceae.
    ஆங்கிலப் பெயர் : Aprum Involucreatum.
    தெலுங்கு : Ajamodagam.
    சமஸ்கிருதம் : Ajamoda
    மலையாளம் : Ajamotha Omum.
    ஹிந்தி : Ajwan.
    கன்னடம் : Ajamodu - Omum.

    வளரியல்பு : சிறு கொடி.
    தாவரத்தின் புற அமைப்பு : சிறகு வடிவக் கூட்டிலைகள். தண்டு, இலைகளில் எண்ணெய் சுரப்பிகள் உள்ளதால் நறுமணம் உடையவை. மலர்கள் அம்பல் மஞ்சரியில் கிளைகளின் நுனியில் காணப்படும்.
    "கிரிமோகார்ப்" வகை கனிகள் காணப்படும்.

    பயன்படும் பகுதி : விதை.
    சுவை : கார்ப்பு.
    தன்மை : வெப்பம்.
    பிரிவு : கார்ப்பு.

    தாவர வேதிப் பொருட்கள் : Thymol என்ற வேதிப் பொருள் இதன் கனிகளில் காணப்படும்.

    செய்கைகள் : உறக்கமுண்டாக்கி, துயரடக்கி, இசிவகற்றி.

    மருத்துவ குணங்கள் :

    நுரையீரல் நோய்கள், அஜீரணம், வயிற்று வலி, வறட்டு இருமல், கல்லீரல் , மண்ணீரல் நோய்கள் குணமாகும்.

    நோய் தீர்க்கும் முறைகள் :

    1) ஓமம், சுக்கு, மிளகு, திப்பிலி அளவு எடுத்து, லேசாக வறுத்து பொடி செய்து இத்துடன் சம அளவு சர்க்கரை சேர்த்து தினமும் 2− வேளைகள், 5 கி. வீதம் கொடுத்துவர தீராத வயிற்றுப் போக்கு, அஜீரணம், வயிற்று வலி தீரும்.

    2) ஓமப் பொடியை குடிநீர் செய்து குடித்துவர , சிறுநீர்க்கட்டு, கல்லடைப்பு, வயிற்றுப் பொருமல் நீங்கும்.

    3) ஓமத்தை நீர்விட்டு அரைத்து, கட்டிகள், வீக்கங்களில் பற்றுப்போட அவைகள் மறையும்.

    4) ஓமம், கசகசா, திப்பிலி, ஆடாதோடை இலை, வகைக்கு 50 கி எடுத்து 1−லி. நீரில் போட்டு 1/2−லி. சுண்டக் காய்ச்சி தினமும் 2−வேளைகள், 20மி.லி.− வீதம் கொடுத்து வர இரைப்பிருமல், நுரையீரல், கபம் நீங்கும்.

    jansi.kannan60@gmail.com

    ReplyDelete
  6. மிக மிக அருமை அய்யா..!

    ReplyDelete