Monday, 22 November 2021

உங்கள் வீட்டில் பல்லி தொடர்ந்து சத்தமிட்டு கொண்டிருக்கிறதா? உடனே இதைத் தெரிந்து தெரிந்து கொண்டு மிகவும் கவனமாய் இருங்கள்

வீடு என்று இருந்தாலே அங்கு பல்லிகள் இல்லாமல் இருக்காது. பல்லிகளை பார்த்தவுடன் பலரும் அதனை அடித்துத் துன்புறுத்துவார்கள். ஆனால் மற்ற பூச்சிகளை இப்படி செய்வதைப் போன்று பல்லிகளை மட்டும் இவ்வாறு செய்யக்கூடாது. பல்லிகள் நிறைய நேரங்களில் நற்பலன்களை கொண்டு சேர்க்கின்றன. ஒவ்வொரு வீட்டிலும் சில நேரங்களில் பல்லிகள் சத்தம் போடுவதுண்டு. இவ்வாறு பல்லி சத்தம் போடுகையில் வீட்டில் உள்ள பெரியவர்கள் சிட்டிகை செய்வார்கள். அல்லது ராமா ராமா என்று இறைவனின் பெயரை அழைப்பார்கள். இதற்கெல்லாம் என்ன காரணம் என்று தெரியுமா? பல்லி நமக்கு சொல்லும் வாக்கு பற்றி தெரியுமா? எந்த திசையில் இருந்து சப்தம் எழுப்பினால் என்ன பலன் என்று தெரியுமா? வாருங்கள் இவை அனைத்தையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.




பல்லி வீட்டில் ஏற்படுத்தும் சத்தம் நமக்கு ஏற்பட இருக்கின்ற நன்மை தீமைகளின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. ஒரு சொல் சொன்னால் துன்பம், இரண்டு சொல் சொன்னால் தனலாபம், மூன்று சொல் சொன்னால் மரணம், நான்கு சொல் சொன்னால் சௌக்கியம், ஐந்து சொல் சொன்னால் உறவினர் வருகை, ஆறு சொல் சொன்னால் பீடை, ஏழு எட்டு சொல் சொன்னால் அகமலிவு.வடகிழக்கு திசையிலிருந்து பல்லி சத்தமிட்டால் பண இழப்பு வரும் வேலை பார்க்கும் இடம் அல்லது தொழில் செய்யும் இடத்தில் ஆண்களால் பிரச்சனை ஏற்படும். வெளியூர் பயணம் செய்வதில் சில சிக்கல்கள் ஏற்படும். சில சமயம் சில பேருக்கு அடிபடவும் வாய்ப்பிருக்கும்


.

வடமேற்கில் இருந்து பல்லி சத்தம் எழுப்பினால் இறையருள் கிடைக்கப் போகிறது என்று அர்த்தமாகும். பண வரவு உண்டாகும். வரும் விருந்தாளிகள் ஏதேனும் நற்செய்தியை கொண்டு வருவார்கள். தென் கிழக்கில் இருந்து பல்லிகள் சத்தமிட்டால் பெண்களின் வருகை வீட்டிலிருக்கும். வரப்போகும் பெண்களினால் வீட்டில் பிரச்சனை ஏற்படவும் வாய்ப்பிருக்கும். அல்லது பெண்களுக்கு உடம்பில் ஏதேனும் நோய் உண்டாகவும் வாய்ப்பு இருக்கிறது.



தென்மேற்கில் பல்லி சத்தமிட்டால் வீட்டிற்கு வரப் போகும் தம்பதிகள், பெண்கள், 
உறவினர்கள் மூலமாக நன்மை ஏற்படப்போகிறது என்று அர்த்தமாகும். இவ்வாறு பல்லிகள் சத்தம் எழுப்பும் திசையைப் பொறுத்து அதற்கான பலன்கள் அமைகின்றன. இப்படி பல்லிகள் ஏற்படுத்தும் சத்தத்தினால் சில நேரங்களில் நன்மைகளும் நடைபெறும், தீமைகளும் நடைபெறும்.




நன்மைகள் நடைபெறுவதாக இருந்தால் அவை உடனே நடைபெறவேண்டும். தீமையாக இருந்தால் அவை நம்மை நெருங்காமல் இருக்க வேண்டும். இதற்காக தான் பெரியவர்கள் சில பழக்கங்களை பின்பற்றி வந்தனர். அப்படி பல்லிகள் சத்தமிடும் பொழுது நமக்கு இஷ்ட தெய்வமான ஏதாவது ஒரு இறைவனின் பெயரை சொல்லி விரல்களை பயன்படுத்தி தரையில் தட்ட வேண்டும். இப்படி செய்வதினால் வரும் கெடுதல் நம்மை அண்டாமல் இருக்கும். வரப்போகும் நன்மை எந்த வித தடங்கலும் இல்லாமல் நம்மைச் வந்து சேரும்.

1 comment: