Wednesday, 21 December 2022

மன அழுத்தத்திற்கு காரணமான 'Cortisol' என்ற ஹார்மோன்மன அழுத்தம் குறைந்துவிடும்குளிர்ந்த நீரில் குளிப்பதால்

மார்கழி மாசத்துல சூரியன் உதிப்பதற்கு முன் பச்சை தண்ணீரில் குளிப்பதுண்டா

இல்லைங்க காலையில 9 மணிக்கே சுடுதண்ணீ தான் என்கிறீர்களா...

மன அழுத்தத்திற்கு காரணமான 'Cortisol' என்ற ஹார்மோன் காலைப் பொழுதில் அதிகமாக சுரக்கும். குளிர்ந்த நீரில் குளிப்பதால்  இந்த ஹார்மோன் சுரப்பது குறைந்து மன அழுத்தம் குறைந்துவிடும். 

பிசு பிசுப்பு இல்லாத ஆரோக்யமான சருமமாக மாறும். அரித்தல் போன்றவை மறையும்.

வெந்நீரில் குளிப்பது ஆண்மை குறைவை ஏற்படுத்துமாம். ஆனால் குளிர்ந்த நீரில் குளிப்பது ஆண்மை சக்தியை அதிகரிக்கும். 

அது சரி.. ஆனால் தலைக்கு குளித்தால் முடி அதிகமாக உதிருமே… ஆமாம். உதிரும். வெந்நீரில் குளித்தால்.. வெந்நீரில் குளிப்பதால் முடியின் வேர்கள் வலுவிழக்கும். குளிர்ந்த நீரில் குளிப்பதால் முடி உதிராது(உதிர்ந்தவர்களுக்கு அல்ல)

நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடைகிறது.

நுரையீரல் செயல்பாடு அதிகரிக்கும்.

அன்றைய நாளை சுறுசுறுப்பாகவும் புத்துணர்வாகவும் வைத்திருக்கும். சுருக்கமாக சொன்னால் நாய் துரத்தினால் வருமளவுசக்தி குளிர்ந்த நீர் குளியலால் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

No comments:

Post a Comment