Wednesday, 30 August 2023

குளியல் அறை டைல்ஸ், காலி வாளி.. பாத்ரூம் குறித்து வாஸ்து

வாஸ்து சாஸ்திரம் நம் வாழ்வில் பல வழிகளில் முக்கியமானது. இது மனதை மட்டுமல்ல, எதிர்மறை தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. வாஸ்து படி, வீட்டில் வைக்கப்படும் அனைத்தும் நம் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. நீங்கள் வாஸ்து விதிகளைப் பின்பற்றினால், வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் பல வழிகளில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை. பொதுவாக, பலர் குளித்த பிறகு குளியலறையில் காலி வாளியை வைத்திருப்பார்கள். ஆனால் அதற்கும் சில வாஸ்து விதிகள் உண்டு..இங்கு அதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்...

பொதுவாக குளியலறையில்  அசுபமாக கருதப்படும் காலி வாளியைதான் நாம்  வைப்போம். வாஸ்து படி குளியலறையில் காலி வாளி வைத்தால் பணத்தட்டுப்பாடு ஏற்படும். இதனுடன், நிதி சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த காரணத்திற்காக, குளித்த பிறகு எப்போதும் ஒரு வெற்று வாளியை குளியலறையில் விடாதீர்கள். இப்படி செய்வதால் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படுமாம்.

வாஸ்து விதிகளின்படி, குளியலறையில் கருப்பு வாளியை வைக்க வேண்டாம். கருப்பு வாளியை வைத்திருப்பது உங்களுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஒரு கருப்பு வாளி வீட்டில் பிரச்சனைகளை கொண்டு வரும். வாஸ்து படி, பச்சை வாளியை வைத்திருந்தால், சனி மற்றும் ராகுவின் தோஷங்களில் இருந்து நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள். குளியலறையில் பச்சை வாளியை வைத்திருப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. வாஸ்து படி, குளியலறையில் பச்சை ஓடுகள் பொருத்தப்பட வேண்டும்
குளியலறையை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள்
பலருக்கு மிகவும் அழுக்கு குளியலறை டைல்ஸ் உள்ளன. ஆனால் பாத்ரூம் டைல்ஸ் அழுக்காக இருந்தால் வீட்டில் பணப்பிரச்சனை ஏற்படும். இதற்கு பாத்ரூம் டைல்ஸை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். அழுக்கை அகற்றுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். தினமும் குளியலறையைக் கழுவுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதனால் வீட்டில் ஆரோக்கியம் நிறைந்திருக்கும்.சந்தோஷமும் இருக்கும்..

Monday, 28 August 2023

துடைப்பம் வாங்கக் கூடாத நாள்.. தெரியாமல் செய்யும் தவறு செல்வத்தை துடைத்து விடும்.. வாஸ்து டிப்ஸ்

நம்முடைய வீட்டில் நாம் சுத்தம் செய்ய பயன்படுத்தும் துடைப்பத்தை எந்த நாளில் வாங்க வேண்டும் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கூட வாஸ்து சாஸ்திரத்தில் கூறுப்பட்டுள்ளது. பயன்படுத்திய பழைய துடைப்பத்தை என்ன செய்யலாம் என்று கூட சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.


துடைப்பம்: வாஸ்துப்படி, துடைப்பத்திற்கு மரியாதை செய்வது அன்னை மகாலட்சுமியை மகிழ்விக்கும். நம்முடைய வீட்டிற்குள் மகாலட்சுமியை வரவழைப்பதோடு வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் நிலைத்திருக்கும். துடைப்பத்தால் வீட்டை சுத்தம் செய்வது முதல் துடைப்பத்தை எங்கு எப்படி வைப்பது என்பது வரைக்கும் சில விதமுறைகளைப் பின்பற்ற வேண்டும். சுத்தம் அன்னை மகாலட்சுமிக்கு மிகவும் பிடிக்கும். ஆகவே துடைப்பமும், குப்பை அள்ளும் முறமும் அவருக்கு மிகவும் பிடித்த ஒன்றாக கருதப்படுகிறது. எனவே துடைப்பத்தையும் குப்பை அள்ளும் முறத்தையும் நாம் சுத்தமாகவே வைத்திருக்க வேண்டும்.



மகாலட்சுமியின் அம்சம்: துடைப்பம் மகாலட்சுமி தேவியின் விருப்பமான ஒன்றாக கருதப்படுகிறது. உங்கள் கனவில் ஒரு புதிய துடைப்பத்தைப் பார்த்தால், அது நல்லதாக கருதப்படுகிறது. வாஸ்துப்படி, இது ஒரு நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளம். இத்தகைய சூழ்நிலையில் வீட்டில் சந்தோஷம், செழிப்பு போன்றவை நிறைந்து இருக்கும். மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்திருக்கும்.

செல்வ செழிப்பு: துடைப்பம் வீட்டின் செழிப்பின் அடையாளமாகும். எனவே இதை எப்போதும் மறைத்து வைக்க வேண்டும். உங்கள் வீட்டிற்கு வரும் யாரும் உங்கள் வீட்டில் உள்ள துடைப்பத்தைப் பார்ப்பது நல்லதல்ல. எனவே எப்போதும் வீட்டிற்கு வெளியே துடைப்பம் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். துடைப்பத்தின் மீது கால் வைத்தால், செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவி கோபப்படலாம். எனவே எப்போதும் துடைப்பத்தை கால் படாத இடத்தில் படுக்க வையுங்கள். துடைப்பத்தை கால்களால் மிதிக்கக் கூடாது. துடைப்பத்தைக்கொண்டு ஒருவரை அடிக்கக் கூடாது.


தலைகீழாக வைக்காதீர்கள்: நம்முடைய வீட்டினை நாம் துடைப்பத்தால் சுத்தம் செய்த பின்னர், பலர் அதை அவசரமாக தலைகீழாக வைப்பார்கள். ஆனால் இப்படி வைப்பது தவறான செயல். சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும். வீட்டில் டென்சனும் அதிகரிக்கும். எனவே எப்போதும் துடைப்பத்தை சரியான இடத்தில் நேராக வையுங்கள். அதுவே நேர்மறை சக்தியை அதிகரிக்கும்.

சுத்தம் அவசியம்: மகாலட்சுமியின் அம்சம் என்பதால் துடைப்பத்தை சுத்தமாகவே வைத்திருக்க வேண்டும். வீட்டினை சுத்தம் செய்யும் போது அதில் முடிகள் சிக்கிக்கொண்டிருக்கும். அந்த முடிகளை எடுத்து குப்பைக்கூடையில் போட்டு விட்டுதான் துடைப்பத்தை சுத்தமாக வைக்க வேண்டும். வீட்டில் இருந்து ஒருவர் வெளியே சென்ற உடனேயே வீட்டை பெருக்குவதைத் தவிர்க்க வேண்டும். இத்தகைய சூழ்நிலையில், அவர் சென்ற பிறது ஒரு மணிநேரம் கழித்து பின்னர்தான் வீட்டை பெருக்க வேண்டும்.சூரிய அஸ்மனத்திற்குப் பிறகு வீட்டில் விளக்கேற்றிய பின்னர் இரவு நேரத்தில் வீடு பெருக்குவதைத் தவிர்க்க வேண்டும்.


பழைய துடைப்பத்தை என்ன செய்வது: சிலபேர் வீட்டை காலி செய்து விட்டு புதிய வீட்டிற்கு செல்லும் போது, இறுதியாக அந்த வீட்டில் இருந்து மொத்தமாக எல்லா பொருட்களும் எடுத்துப் போகக் கூடாது என்று சொல்லி, தங்களிடம் இருக்கும் பழைய துடைப்பத்தை விட்டுவிட்டு செல்வார்கள். அந்த தவறை மட்டும் நீங்கள் செய்து விடாதீர்கள். உங்கள் வீட்டு மகாலட்சுமியை நீங்கள் குடியிருந்த, அந்த வீட்டிலேயே விட்டுவிட்டு செல்வதாக அர்த்தம். எனவே நீங்கள் பயன்படுத்திய பழைய துடைப்பத்தை அடுத்தவர்கள் எடுத்து கூட்ட முடியாத அளவிற்கு, தனித்தனியாக பிரித்து போட்டு விடுவது நல்லது.


எந்த நாளில் துடைப்பம் வாங்கலாம்: செவ்வாய் அல்லது சனிக்கிழமை துடைப்பம் வாங்க சிறந்த மற்றும் மிகவும் மங்களகரமான நாள். இந்த நாட்களில் துடைப்பம் வாங்கினால் மகாலட்சுமியின் ஆசிகள் கிடைக்கும். நமது வீட்டில் செல்வம் பெருகும் பொருளாதார நிலை மேம்படும், லட்சுமி தேவியின் அருள் எப்போதும் பொழியும். அது தவிர பவுர்ணமி முடிந்து தேய்பிறை நாட்களில் செவ்வாய், சனிக்கிழமைகளில் துடைப்பம் வாங்குவது நல்லது.

தானமாக தர வேண்டாம்: பழைய துடைப்பத்தை குப்பையில் தான் போட முடியும். வேறு வழியே இல்லை! என்று சொல்லுபவர்களுக்கு, 'முடிந்தவரை செவ்வாய், வெள்ளி இந்த தினங்களில் குப்பையில் தூக்கி போடாதீர்கள். மற்ற தினங்களில் உங்கள் வீட்டில் இருந்து அகற்றி விடுங்கள். உங்கள் வீட்டில், பயன்படுத்திய துடைப்பத்தை தானமாக கொடுக்க கூடாது. குறிப்பாக உங்கள் வீட்டில் பயன்படுத்தி தேய்ந்து போய், வெளியே தூக்கிப் போடும் நிலையில் இருக்கும் துடைப்பம் கூட கட்டாயம் வேறொருவர் கைக்கு செல்லக்கூடாது. முடிந்தவரை உங்கள் கைகளால் காசுகொடுத்து கூட, யாருக்கும் துடைப்பத்தை வாங்கித் தராதீர்கள்.


எரித்து சாம்பலாக்குங்கள்: தென்னங்குச்சி விளக்குமாறு, பூந்துடைப்பம் போன்ற இயற்கையான துடைப்பங்களை பயன்படுத்துவது நல்லது. இதுபோன்ற பழைய துடைப்பங்களை வெட்ட வெளியில் வைத்து எரித்து விடுவது நல்லது. அது சாம்பலாகி காணாமல் போய்விடும். எனவே பழைய துடைப்பத்தை எரித்து விடலாம் தவறில்லை. அதே நேரத்தில் நாம் பயன்படுத்திய துடைப்ப குச்சிகளை காகம் குருவி பறவை இவைகளெல்லாம் கூடு கட்டுவதற்கு எடுத்துக்கொண்டு போவது நம் குடும்பத்திற்கு நல்ல பலனைத் தருவதாக சொல்லப்பட்டுள்ளது.


Friday, 11 August 2023

நாலூர் மயானம் திருமெய்ஞானம்


சோழர் காலத்தில் கொண்டாடப்பட்ட மாடக்கோயில்; முற்பிறவிகளின் வினைகளை அகற்றும் நாலூர் மயானம்!


முற்கால சோழர் ஆட்சிக்காலத்தில் மிகக் கொண்டாடப் பெற்ற மாடக்கோயில். இன்று காலத்தின் வேகத்திற்கு ஈடு தர முடியாமல் சிதைந்து சுருங்கிவிட்டது.


நாலூர் மயானம் திருமெய்ஞானம்

நாலூர் மயானம்
திருமெய்ஞானம்

உலகத்திலுள்ள ஜீவர்களின் வாழ்வியல் முடியும் இடம் 'மயானம்'. மயானம் என்ற வார்த்தையே சற்று பயம் தரக்கூடியதுதான்.‌ ஆயினும் ஜீவர்கள் சகல பற்றுகளும் விட்டொழித்து உண்மை நிலையினை உணர்ந்து மெய்ஞானம் அடையக்கூடிய இடம் இதுவே. எனவே இவ்விடம் மெய்ஞானம் எனப்பெறுகிறது. கும்பகோணம்,

திருச்சேறை அருகே திருமெய்ஞானம் கிராமத்தில் ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஸ்ரீ ஞானபரமேஸ்வரர் திருத்தலம் அமைந்துள்ளது. பொதுவாக கச்சி மயானம், கடவூர் மயானம், காழி மயானம், வீழி மயானம், நாலூர் மயானம் என ஐந்து மயானங்கள் முக்கியமானவைகளாகப் பேசப்படுகின்றன.

இவற்றுள் நாலூர் மயானம்தான் 'திருமெய்ஞானம்' எனப்பெறும் பாடல்பெற்ற தொன்மையான தலமாகும். நாலூர் சிவாலயத்திலிருந்து சற்று உள்ளடங்கி அமைந்துள்ள இது 'ஞானபரமேஸ்வர சுவாமி கோயில்' எனக் குறிப்பிடப்படுகிறது. 'செற்றூர்க் கூற்றத்துப் பிரமதேயம்' எனச் சோழர்களால் போற்றப்பெற்ற தலம் இது. நால்வகை வேதங்களும் சிறந்திருந்த ஊர்
அதனால் சதுர்வேதமங்கலம் என்று அழைக்கப்பெற்றது. காலப்போக்கில் நாலூர் என்ற பெயரே நிலைத்துவிட்டது. உலக வாழ்க்கையை அனுபவித்து முடிவுற்று வரும் உயிர்களுக்கு, நிலைத்த உண்மையை உணர்த்தி ஈசன் மெய்ஞ்ஞானத்தினை வழங்கி அருளும் இடம் இதுவே. காலப்போக்கில் 'மெய்ஞ்ஞானம்' என்ற சொல்லானது திரிந்து 'மயானம்' என்பதாக மருவி இருக்கலாம் என்பது ஆன்றோர் கருத்து. முதலாம் குலோத்துங்க சோழரின் படைத்தலைவராக விளங்கியிருந்த 'ஸ்ரீ பிரமாதிராஜன்' என்பாரின் சொந்த ஊர் இது எனச் சொல்லப்படுகிறது
கோயிலைச் சுற்றிப் படியெடுக்கப்பட்ட 23 கல்வெட்டுகள் மிகப்பெரும் வரலாற்றுப் பொக்கிஷம். இத்தலத்து மூலவரை 'திருமயானத்து ஸ்ரீ மூலத்தானத்துப் பெருமானடிகள்' எனக் கல்வெட்டுகள் பேசுகின்றன. திருமெய்ஞ்ஞானத்தில் உறைந்திருக்கும் பெருமான் தோற்றத்தில் சிறியவர். ஆனால் மெய்ஞானத்தினை அருளிடுவதில் மிகப்பெரியவர். 

இவர் 'மயானத்துப் பரமசுவாமி' எனக் கல்வெட்டில் குறிக்கப் பெற்றுள்ளார். திருஞானசம்பந்தபெருமான் இத்தலத்து ஈசரைப் பாடி பரவியுள்ளார். ஆபஸ்தம்ப மகரிஷி வழிபட்ட சிறப்பினையுடைய தலம் இது.

இங்கு அம்மை ஞானாம்பிகையாக அருள்பாலிக்கிறாள். எம்பெருமானுக்கு இணையாக ஞானத்தினை வாரி வழங்கிடுவதில் சற்றும் சளைத்திடாத வரப்ரசாதி. உலகியல் பற்றுகளிலிருந்து விடுபட்டு ஞான மார்க்கத்தினை விழைபவர்களுக்கு அருமருந்து இவ்வம்பிகை. இத்தலத்து ஞானதீர்த்தத்தில் நீராடி ஞானபரமேஸ்வரரை வழிபடுவோருக்கு பந்த பாசங்கள் நீங்கி, முப்பிறவி வினைகள் அகன்று, மீண்டும் பிறவா நிலை உண்டாகும் என்பது ஐதிகம்.

திருமெய்ஞானம்
திருமெய்ஞானம்
முற்கால சோழர் ஆட்சிக்காலத்தில் மிகக் கொண்டாடப் பெற்ற மாடக்கோயில். இன்று காலத்தின் வேகத்திற்கு ஈடு தர முடியாமல் சிதைந்து சுருங்கிவிட்டது. தொன்மையான தட்சிணாமூர்த்தி குறிப்பிடத்தக்க விசேஷ கோலத்தில் வீற்றிருக்கிறார்.

விதானத்துக் கல்நந்திகள் தொன்மை பேசிடும் சாட்சிகளாகப் புல் மண்டிய புதருக்கு நடுவே மறைந்து காட்சி தந்து கொண்டிருக்கின்றன. திருப்பணி செய்து முறையாகப் பராமரித்தால் இன்னும் வரும் தலைமுறைகளுக்கும் புராதனப் பெருமை கொண்டதோர் சோழர் கற்றளியின் வரலாற்றுப் பெருமையும், புராணப் பெருமையும் அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாக அமையும்.

"ஞாலத்தார் சென்றேத்து நாலூர் மயானத்தில்

சூலத்தான் என்பார்பால் சூழாவாம் தொல்வினையே"


Thursday, 10 August 2023

குறிஞ்சாக்கீரை

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் முக்கிய உணவாக கருதப்படுவது குறிஞ்சாக்கீரை. சர்க்கரை நோயின் பாதிப்பு ஏற்படாமல் இருக்க குறிஞ்சாக்கீரை சிறந்த  மருந்தாகும்.
 
வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் குணமாகும். வயிற்றுப் பூச்சிகள் நீங்கும். உடல் எடை குறைய குறிஞ்சாக்கீரை உதவுகிறது.

 
குறிஞ்சாக்கீரை சளியினை போக்கும் தன்மை உடையது .வயிற்று வலியினை போக்கிறது. குளுமைப்படுத்தும் திறன் கொண்டது.
 
குறிஞ்சாக்கீரை சிறுநீர் போக்கினை தூண்டும் தன்மை மிகுந்தது. நன்கு பசியைத் தூண்டும். ஜீரண சக்தியை அதிகரிக்க உதவிகிறது. உடல் சூடு தணிய செய்யும்.
 
எல்லா விதமான விஷகடிக்கும் குறிஞ்சாக் கீரையை கடிபட்ட இடத்தில் வைத்து கட்டி, கீரையை கஷாயம் செய்து சாப்பிட்டால் விஷம் விரைவில் முறியும்.
 
கடுமையான ஜூரம் மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் குறிஞ்சாக் கீரையை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை அருந்தி வந்தால் ஜூரம் குறையும்.
 
குறிஞ்சாக் கீரையை வாரம் இரண்டு முறை உணவில் சேர்த்து உண்டு வந்தால் உடல் சூடு தணியும்.
 
உடலில் உண்டாகும் தடிப்புகள், சொறி, படை இவைகளுக்கு இதன் இலையை அரைத்து பூசி வர அவை மறைந்துவிடும்

சைவசித்தாந்த ரத்தின சுருக்கம்...

*70 வினாவிடையில் சைவசித்தாந்த ரத்தின சுருக்கம்...!*

*1. சமயம் என்றால் என்ன?*
மனிதன் வாழ்வை வழிப்படுத்துவது சமயம்.

*2. சைவம் என்றால் என்ன?*
சைவம் என்றால் சிவ சம்பந்தமுடையது என்பது பொருள்.

*3. சைவ சமயம் எப்போது தோன்றியது?*
சைவ சமயம் அநாதியானது. அநாதி என்றால் ஆதி அற்றது (தொடக்கமில் காலம் தொட்டு) என்பது பொருள்.

*4. யார் சைவர்?*
சிவபெருமானை முழுமுதற் கடவுள் என உணர்ந்து வழிபடுபவரே சைவர்.

*5. சைவ சமயத்தின் முக்கிய நூல்கள் யாவை?*
பதினான்கு சாத்திரங்களும், பன்னிரண்டு திருமுறைகளும்.

*6. சமயக் குரவர்கள் யாவர்?*
1. திருஞான சம்பந்த நாயனார்
2. திருநாவுக்கரசு நாயனார்
3. சுந்தரமூர்த்தி நாயனார்
4. மாணிக்கவாசகர்

*7. அகச்சந்தானக் குரவர்கள் யாவர்?*
1. திருநந்தி தேவர்
2. சனற் குமாரமுனிவர்
3. சத்திய ஞான தரிசினிகள்
4. பரஞ்சோதி முனிகள்

*8. புறச்சந்தானக் குரவர்கள் யாவர்?*
1. ஸ்ரீ மெய்கண்டதேவ நாயனார்
2. அருள்நந்தி சிவாச்சாரியார்
3. மறைஞான சம்பந்தர் சுவாமிகள்
4. உமாபதி சிவாச்சாரியார்

*9. திருமுறை மற்றும் சாத்திரங்களின் அமைப்பு எவ்வாறு உள்ளது?*
திருமுறைகள் சிவபெருமானின் பெருமைகளை விளக்கும் புகழ் நூல்களாக் அமைந்திருக்கின்றன.
சாத்திரங்கள் சைவ சமயத்தின் கொள்கைகளை விளக்கும் பொருள் நூல்களாக அமைந்துள்ளன.

*10. திருமுறை என்ற சொல்லுக்குப் பொருள் யாது?*
முறை என்னும் சொல் நூல் என்னும் பொருளை உடையது. திருமுறை என்பது மாறாத செல்வத்தை மக்கள் எளிதாகப் பெறுவதற்கு வழிகாட்டும் நூல் என்பது பொருள்.
இந்நூல் 12 பகுதிகளாக தொகுக்கப் பெற்று பன்னிரு திருமுறை என்று போற்றப்படுகிறது.

*11. திருமுறைகள் பிரணவத்துள் அடங்கும் என்பதை விளக்குக?*
பன்னிரு திருமுறையில் முதல் பாடல் 'தோடு' என்னும் சொல்லுடன் தொடங்கி, இறுதிப் பாடலில் 'உலகெலாம்' என்ற சொல்லுடன் முடிகிறது. தோடு என்பதில் முதல் எழுத்து ஓ உலகெலாம் என்பதில் ஈற்றெழுத்து ம் ஆகும்.

*12. திருமுறைகளை முறையாக வகைப்படுத்தியவர் யாவர்?*
திருநாரையூரில் பொல்லாப் பிள்ளையாருக்குப் பூசைகள் செய்து அவரிடம் நேரடியாக உபதேசம் பெற்ற நம்பியாண்டார் நம்பிகள்.
இராசராச சோழர் காலத்தில் பொல்லாப் பிள்ளையார் அருளினால் நம்பியாண்டார் நம்பிகள், மறைத்து வைக்கப்பட்டிருந்த தேவாரங்களை எடுத்து தொகுத்து அருளினார்கள்.

*13. திருமுகப் பாசுரம் யார் அருளிச் செய்தது?*
திருமுகப்பாசுரம் சிவபெருமானால் அருளிச் செய்யப்பட்டது. இப்பகுதி பதினொராம் திருமுறையில் அமைந்திருக்கிறது.

*14. பஞ்சபுராணம் குறிப்பு தருக.*
மூவர் தேவாரங்களில் ஒரு பாடலும், திருவாசகத்தில் ஒரு பாடலும், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு மற்றும் பெரியபுராணத்தில் இருந்து ஒவ்வொரு பாடலுமாக மொத்தம் ஐந்து பாடல்கள் பாடுவது பஞ்சபுராணம் எனப்படும்.

*15. அகத்தியர் தேவாரத் திரட்டு - குறிப்பு தருக*
அகத்திய முனிவர் 'அடங்கள் முறை' முழுவதையும் சிவாலய முனிவருக்கு உபதேசித்து. அவற்றில் இருந்து 25 பதிகங்களை திரட்டி ஒரு நூலாக செய்து அருளினார். அந்நூலே அகத்தியர் தேவாரத் திரட்டு ஆகும். இதில் 8 நிலைகள் உள்ளன.
1. குருவருள்
2. பரையின் வடிவம்
3. அஞ்செழுத்து
4. கோயில் திறம்
5. சிவன் உருவம்
6. திருவடிகள் பெருமை
7. அருச்சனைச் சிறப்பு
8. அடிமைத் திறம்

*16. தேவார அருள்முறைத் திரட்டு -குறிப்பு தருக.*
மூவர் பெருமக்கள் அருளிச் செய்த தேவாரங்களை திருவருட்பயன் என்னும் சாத்திர நூலில் வரும் பத்து தலைப்புகளில் உமாபதிசிவம் ஒரு நூல் அருளியுள்ளார். அந்நூலுக்கு தேவார அருள்முறைத் திரட்டு என்று பெயர். அந்நூலில் 99 தேவாரப் பாடல்கள் உள்ளன.

*17. பன்னிரு திருமுறைகளில் மொத்தம் எத்தனை பாடல்கள்?*
*18,497 பாடல்கள்.*

*18. மூவர் பெருமக்கள் பாடிய மொத்த பதிகங்கள் எவ்வளவு?*
மொத்தம் பாடியவை கிடைத்தவை
திருஞான சம்பந்த சுவாமிகள் *16,000 383*
திருநாவுக்கரசு சுவாமிகள் *49,000 312*
சுந்தரமூர்த்தி சுவாமிகள் *38,000 100=மொத்தம்* *1,03,000 795*

*19. நால்வர் பெருமக்களின் அவதாரத் தலங்கள் எவை?*
திருஞான சம்பந்த சுவாமிகள் - சீர்காழி
திருநாவுக்கரசு சுவாமிகள் - திருவாமூர்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருநாவலூர்
மாணிக்கவாசகர் - திருவாதவூர்

*20. நால்வர் பெருமக்கள் இப்பூவுலகில் வாழ்ந்த காலம் எவ்வளவு?*
திருஞான சம்பந்த சுவாமிகள் - 16 ஆண்டுகள்
திருநாவுக்கரசு சுவாமிகள் - 81 ஆண்டுகள்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் - 18 ஆண்டுகள்
மாணிக்கவாசகர் - 32 ஆண்டுகள்

*21. திருத்தொண்டர் தொகை ஆசிரியர் யார்?*
சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

*22. நாயன்மார்கள் மொத்தம் எத்தனை பேர்?*
அறுபத்து மூவர்.

*23. சாத்திரத்தில் தோத்திரம், தோத்திரத்தில் ் சாத்திரம் என்று கூறப்படும் நூல்கள் எவை?*
சாத்திரத்தில் தோத்திரம் - போற்றிப் ப·றொடை
தோத்திரத்தில் சாத்திரம் - திருமந்திரம்

*24. மெய்கண்டாருக்கு உபதேசம் செய்தது யார்?*
பரஞ்சோதி முனிகள்

*25. மெய்கண்டாரின் மாணாக்கர்கள் எத்தனை பேர்?*
49. அதில் தலையாய மாணவராக விளங்கியவர் சகல ஆகம பண்டிதர் என்று அழைக்கப்படும் அருள்நந்தி சிவாச்சாரியார். 'துகளறுபோதம்' என்ற நூலை அருளிச் செய்த சிற்றம்பல நாடிகளும் இவர் மாணாக்கரே.

*26. சிவஞான போதத்திற்கு காலத்தால் முற்பட்ட சாத்திர நூல்கள் யாவை?*
திருவுந்தியார் மற்றும் திருக்களிற்றுப்படியார்.

*27. அருள்நந்தி சிவம் அருளிச் செய்த நூல்கள் யாவை?*
1. சிவஞான சித்தியார்
2. இருபா இருப·து

*28. சித்தாந்த அட்டகம் - விளக்குக*
பதினான்கு சாத்திரங்களில் உமாபதிசிவம் அருளிச் செய்த நூல்கள். மொத்தம் எட்டு. அந்த எட்டு நூல்களே சித்தாந்த அட்டகம் என வழங்கப்படுகிறது.
1. சிவப்பிரகாசம்
2. திருவருட்பயன்
3. உண்மை நெறி விளக்கம்
4. போற்றிப் ப·றொடை
5. கொடிக்கவி
6. வினா வெண்பா
7. சங்கற்பநிராகரணம்
8. நெஞ்சு விடுதூது
என்பவையே அந்த எட்டு நூல்கள்.

*29. ஞானாமிர்தம் என்ற நூலின் ஆசிரியர் யார்?*
வாகீச முனிவர்

*30. வேதங்கள் - குறிப்பு தருக.*
வேதம் சிவபிரானால் அருளிச் செய்யப்பட்டது. இது கர்மகாண்டம், ஞான காண்டம் என இரு பகுதிகளை உடையது. ரிக், யசுர், சாமம், அதர்வணம் என நான்கு வேதங்கள் உள்ளன.

*31. ஆகமங்கள் - குறிப்பு தருக.*
ஆகமங்களும் சிவபிரானால் சிறப்பாக சைவர்களுக்கு அருளிச் செய்யப்பட்டன. சிவ ஆகமங்கள் 28 உள்ளன. சைவசமயம் வேதத்தைப் பொது எனவும், ஆகமத்தை சிறப்பு எனவும் கருதுகிறது.

*32. சமயங்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?*
அகச்சமயம், அகப்புறச்சமயம், புறச்சமயம், புறபுறச்சமயம் என நான்கு வகைப்படும்.
அகச்சமயம் அகப்புறச்சமயம்
1. பாடாணவாத சைவம் 1. பாசுபதம்
2. பேதவாத சைவம் 2. மாவிரதம்
3. சிவசமவாத சைவம் 3. காபாலம்
4. சிவசங்கிராந்தவாத சைவம் 4. வாமம்
5. ஈசுவர அவிகாரவாத சைவம் 5. பைரவம்
6. சிவாத்துவித சைவம் 6. ஐக்கியவாத சைவம்
புறச்சமயம் புறப்புறச்சமயம்
1. நியாயம் 1. உலகாயதர்
2. சாங்கியம் 2. சமணர்
3. யோகம் 3. செளத்திராந்திகர்
4. மீமாஞ்சை 4. யோகசாரர்
5. வேதாந்தம் 5. மாத்யமிகர்
6. பாஞ்சராத்திரம் 6. வைபாடிகர்

*33. சைவசித்தாந்தம் - ஒரு வார்த்தையில் விளக்கம் தருக.*
முடிந்த முடிபு.

*34. சைவ சித்தாந்தர் என்ற குறிப்பினைத்தரும் திருமுறை எது?*
திருமந்திரம்
"கற்பனைக் கற்று கலைமன்னும் மெய்யோகம்
முற்பத ஞானம் முறைமுறை நண்ணியே
சொற்பதங் கடந்து துரிசற்று மேலான
தற்பரம் கண்டுளோர் சைவசித்தாந்தரே"

*35. சைவ சித்தாந்த தத்துவத்தின் சிறப்பு யாது?*
1. தர்க்க ரீதியானது (Logic)
2. அறிவியற் பூர்வமானது (Scientific)
3. வரலாற்றுத் தொன்மையுடையது (Historic)
4. நடைமுறைக்கு இயைந்தது (Easy to Adapt)
5. உலகளாவியது (Universal)
6. முற்போக்குச் சிந்தனைகளை உடையது (Optimistic)
இன்னும் பல.

*36. சற்காரிய வாதம் - சிறுகுறிப்பு தருக.*
'உள்ளது அழியாது, இல்லது தோன்றாது' என்ற விஞ்ஞான அடிப்படையில் தான் சைவசித்தாந்த தத்துவம் தனது கொள்கைகளை நிலைநிறுத்துகிறது.

*37. அளவை - குறிப்பு தருக.*
நீட்டல் அளவை, நிறுத்தல் அளவை போல உலகப் பொருள்களை அளப்பதற்கு பலவிதமான அளவை முறைகள் இருப்பவை போல சமய உலகிலும் பல அளவைகள் பேசப்படுகின்றன. குறிப்பாக மூன்று அளவைகள்.
1. காட்சி அளவை - (பிரத்தியட்சப் பிராமணம்)
2. கருதல் அளவை - (அனுமானப் பிராமணம்)
3. உரை அளவை - (ஆகமப் பிராமணம்)
மேலும் பல அளவை முறைகள் இருப்பினும் பொதுவாக அவைஎல்லாம் மேற்சொன்ன மூன்றில் அடங்கும்.

*38. சைவசித்தாந்தம் கூறும் முப்பொருள்கள் யாவை?*
1. இறைவன் - பதி
2. உயிர் - பசு
3. மலம் - பாசம்
இம்மூன்று பொருள்களுக்கும் உரிய தொடர்பினை கீழ்வரும் திருமந்திரப் பாடல் விளக்குகின்றது.
"பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்
பதியினைப் போல் பசு, பாசம் அநாதி
பதியினைச் சென்று அணுகா பசு பாசம்
பதி அணுகிற் பசு பாசம் நில்லாவே"

*39. முப்பொருள்களும் அறிவுடைப் பொருள்களா?*
இறைவன் - தாமே அறியும் பேரறிவு உடையவன்.
உயிர்கள் - அறிவிக்க அறியும் சிற்றறிவு உடையவன்.
மலங்கள் - அறிவித்தாலும் அறியாத சடப்பொருள்கள்

*40. பொருள்களின் இரண்டு இயல்புகள் யாவை?*
பொருள்களுக்கு பொது இயல்பு, சிறப்பு இயல்பு என இரண்டு இயல்புகள் உண்டு.
பொது இயல்பு
ஒரு பொருளுக்கு மற்றொரு பொருளின் சார்பால் உண்டாகி, அச்சார்பு நீங்கிவிடும் போது நீங்கி விடும் இயல்பு.
(எ.கா) நீரில் வெம்மை
சிறப்பு இயல்பு
ஒரு பொருளுக்கு எச்சார்ப்புமின்றி இயற்கையாகவே அமைந்திருக்கும் இயல்பு.
(எ.கா) நீரின் குளிர்ச்சி

*41. இறைவன் செய்யும் ஐந்தொழில்கள் யாவை?*
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்.

*42. மும்மூர்த்திகள் யாவர்?*
படைத்தல் தொழிலைச் செய்யும் - பிரமன்
காத்தல் தொழிலைச் செய்யும் - திருமால்
அழித்தல் தொழிலைச் செய்யும் - உருத்திரன்
இவர்களே மும்மூர்த்திகள். இம்மும்மூர்த்திகளின் மேம்பட்டவர் சிவபெருமான். இவர்கள் சிவபெருமான் அருளினால் இந்தத் தொழிலைச் செய்யும் உருத்திரன் குணிஉருத்திரன். சிவபெருமான் மகாஉருத்திரன். இவ்வேறுபாட்டினை சிவஞான மாபாடியத்தில் சிவஞான சுவாமிகள் தெளிவாக விளக்குகிறார்கள

*43. இறைவனின் எண்குணங்கள் யாவை?*
1. தன் வயத்தான் ஆதல் .
2. தூய உடம்பினன் ஆதல் .
3. இயற்கை உணர்வினன் ஆதல்.
4. முற்றும் உணர்தல் .
5. இயல்பாகவே பாசங்களில் இருந்து விடுபடுதல்.
6. பேரருள் உடைமை.
7. முடிவில் ஆற்றல் உடைமை.
8. வரம்பில் இன்பம் உடைமை.

*44. உயிர்களைத் தோற்றுவித்தவர் யார்?*
உயிர்களை யாரும் தோற்றுவிக்கவில்லை. அவை தோற்றமில் காலந்தொட்டே இருப்பவை என்று சைவசித்தாந்தம் தெளிவாக விளக்குகிறது.

*45. உயிர்கள் எத்தனை வகைப்படும்?*
ஆணவமலம் மட்டும் உடைய விஞ்ஞான கலர், ஆணவம் மற்றும் கன்ம மலம் உடைய பிரளயா கலர், ஆணவம், கன்மம் மற்றும் மாயை என்ற மூன்று மலங்களும் உடைய சகலர் என உயிர்கள் மூவகைப்படும்.

*46. கேவலம், சகலம், சுத்தம் - குறிப்பு தருக.*
கேவலம்:
உயிர்கள் தம்மையும் அறியாமல், தமக்கு மேலே இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதையும் அறியாமல், தன்னை ஆணவம் என்ற மலம் முழுமையாக மறைத்திருக்கின்றது என்பதை அறியாத உயிரின் நிலை.
சகலம்:
கேவலநிலையில் இருந்த உயிர்களுக்கு மாயை மற்றும் கன்மத் தொடர்பினால் அறியாமை சிறிது குறைந்த நிலை.
சுத்தம்:
உயிர்கள், பாச நீக்கம் பெற்று இறைவனின் திருவடிகளை அடைந்து பேரானந்தத்தை அனுபவிக்கும் நிலை.

*47. உயிர்கள் அனுபவிக்கும் ஐந்து நிலைகள்(ஐந்தவத்தை) யாவை?*
1. நனவு - சாக்ரம்
2. கனவு - சொப்னம்
3. உறக்கம் - கழுத்தி
4. பேருறக்கம் - துரியம்
5. உயிர்ப்பு அடங்கல் - துரியாதீதம்

*48. மலங்கள் எத்தனை வகை? அவை யாவை?*
ஆணவம், கன்மம், மாயை என்று மூன்று வகைப்படும். மாயேயம், திரோதாயி என்று இரண்டையும் சேர்த்து மலங்கள் ஐந்து என்றும் விரித்துச் சொல்வார்கள்.

*49. ஆணவ மலத்தின் வேறு பெயர்கள் யாவை?*
இருள்மலம், மூலமலம், சகசமலம் என்று எல்லாம் ஆணவமலம் நூல்களில் பேசப்படுகின்றன. சாத்திர நூல்களில் 'இருள்' என்ற சொல்லால் பேசப்படும்.

*50. கன்ம மலத்தின் காரியங்கள் யாவை?*
சஞ்சிதம், பிரார்த்தம், ஆகாமியம் என மூன்றாகும்.
சஞ்சிதம்: (பழவினை)
பலபிறவிகளில் சேர்த்த வினைக்குவியல்
பிரார்த்தம்: (நுகர்வினை)
இப்பிறவியில் அனுபவிப்பதற்காக இறைவனால் நமக்குத் தரப்பட்ட வினைகள் (நம்மால் முன்செய்த வினைகளின் ஒரு பகுதி)
ஆகாமியம்: (வருவினை)
இப்பிறவியில் நாம் புதிதாக செய்யும் வினைகள்

*51. வினை என்றால் என்ன?*
நாம் செய்யும் செயல்களே வினை எனப்படும். வினைகள் நல்வினை, தீவினை என இரண்டு வகைப்படும்.

*52. இன்ப துன்பத்திற்கான காரணம் என்ன?*
முந்தைய பிறவிகளில் நாம் செய்த செயல்களுக்குத் தகுந்தவாறு பலன்களை இப்பிறவியில் அனுபவிக்கின்றோம். இறைவன் பெருங்கருணையின் காரணமாக நாம் செய்துள்ள மொத்த வினைகளையும் ஒரே பிறவியில் அனுபவிக்கத் தருவதில்லை. இப்பிறவியில் அனுபவிப்பதற்கு எனக் கொடுக்கப்பட்ட பிரார்த்த வினையின் வழி இப்பிறவியில் இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றோம். நாம் அனுபவிக்கும் இன்பதுன்பத்திற்குக் காரணம் நாம் முன்பு செய்த செயல்கள் தான் என சைவ சித்தாந்தம் தெளிவாக விளக்குகிறது.

*53. வினைக்குத் தகுந்தவாறு பலன்களை யார் நமக்குத் தருகிறார்கள்?*
வினைக்குத் தகுந்த பலன்களை வினைகளின் காரணமாகிய கன்மம் தர முடியாது. ஏனென்றால் அது சடப்பொருள். உயிர் தாமே சென்று வினைகளுக்குத் தகுந்த பலன்களை நுகர்வதில்லை. இறைவனே அந்த அந்த உயிர்கள் செய்த வினைக்குத் தகுந்த பலன்களைக் கூட்டி வைக்கிறான்.

*54. நாம் வாழும் இவ்வுலகைத் தோற்றுவித்தவர் யார்?*
மாயை என்னும் மலத்திலிருந்து உயிர்கள் நன்மை பெறும் பொருட்டு இறைவன் உலகத்தைப் படைத்தார்.

*55. மாயை - குறிப்பு தருக.*
மாயை என்பது மும்மலங்களில் ஒன்று. இம்மாயையின் காரியங்கள் 36 தத்துவங்களாக் விளங்குகின்றன. இம்மாயை சுத்தமாயை, அசுத்தமாயை என இரண்டு பகுதிகளாக நிற்கும். பிரகிருதி மாயை என்பது அசுத்தமாயைக்குள் அடங்கி நிற்கும். சுத்தமாயை, அசுத்தமாயை மற்றும் பிரகிருதி மாயை என மூன்றாகவும் கொள்வர். நாம் வாழும் இவ்வுலகம் பிரகிருதி மாயையில் இருந்து தோற்றுவிக்கப்பட்டது.

*56. சைவ சித்தாந்த சாத்திரங்களில் மணிமுடி நூலாக விளங்குவது எது?*
சிவஞான போதம், சிவஞான சித்தியார் இதனுடைய வழிநூல் எனவும், சிவப்பிரகாசம் இதனுடைய சார்பு நூல் எனவும் போற்றப்படும்.

*57. கடவுளுக்கும், உயிருக்கும் உள்ள தொடர்பு சைவ நூல்களில் எவ்வாறு சொல்லப்படுகிறது?*
'அத்துவிதம்' என்ற சொல்லினால் குறிக்கிறார்கள்.

*58. சைவ சித்தாந்தம் காட்டும் அத்துவிதம் யாது?*
இறைவன் ஒன்றாய், வேறாய் மற்றும் உடனாய் உயிர்களோடு கலந்து இருக்கின்றான். அந்தந்தப் பொருளுக்கு அந்தந்த பொருளாய் - அதுஅதுவாய் நிற்பதுவே ஒன்றாய் நிற்றல் ஆகும். இறைவன் உயிர்களுக்கு அறிவிக்கும் பொருட்டு உயிர்களின் வேறாய் நிற்கின்றான்.
உயிர்கள் தாம் விரும்பியவற்றை செய்வதற்கு இறைவனுடைய துணை தேவைப்படுகிறது. எனவே, உயிர்களோடு உடனாய் கூடி நிற்கின்றான்.

*59. சைவ சமயம் கூறும் வழிபாட்டு முறைகள் யாவை?*
குரு, லிங்க, சங்கம, வழிபாடு.
குரு வழிபாடு: நம்மிடம் உள்ள அறியாமையைப் போக்கும் ஞான ஆசிரியரையே சிவமாகவே கருதி வழிபடுவதாகும்.
லிங்க வழிபாடு: திருக்கோயிலுக்குச் சென்று சிவபெருமானை லிங்க திருமேனியில் வழிபடுதல்.
சங்கம வழிபாடு: சிவனடியார்களை சிவமாகவே கருதி வழிபடுவது.

*60. சரியை, கிரியை, யோகம், ஞானம் - விளக்குக*
சரியை: உடலால் வழிபடுவது.
கிரியை: உடலாலும், உள்ளத்தாலும் வழிபடுவது.
யோகம்: உள்ளத்தால் வழிபடுவது.
ஞானம்: எங்கும் எதிலும் இறையருளையே காண்பது.

*61. திருவைந்தெழுத்து விளக்கம் தருக.*
திருவைந்தெழுத்து என்பது சிவாயநம என்னும் மந்திரமாகும்.
சி-சிவன்
வ-சக்தி(அருள்)
ய-உயிர்
ந-மறைப் பாற்றல்
ம-ஆணவ மலம்
என்று ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு பொருளைக் குறித்து நிற்கிறது.
திருவைந்தெழுத்து மூவகைப்படும். நமசிவாய, சிவாய நம, சிவயசிவ என்பவை. இம்மந்திரமே பஞ்சாட்சர மந்திரம் என்று கூறப்படும்.

*62. தீக்கை என்றால் என்ன?*
தீக்கை என்பது தீட்சை என்னும் வடமொழி சொல்லின் திரிபு ஆகும்.
தீ-கெடுத்தல் ஷை-கொடுத்தல்
பாசப்பற்றைக் கெடுத்து மோட்சத்தை கொடுப்பது தீட்சை எனப்படும்.
இது மூன்று வகைப்படும் அவை
1. சமயம் 2. விசேடம் 3. நிருவாணம்

*63. இருவினை ஒப்பு என்றால் என்ன?*
நல்வினையின் பயனாகிய இன்பத்தில் விருப்பும், தீவினையின் பயனாகிய துன்பத்தில் வெறுப்பும் கொள்ளாது. அவற்றால் உள்ளம் வேறுபடாது, இரண்டையும் ஒன்றுபோல் கருதி அவற்றின்மேல் பற்று இல்லாமல் நிற்கும் நிலையே இருவினை ஒப்பு எனப்படும்.

*64. மலபரிபாகம் என்றால் என்ன?*
கணக்கற்ற பிறவிகளில் ஆணவமலத்தின் சக்தி உயிர் அறிவை தடைப்படுத்தியும் திரிபுபடுத்தியும் செயல்படுவதால் படிப்படியே மெலிவடைந்து பின் மறைத்தலை செய்யமாட்டாத நிலையை அடையும். உயிர் அறிவை தடுத்து வைத்திருந்த அதன் பிணிப்பு நெகிழ்ந்து நீங்கும் நிலை அடையும். இந்நிலையே மலபரிபாகம் எனப்படும்.

*65. சத்திநிபாதம் என்றால் என்ன?*
மலரிபாகம் சிறிது, சிறிதாக நிகழ, நிகழ அதற்கு ஏற்ப இதுகாறும் உயிரில் மறைத்து இருந்து பக்குவப்படுத்தி வந்த இறைவனது திரோதான சக்தியும் சிறிது, சிறிதாக தன் தன்மை மாறி அருள் சக்தியாக உயிரின் கண் விளங்கித் தோன்றும். அந்நிகழ்ச்சியே சத்திநிபாதம் எனப்படும்.

*66. சத்திநிபாதத்தின் வகைகள் யாவை?*
மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என நான்கு வகைப்படும்.

*67. முத்தி என்றால் என்ன?*
ஒவ்வொரு சமயமும் அதன் வழிபடு தெய்வம், வழிபாட்டு முறைகள் மற்றும் அடிப்படை நூல்கள் போன்ற சில அடிப்படைக் கருத்துக்களை சொல்கிறார்கள். அவற்றில் இன்ப, துன்பங்களை அனுபவிக்கும் உயிரின் முடிவான நிலை முக்தி என்று சொல்லப்படுகிறது.

*68. சைவ சித்தாந்தம் காட்டும் முக்தி யாது?*
உயிர்கள், மலநீக்கம் பெற்று இறைவனுடைய திருவடிகளில் ஒன்றாய் கலந்து பேரானந்தத்தை அனுபவித்தல். இந்நிலைக்கு சிவமாம் தன்மை என்று பெயர். சிவமாம் தன்மை என்று சொன்னாலும் சிவனோடு சமமாய் நிற்றல் என்பது பொருள் அல்ல. இறைவனுக்கு அடிமையாய் ஐந்தொழில்கள் செய்யும் ஆற்றல் அற்றதாய் என்றும் பேரானந்தத்தை மட்டுமே அனுபவித்துக் கொண்டு இருக்கும். முக்தி பெற்ற உயிர்கள் மீண்டும் பிறவிக்கு வருவதில்லை.

*69. சீவன் முக்தர் - குறிப்பு தருக.*
முக்தி பெற்றும் இவ்வுடலோடு இவ்வுலகில் வாழும் ஆன்மாக்களுக்கு சீவன் முக்தர்கள் என்று பெயர்.

*70. தசகாரியம் என்றால் என்ன?*
ஞான சாதனையில் முன்னேறும் ஆன்மாக்களிடத்து நிகழும் பத்து வகை செயல்பாடுகளாகும்.
தத்துவரூபம்
தத்துவ தரிசனம்
தத்துவ சுத்தி
ஆன்ம ரூபம்
ஆன்ம தரிசனம்
ஆன்ம சுத்தி
சிவ ரூபம்
சிவ தரிசனம்
சிவயோகம்
சிவபோகம்

சிவனார் வேம்பின் மருத்துவப் பயன்கள்

நிலையில் உள்ள புண்கள், நாள்பட்ட காயங்களையும் ஆற்றும் வல்லமை மிக்கது. கைப்பிடி அளவு சிவனார் வேம்பு இலைகளை நன்கு அலசி, நீர் போக உலர்த்தி, அந்த இலைகளை நன்கு மையாக அரைத்து, உடலில் ஏற்படும் கட்டிகளின் மீது தடவி வர, கட்டிகள் யாவும் உடைந்து விடும், சிலருக்கு கட்டிகள் உடையாமலேயே குணமாகி, மறைந்து விடும்.

சீந்தில் கொடியின் மருத்துவ பயன்கள்


சீந்தில் கொடியின் மருத்துவ பயன்கள்


சீந்தில் கொடி
சீந்தில் என்பது மரங்களில் பற்றி படரும் ஒரு வகை மூலிகைத் தாவரமாகும். தண்டின் மேல் பகுதியில் தடித்த தோல் போன்ற மூடி இருக்கும். தோலுக்கு மேல் மெல்லிய காகிதம் போன்ற படலம் மூடியிருக்கும். இதன் இலைகள் இதய வடிவில் இருக்கும். இவை மரங்களின் மேல் ஏறிப் படரும். இதன் கொடியை அறுத்து விட்டாலும் பட்டு போகாது. காற்றிலுள்ள நீரை உறிஞ்சி வாழும் தன்மையுடையது.

சீந்தில் கொடியின் மருத்துவ பயன்கள்

சீந்தில் கொடிக்கு சோமவல்லி, அமிர்தவல்லி, அமிர்தை, அமிர்தக் கொடி, குண்டலி போன்ற பெயர்களும் உண்டு. அனைத்து விதமான மிதமான மற்றும் உஷ்ண பிரதேசங்களிலும் காணப்படும். குறிப்பாக பெரிய மரங்களில் அதிகம் படர்ந்து காணப்படும். இதன் முழுத் தாவரமும் மருத்துவத்தில் அதிகம் பயன்படுகிறது.


சித்த மருத்துவத்தில் சீந்தில்
சித்த மருத்துவத்தில் சீந்தில் கொடியை கற்ப மருத்துவ குணம்  கொண்டதாக கூறப்பட்டுள்ளது. (கற்ப மருந்து என்பது மனிதன் நீண்ட நாள் உயிர் வாழ உதவும் என்று பொருள்) கிராமங்களில் குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் இருக்க சீந்தில் கொடியின் சிறு துண்டை எண்ணெய்யில் வறுத்து ஆற வைத்து தலைக்குத் தேய்த்து குளிப்பாட்டுவது வழக்கம். ஜலதோஷத்திற்கு சீந்தில் கொடியிலிருந்து மருந்து தயாரிக்கிறார்கள். முற்றிய சீந்தில் கொடியிலிருந்து சீந்தில் சர்க்கரை என்னும் வெண்மையான பொடி தயாரிப்பார்கள். அதற்கு சீந்தில் சர்க்கரை என்று பெயர். சித்த மருத்துவதில் சீந்தில் சர்க்கரை உபயோகப்படுத்தபடுகிறது.

சீந்தில் கொடியின் மருத்துவப் பயன்கள்
பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும்
நீரிழிவு, இருமல், மண்ணீரல் கோளாறுகள், கபம், வாந்தி, காமாலை, ஜுரம், பலவீனம், அஜீரணம், வாதநோய், கிரந்தி போன்ற நோய்களால் பாதிக்கபட்டவர்களுக்கு சீந்திலை கஷாயம் போல செய்து சாப்பிட்டால் பூரண குணம் பெறலாம்.


மூட்டு வலி குணமாகும்
ஆர்த்ரைடிஸ் எனப்படும் மூட்டுவலியால் உண்டாகும் கடுமையான மூட்டு மற்றும் இணைப்பு வலிகளை சீந்தில் கொடி கொண்டு குணமாக்கலாம். சீந்தில் தண்டை பொடி செய்து, பாலில் கலந்து கொதிக்க வைத்து, குடித்தால் மூட்டு வலி பறந்தோடும்.

வீக்கத்தை கரைக்கும்
புண்கள், வீக்கம், கட்டி போன்றவற்றிக்கு சீந்தில் இலையை வாட்டி பற்று போல போட்டால் விரைவில் வீக்கம் மற்றும் புண்களை ஆற்றும். மேலும் சீந்தில் இலையை வேப்ப எண்ணெய்யில் வதக்கி புண்களின் மேல் வைத்துக் கட்டி வந்தாலும் புண்கள் ஆறும். மேலும் சீந்தில் கொடி எல்லா கஷாயங்களிலும் உப பொருளாக பயன்படுத்தபடுகிறது.


பார்வைத்திறன் மேம்படும்
சீந்தில் பொடியை நீரில் கொதிக்க வைத்து அதனை கண்களின் மேல் தடவி வந்தால், கண் பார்வை தெளிவடையும்.

ஆஸ்துமாவை கட்டுபடுத்தும்
சீந்தில் கொடியிலுள்ள ஆன்டி கிளைசமிக் குணங்கள், குளுகோஸ் ரத்தத்தில் அதிகமாவதை தடுத்து, கட்டுக்குள் வைக்க உதவுகிறது. அதே போல், ஆஸ்துமா மற்றும் மூச்சிரைப்பு , வறட்டு இருமல் ஆகிய பிரச்சனைகளை சீர் செய்கிறது.

மயக்கத்தை போக்கும்
வெயில் காலத்தில் வரும் மயக்கம், கிறுகிறுப்பு ஆகிய அனைத்து பிரச்சனைக்கும் சீந்தில் தண்டுச் சாற்றைப் பசும்பாலில் கலந்து உட்கொண்டால் போதும்.

சீந்தில் கொடியின் மருத்துவ குணங்கள்

மலசிக்கலை தீர்க்கும்
சீந்தில் பொடி ஜீரண சக்தியை தூண்டும் தன்மை கொண்டது. மேலும் மலச்சிக்கலை சரி செய்யும். அரை கிராம் சீந்தில் பொடியை நெல்லிக்காயுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

காய்ச்சலுக்கு அருமருந்து
சீந்தில் கொடி அடிக்கடி வரும் காய்ச்சலுக்கு சிறந்த மூலிகை மருந்தாக விளங்குகிறது. இதிலுள்ள மருத்துவ குணங்கள் காய்ச்சலின் அறிகுறிகளை முறியடிக்கிறது. மிகவும் தீவிர காய்ச்சல்களான டெங்கு, மலேரியா மற்றும் ஸ்வைன் ஃப்ளூ ஆகியவை நெருங்க விடாமல் விரட்டி அடிக்கிறது.