Monday, 12 December 2022

விருத்தித் தீட்டு

குழந்தை பிறந்த தீட்டை 'விருத்தித் தீட்டு' என்று சொல்லுவோம்.  பொதுவாகக் குழந்தை பிறந்த தீட்டுக் கணக்கு குடும்பத்துக்குக் குடும்பம் மாறக்கூடியது. அதிகபட்சமாக 10 நாள்களில் இருந்து 16 நாள்கள் வரை இருக்கும். தீட்டு முடிந்துதான் புண்ணியாக வாசனம் செய்து பெயர் இடுவது வழக்கம். அதைச் செய்துவிட்டாலே தீட்டு எல்லாம் முடிந்துவிட்டது என்று பொருள். மூன்று மாதமெல்லாம் தீட்டு என்று எந்தக் கணக்குமில்லை.


மனைவி கருவுற்று 5 மாதங்களுக்கு மேல் ஆகியிருந்தால் ,குழந்தை பிறந்து பெயர் வைக்கும்வரை மலைக்குப் போகக்கூடாது என்பதுதான் விதி. இவருக்குக் குழந்தை பிறந்து ஒரு மாதத்துக்குமேல் ஆகிவிட்டதால் இவர் சபரிமலை போவதில் எந்தத் தடையும் இல்லை. எனவே, இவர் தாராளமாக மலைக்குச் செல்லலாம். ஐயப்பன் அருள் அனைவருக்கும் எப்போதும் உண்டு" 

No comments:

Post a Comment