Monday, 28 August 2023

துடைப்பம் வாங்கக் கூடாத நாள்.. தெரியாமல் செய்யும் தவறு செல்வத்தை துடைத்து விடும்.. வாஸ்து டிப்ஸ்

நம்முடைய வீட்டில் நாம் சுத்தம் செய்ய பயன்படுத்தும் துடைப்பத்தை எந்த நாளில் வாங்க வேண்டும் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கூட வாஸ்து சாஸ்திரத்தில் கூறுப்பட்டுள்ளது. பயன்படுத்திய பழைய துடைப்பத்தை என்ன செய்யலாம் என்று கூட சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.


துடைப்பம்: வாஸ்துப்படி, துடைப்பத்திற்கு மரியாதை செய்வது அன்னை மகாலட்சுமியை மகிழ்விக்கும். நம்முடைய வீட்டிற்குள் மகாலட்சுமியை வரவழைப்பதோடு வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் நிலைத்திருக்கும். துடைப்பத்தால் வீட்டை சுத்தம் செய்வது முதல் துடைப்பத்தை எங்கு எப்படி வைப்பது என்பது வரைக்கும் சில விதமுறைகளைப் பின்பற்ற வேண்டும். சுத்தம் அன்னை மகாலட்சுமிக்கு மிகவும் பிடிக்கும். ஆகவே துடைப்பமும், குப்பை அள்ளும் முறமும் அவருக்கு மிகவும் பிடித்த ஒன்றாக கருதப்படுகிறது. எனவே துடைப்பத்தையும் குப்பை அள்ளும் முறத்தையும் நாம் சுத்தமாகவே வைத்திருக்க வேண்டும்.



மகாலட்சுமியின் அம்சம்: துடைப்பம் மகாலட்சுமி தேவியின் விருப்பமான ஒன்றாக கருதப்படுகிறது. உங்கள் கனவில் ஒரு புதிய துடைப்பத்தைப் பார்த்தால், அது நல்லதாக கருதப்படுகிறது. வாஸ்துப்படி, இது ஒரு நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளம். இத்தகைய சூழ்நிலையில் வீட்டில் சந்தோஷம், செழிப்பு போன்றவை நிறைந்து இருக்கும். மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்திருக்கும்.

செல்வ செழிப்பு: துடைப்பம் வீட்டின் செழிப்பின் அடையாளமாகும். எனவே இதை எப்போதும் மறைத்து வைக்க வேண்டும். உங்கள் வீட்டிற்கு வரும் யாரும் உங்கள் வீட்டில் உள்ள துடைப்பத்தைப் பார்ப்பது நல்லதல்ல. எனவே எப்போதும் வீட்டிற்கு வெளியே துடைப்பம் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். துடைப்பத்தின் மீது கால் வைத்தால், செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவி கோபப்படலாம். எனவே எப்போதும் துடைப்பத்தை கால் படாத இடத்தில் படுக்க வையுங்கள். துடைப்பத்தை கால்களால் மிதிக்கக் கூடாது. துடைப்பத்தைக்கொண்டு ஒருவரை அடிக்கக் கூடாது.


தலைகீழாக வைக்காதீர்கள்: நம்முடைய வீட்டினை நாம் துடைப்பத்தால் சுத்தம் செய்த பின்னர், பலர் அதை அவசரமாக தலைகீழாக வைப்பார்கள். ஆனால் இப்படி வைப்பது தவறான செயல். சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும். வீட்டில் டென்சனும் அதிகரிக்கும். எனவே எப்போதும் துடைப்பத்தை சரியான இடத்தில் நேராக வையுங்கள். அதுவே நேர்மறை சக்தியை அதிகரிக்கும்.

சுத்தம் அவசியம்: மகாலட்சுமியின் அம்சம் என்பதால் துடைப்பத்தை சுத்தமாகவே வைத்திருக்க வேண்டும். வீட்டினை சுத்தம் செய்யும் போது அதில் முடிகள் சிக்கிக்கொண்டிருக்கும். அந்த முடிகளை எடுத்து குப்பைக்கூடையில் போட்டு விட்டுதான் துடைப்பத்தை சுத்தமாக வைக்க வேண்டும். வீட்டில் இருந்து ஒருவர் வெளியே சென்ற உடனேயே வீட்டை பெருக்குவதைத் தவிர்க்க வேண்டும். இத்தகைய சூழ்நிலையில், அவர் சென்ற பிறது ஒரு மணிநேரம் கழித்து பின்னர்தான் வீட்டை பெருக்க வேண்டும்.சூரிய அஸ்மனத்திற்குப் பிறகு வீட்டில் விளக்கேற்றிய பின்னர் இரவு நேரத்தில் வீடு பெருக்குவதைத் தவிர்க்க வேண்டும்.


பழைய துடைப்பத்தை என்ன செய்வது: சிலபேர் வீட்டை காலி செய்து விட்டு புதிய வீட்டிற்கு செல்லும் போது, இறுதியாக அந்த வீட்டில் இருந்து மொத்தமாக எல்லா பொருட்களும் எடுத்துப் போகக் கூடாது என்று சொல்லி, தங்களிடம் இருக்கும் பழைய துடைப்பத்தை விட்டுவிட்டு செல்வார்கள். அந்த தவறை மட்டும் நீங்கள் செய்து விடாதீர்கள். உங்கள் வீட்டு மகாலட்சுமியை நீங்கள் குடியிருந்த, அந்த வீட்டிலேயே விட்டுவிட்டு செல்வதாக அர்த்தம். எனவே நீங்கள் பயன்படுத்திய பழைய துடைப்பத்தை அடுத்தவர்கள் எடுத்து கூட்ட முடியாத அளவிற்கு, தனித்தனியாக பிரித்து போட்டு விடுவது நல்லது.


எந்த நாளில் துடைப்பம் வாங்கலாம்: செவ்வாய் அல்லது சனிக்கிழமை துடைப்பம் வாங்க சிறந்த மற்றும் மிகவும் மங்களகரமான நாள். இந்த நாட்களில் துடைப்பம் வாங்கினால் மகாலட்சுமியின் ஆசிகள் கிடைக்கும். நமது வீட்டில் செல்வம் பெருகும் பொருளாதார நிலை மேம்படும், லட்சுமி தேவியின் அருள் எப்போதும் பொழியும். அது தவிர பவுர்ணமி முடிந்து தேய்பிறை நாட்களில் செவ்வாய், சனிக்கிழமைகளில் துடைப்பம் வாங்குவது நல்லது.

தானமாக தர வேண்டாம்: பழைய துடைப்பத்தை குப்பையில் தான் போட முடியும். வேறு வழியே இல்லை! என்று சொல்லுபவர்களுக்கு, 'முடிந்தவரை செவ்வாய், வெள்ளி இந்த தினங்களில் குப்பையில் தூக்கி போடாதீர்கள். மற்ற தினங்களில் உங்கள் வீட்டில் இருந்து அகற்றி விடுங்கள். உங்கள் வீட்டில், பயன்படுத்திய துடைப்பத்தை தானமாக கொடுக்க கூடாது. குறிப்பாக உங்கள் வீட்டில் பயன்படுத்தி தேய்ந்து போய், வெளியே தூக்கிப் போடும் நிலையில் இருக்கும் துடைப்பம் கூட கட்டாயம் வேறொருவர் கைக்கு செல்லக்கூடாது. முடிந்தவரை உங்கள் கைகளால் காசுகொடுத்து கூட, யாருக்கும் துடைப்பத்தை வாங்கித் தராதீர்கள்.


எரித்து சாம்பலாக்குங்கள்: தென்னங்குச்சி விளக்குமாறு, பூந்துடைப்பம் போன்ற இயற்கையான துடைப்பங்களை பயன்படுத்துவது நல்லது. இதுபோன்ற பழைய துடைப்பங்களை வெட்ட வெளியில் வைத்து எரித்து விடுவது நல்லது. அது சாம்பலாகி காணாமல் போய்விடும். எனவே பழைய துடைப்பத்தை எரித்து விடலாம் தவறில்லை. அதே நேரத்தில் நாம் பயன்படுத்திய துடைப்ப குச்சிகளை காகம் குருவி பறவை இவைகளெல்லாம் கூடு கட்டுவதற்கு எடுத்துக்கொண்டு போவது நம் குடும்பத்திற்கு நல்ல பலனைத் தருவதாக சொல்லப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment