Tuesday 30 May 2023

எந்த நாளில் எந்த பொருட்களை வாங்கினால் அதிர்ஷ்டம் கொட்டும்-ன்னு தெரியுமா?

ஞாயிறு ஞாயிற்றுக் கிழமை சூரிய பகவானுக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் சிவப்பு நிற பொருட்கள், தங்கம், கோதுமை, மருந்துகள், கத்திரிக்கோல், கண் தொடர்பான பொருட்களை வாங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஆனால் இந்நாளால் இரும்பு மற்றும் இரும்பினால் ஆன பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். அதோடு மரப் பொருட்கள், வாகனத்தின் பாகங்கள் போன்வற்றையும் வாங்கக்கூடாது. திங்கள் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உரிய நாளாகும். இந்நாளில் அரிசி, பாத்திரங்கள், தங்கம், மருந்துகள், பால் மற்றும் பாலால் தயாரிக்கப்பட்ட இனிப்பு பொருட்களை வாங்கலாம். ஆனால் இந்நாளில் போனா, பென்சில், கலை தொடர்பான பொருட்கள், இசை தொடர்பான பொருட்கள், விளையாட்டு பொருட்கள், மொபைல் போன்றவற்றை வாங்கக்கூடாது. ADVERTISEMENT செவ்வாய் செவ்வாய் கிழமை அனுமனுக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. இந்த செவ்வாய்க்கிழமை அன்று தங்கம், சமையலறை பொருட்கள், சிவப்பு நிற பொருட்களை வாங்குவது நல்லது. சொத்துக்களை வாங்க நினைத்தால், அதை செவ்வாய் கிழமைகளில் வாங்குவது மங்களகரமானதாக இருக்கும். ஆனால் இந்நாளில் காலணிகளை வாங்காதீர்கள். அதோடு இரும்பு தொடர்பான பொருட்கள், பர்னிச்சர் மற்றும் மொபைல் போன்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். புதன் புதன்கிழமை விநாயகர் மற்றும் சரஸ்வதி தேவிக்கு உரிய நாளாகும். இந்த புதன் கிழமைகளில் பணம் தொடர்பான வேலைகளை செய்வது நல்லது. புதிய தொழில் மற்றும் படிப்பைத் தொடங்க சிறந்த நாள். இந்நாளில் பேனா, பென்சில், கலைப்பொருட்கள், வாகனங்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள் போன்றவற்றை வாங்குவது அதிர்ஷ்டமானது. ஆனால் இந்நாளில் அரிசி, மருந்துகள், பாத்திரங்கள், மீன் தொட்டி போன்றவற்றை வாங்கக்கூடாது. மேலும் கடன் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும். வியாழன் வியாழக்கிழமை பகவான் விஷ்ணுவிற்கு உரிய நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை வாங்குவது மிகவும் நல்லது. அதேப் போல் இந்நாளில் சொத்துக்களை வாங்குவது நன்மை பயக்கும். ஆனால் இந்நாளில் கண்ணாடி, மஸ்காரா போன்றவற்றை வாங்கக்கூடாது. அதேப் போல் கூர்மையான பொருட்கள், பாத்திரங்கள் மற்றும் நீர் தொடர்பான ஷோபீஸ்களை வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். வெள்ளி வெள்ளிக்கிழமை செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவிக்கு உரிய நாளாகும். இந்நாளில் பணம் வைக்கும் பைகள், பெல்ட்டுகள், காலணிகள் போன்ற தோல் பொருட்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் போன்றவற்றை வாங்குவது நல்லது. மேலும் இந்நாளில் அலங்கார பொருட்களை வாங்குவது மங்களகரமானது. ஆனால் இந்நாளில் சமையலறை மற்றும் பூஜை பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். அதேப் போல் வாகனத்தின் பாகங்களை வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்.
சனி சனிக்கிழமை சூரிய பகவானின் மகனான சனி பகவானுக்கு உரிய நாளாகும். இந்நாளில் வாகனங்கள், இயந்திரங்கள், ஹார்டுபேர், பர்னிச்சர், கருவிகள், கார்பெட் மற்றும் திரைசீலைகள் போன்வற்றை வாங்குவது மங்களகரமானதாகும். சனி பகவானின் கோபத்திற்கு ஆளாகக்கூடாது என்று விரும்பினால், சனிக்கிழமைகளில் கடுகு எண்ணெய், உப்பு மற்றும் தோல் பொருட்கள் போன்றவற்றை வாங்காதீர்கள். அதுமடுமின்றி, இரும்பு பொருட்கள், கத்தி, கத்தரிக்கோல், தானியங்கள், மசாலா பொருட்கள் போன்றவற்றை வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment