Monday, 27 November 2023

மாரடைப்புக்கு 3 காரணங்கள்...


இளம் வயதிலேயே பலருக்கும் மாரடைப்பு வருகிறது. உடற்பயிற்சி செய்தவர்கள், உடற்பயிற்சி செய்யாதவர்கள் என பலரும் மாரடைப்பால் பாதிக்கப்படுகிறார்கள். மாரடைப்பு ஏற்படுவதற்கான மூன்று முக்கிய காரணங்கள்

"எதனால் மாரடைப்பு வருகிறது என்று பார்த்தீர்கள் என்றால், இதயம் மனிதனின் இடதுபாகத்தில் இருக்கிறது. இந்த இதயம் ஒரு நிமிடத்திற்கு 72 முறை துடிக்கிறது. ஒரு நாளைக்கு லட்சம் முறை துடிக்கிறது. நாம் 100 வருடம் கடந்து வாழ்கிறோம் என்றால் இதயம் சீராக துடிப்பதே காரணம். இதயம் சீராக துடிப்பதற்கு ரத்தம் ஓட்டம் சீராக இருக்க வேண்டும். அதற்கு கொரோனெரிவெர்செல்ஸ் என்று பெயர். கொரோனெரிவெர்செல்சஸ் தான் வேண்டிய ஆக்சிஜன், நியூட்ரிசியனை இதய தசைகளுக்கு எடுத்து செல்லும்.. இதுதான் சக்தி வாய்ந்த மசில்.

எதிர்மறை எண்ணங்கள்: இதில் முக்கியமான விஷயங்கள் பார்த்தீங்க அப்படீன்னா.. எதிர்மறை எண்ணங்கள்.. எதிர்மறை எண்ணங்கள் என்ன என்று பார்த்தால், எப்ப பார்த்தாலும், கோபமாக, டென்சனாக, ஆத்திரத்துடன், பொறாமையுடன், போட்டியுடன் எதிர்மறை எண்ணங்கள் வரும் போது, அட்ரினல் என்ற ஹார்மோன் சுரக்கிறது.. அட்ரினல் என்ற ஹார்மன் சுரக்கும் போது, உடனே அவன் வந்து கொழுப்பான உணவுகளை சாப்பிட தூண்டப்படுவான்.. கொழுப்பான உணவு சாப்பிட்ட உடன் அவன் உடல் உடனே பருமானாகிவிடும்.. இந்த லெவலில் போகும் போது, அவன் உடற்பயிற்சியை தவிர்த்து விடுவான்..

மது புழக்கம், புகைப்பழக்கம்: உடனே அவன் நினைத்து கொள்வான்.. மகிழ்ச்சி என்ற ஒன்றை அடைவதற்கு, புகைப்பிடிப்பதும், மது அருந்துவதும் வழி என நினைப்பான். அது மகிழ்ச்சி தருவதாக மாய உணர்வில் சேர்ந்துவிடுவான்.. அப்படி சேர்ந்தால், இந்த நான்கு போய் (எதிர்மறை எண்ணங்கள், கொழுப்பு உணவுகள், மது, புகை) ரத்தத்தில் கொழுப்பு, சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் இது தொடர்ச்சியாக வரும்.

மாரடைப்புக்கு 3 காரணங்கள்: எதிர்மறை எண்ணங்களால் அட்ரினல் சுரபி சுரக்கும் போது, கொஞ்சம் கொஞ்சமாக கொழுப்பு ரத்த குழாயில் படிந்து விடுகிறது. எப்பொழுது அட்ரினல் சுரப்பால் கொழுப்பு ரத்த குழாயில் படிக்கின்றதோ அதுதான் ரத்த குழாய் அடைப்பு.

இளம் வயது மாரடைப்பு: 20, 25 வயதில் ஹார்ட் அட்டாக் வருகிறது என்று சொல்கிறார்களே ஏன் தெரியுமா? ரத்த குழாயில் கொழுப்பு படிவது மட்டுமின்றி, இரத்தம் உறைந்துவிடும்.. அது இரண்டு நிமிடத்தில் கூட உறைந்துவிடும்.. இல்லாவிட்டால் இந்த இரத்த குழாய் வேகமாக சுரங்குவதும் இந்த மூன்று தான் இதய அடைப்புக்கு காரணமாகிறது. அதாவது ரத்தக்குழாய் அடைப்பது, ரத்தம் உறைவது, ரத்தகுழாய் வேகமாக சுரங்குவது இந்த மூன்று தான் மாரடைப்பு என்ற கொடிய நோய்க்கு காரணம். பொறாமை இல்லாமல் மகிழ்ச்சியோடு வாழ்வது மாரடைப்பு வராமல் காக்கும்".

3 comments:

  1. Wed. 29, Nov. 2023 at 7.35 pm.

    *இதயம் :*

    இன்று இதயம் பற்றி ஒரு சிறப்பு பதிவாக பார்க்கலாம்.

    *இதயத்தின் அமைப்பு :*

    (படிக்கும்போதே, இதயத்தை கண்முன் கொண்டு வந்து படியுங்கள்.)

    * இதயம், தசைத் திசுவாலான, கூம்பு வடிவமான , உள் வெற்றிடம் கொண்ட ஒர் உறுப்பு ஆகும்.

    * இதன் அகன்ற பாகம் மேற்பக்கமாகவும், குறுகிய பாகம் கீழ்ப்பக்கமாகவும் அமைந்திருக்கும். மட்டுமின்றி, இடது புறம் சாய்ந்தும், இரு நுரையீரல்களுக்கு இடையிலும் அமைந்திருக்கின்றன.

    * இதயமானது, இடது மற்றும் வலது பக்கம் என 2− பாகங் களாக, "செப்டத்தால்" அதாவது பிரிச்சுவரால் பிரிக்கப் பட்டுள்ளன.

    * மேலும், 4− அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

    அவை...

    * வலது ஆரிக்கிள் − இடது ஆரிக்கிள்,
    வலது வெண்டிரிக்கிள் − இடது வெண்டிரிக்கிள்.

    * ஆரிக்கிள்கள் மேலாகவும், வெண்ட்ரிக்குகள் கீழாகவும் உள்ளன.

    * ஆரிக்கிள்கள் மிகவும் மெல்லிய சுவரால் ஆனது.

    * வெண்ட்ரிக்குகள் மிகவும் தடித்த சுவரால் ஆனது.

    * இந்த ஆரிக்கிள்களுக்கும், வெண்ட்ரிக்கிள்களுக்கும் இடையில், *ஆரிக்கிளோ வெண்ட்ரிக்குலார்* திறப்பு உள்ளது. இதில் வால்வுகள் உள்ளன.

    * வலது ஆரிக்கிளோ வெண்ட்ரிக்குலார் வால்வு *மூவிதழ் வால்வு* (Tricuspid valve) என்றும்,
    இடது ஆரிக்கிளோ வெண்ட்ரிக்குலார் வால்வு *ஈரிதழ் வால்வு* (Bicuspid valve) என்றும் அழைக்கப்படுகிறது.

    * அடுத்து, இந்த வால்வுகள் ஒரு போக்கு வால்வுகளாக செயல்படுகிறது.

    * போக்கு வால்வுகளாக என்றால்... இவை இரத்தத்தை ஆரிக்கிளிலிருந்து, வெண்ட்ரிக் கிளுக்கு அனுப்புமேத் தவிர, வெண்ட்ரிக்கிளிலிருந்து , ஆரிக்கிள்களுக்குச் செல்ல விடாது.

    * வெண்ட்ரிக்குகள் சுவரின் உட்பக்கமானது தடித்த தசையால் ஆனது. இவை *பேப்பிலரி* தசைகளாக நீட்டிக் கொண்டு இருக்கும்.

    * இதன் முடிவில் மெல்லிய தசைநார்கள் உள்ளன. இதற்குப் பெயர், *கார்டே டெண்டினே* என்று பெயர்.

    * இவைகள் ஆரிக்கிளோ வெண்ட்ரிக்குலார் வால்வு களின் அடிப்பாகத்தில், இரண்டாம் இணைப்பைக் கொண்டுள்ளது. இதனது பணி,வெண்ட்ரிக்குகள் சுருங்கும் போது, வால்வுகளை ஆரிக்கிளுடன், அழுந்தவிடாத படிக்கு தடுக்கிறது.

    * மேற்பெருஞ்சிரை, கீழ்ப்பெருஞ்சிரை மூலம் இதயத்தின் வலது ஆரிக்கினுள், அசுத்த இரத்தம் கொண்டுவரப் படுகிறது.

    * மேலும், வலது வெண்ட்ரிக்கிளிலிருந்து, நுரையீரல் தமனியானது, அசுத்த இரத்தத்தை, சுத்தம் செய்வதற்காக, நுரையீரலுக்கு எடுத்துச் செல்கிறது.

    * சுத்தம் செய்யப்பட்ட இந்த இரத்தமானது, 4−நுரையீரல் சிரை மூலமாக, இடது ஆரிக்கிளை அடைகிறது.

    * இடது வெண்ட்ரிக்கிளி லிருந்து, *மகாதமனி* மூலம், இரத்தமானது, உடலின் எல்லாப் பாகங்களுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது.

    * இந்த மகாதமனி, நுரையீரல் தமனியாகிய இரு பெரும் இரத்தக் குழாய்களின் திறப்பும், அர்த்த சந்திர வால்வுகளால், அதாவது பிறை வடிவ வால்வு களால் காக்கப்படுகிறது.

    * இந்த வால்வானது, ஒரு வழியாக மட்டுமே, இரத்தத்தை அனுப்பும் தன்மை கொண்டது.

    ReplyDelete
  2. அவை....!

    * வெளி பெரிகார்டியம்
    * நடு மயோகர்டியம்
    * உள் எண்டோகார்டியம்.

    இதில், இதய வெளி உறையான பெரிகார்டியம், இதயத்தை சூழ்ந்து இருக்கும். இவை 2−அடுக்குகளால் ஆனது.

    இந்த அடுக்குகளுக்கு இடையில் , *பெரிகார்டியல் திரவம்* காணப்படும்.


    அடுத்ததாக....!

    *இதயம் இயங்கும் விதத்தைப் பார்க்கலாம்...!*

    * சற்றே கவனியுங்கள்... இதயத்தின் 4− அறைகளும், ஒரே நேரத்தில் சுருங்குவது இல்லை.

    * ஆரிக்கிள்கள் சுருங்கும் போது, வெண்ட்ரிக்குகள் சுருங்குவது இல்லை. மாறாக, விரிவடைகிறது.

    வெண்ட்ரிக்குகள் சுருங்கும் போது, ஆரிக்கிள்கள் விரிவடை கின்றன.

    * இவ்வாறு, இரு அறைகளும் சுருங்கி, விரிவடையும் நிலை தான் இதயத்தின் முழு இயக்கம் ஆகும்.(Cardiac Cycle)

    மேலும்.... ஆரிக்கிள்கள் விரிவடையும் பொழுது, கீழ் பெருஞ்சிரை மற்றும் மேல் பெருஞ்சிரை மூலமாக, உடலின் எல்லாப் பாகங்களில் இருந்தும், அசுத்த இரத்தமானது, வலது ஆரிக்கிளை வந்தடைகிறது.

    *அதே சமயத்தில், நுரையீரலில் சுத்தம் செய்யப்பட்ட இரத்தமானது, 4− நுரையீரல் சிரைகள் மூலமாக. இடது ஆரிக்கிளை வந்தடைகிறது.

    * இப்போது, ஆரிக்கிள்கள் சுருங்கி, வெண்ட்ரிக்குகள் விரிவடைகின்றன.

    * இவ்வாறு, விரிவடையும் போது, மூவிதழ் வால்வு திறந்து, வலது ஆரிக்கிளிலிருந்து,அசுத்த இரத்தமானது, வலது வெண்ட்ரிக்குகளை வந்தடை கிறது.

    *அதே சமயத்தில் ஈரிதழ்வால்வு திறப்பதன் மூலம், இடது ஆரிக்கிளிலிருந்து, இடது வெண்ட்ரிக்குகளுக்கு, சுத்த இரத்தம் வந்தடைகிறது.

    * இந்த ஆரிக்கிளோ வெண்ட்ரிக்குலார் வால்வு திறக்கும் போது, அர்த்த சந்திர வால்வு மூடிக் கொள்ளும்.

    அடுத்தபடியாக.... ஆரிக்குகள் விரிவடைகின்றன. வெண்ட்ரிக்குகள் சுருங்குகின்றன. இந்த நேரத்தில் ஆரிக்கிளோ வெண்ட்ரிக்குலார் வால்வு மூடிக் கொள்ளும். அர்த்த சந்திர வால்வு திறக்கும்.

    * வலது வெண்ட்ரிக்குகளிலிருந்து ,அசுத்த இரத்தம், சுத்தம் செய்யப் படுவதற்காக, நுரையீரல் தமனிக்குச் சென்று, நுரையீரலுக்குச் செல்லும். அதே சமயத்தில் , இடது வெண்ட்ரிக்கிளிலிருந்து, சுத்த இரத்தம், மகாதமனி மூலம், உடலின் எல்லா பாகத்திற்கும் எடுத்துச் செல்லப்படுகிறது.

    இவ்வாறாக... இரத்தமானது, இருதயத்திலிருந்து நுரையீரலுக்கும், அங்கிருந்து இதயத்திற்கும் வந்து, உடலின் எல்லாப் பாகங்களுக்கும் , எடுத்துச் செல்லப்படுவது, தொடர்ந்து, இடைவிடாது, நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.

    இவ்வாறு, இந்த நிகழ்ச்சி யானது, 1−முறை நடைபெறு வதற்கு எடுத்துக் கொள்ளப் படும் நேரம் 0.8−விநாடிகள். இந்நிகழ்ச்சி, 1−நிமிடத்திற்கு 72−தடவைகள் நடைபெறுகிறது.

    *மீண்டும் இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் காணலாம்.*
    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  3. Thu. 30, Nov. 2023 at 7.47 pm.

    *இதயம் தொடர்ச்சி :*

    கடந்த பதிவில், இரத்தமானது, இருதயத்திலிருந்து நுரையீரலுக்கும்,நூரையீரலில் இருந்து இதயத்திற்கும் வந்து, உடலின் எல்லாப் பாகங்களுக்கும் எடுத்துச் செல்லப்படுவது, தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது என பார்த்தோம்.

    *தொடர்ந்து....*

    *நாடித் துடிப்பு :*

    * இடது வெண்ட்ரிக்குகள் சுருங்கும் சமயத்தில், இரத்த மானது, மகாதமனி வழியாக, கிளை தமனிகள் மூலம் உடலின் எல்லாப் பாகங்களுக் கும் எடுத்துச் செல்லப் படுகிறது.

    * இரத்தம் தமனிகளில், அலை அலையாக செல்லும் பொழுது, தமனிகள் சுருங்கி விரிவதே *நாடித்துடிப்பு* ஆகும்.

    * ஓய்வு நிலையில், நாடித்துடிப் பானது, ஒரு நிமிடத்திற்கு 70 முதல் 80 வரை இருக்கும்.

    *அடுத்ததாக...*

    *இருதய ஒலிகள் :*

    * இதய வால்வுகளின் இயக்கத்தை தெளிவாக இருதய ஒலிகள் உணர்த்துகிறது.

    இவ்வொலியில், 2−வித ஒலிகள் இருக்கின்றன.

    அவை....!
    *லப்(Lubb) ; டப் (dupp)*

    இந்த முதல் ஒலியான *லப்* என்பது, வெண்ட்ரிக்குகள் சுருங்கும்போது ஆரிக்கிளோ வெண்ட்ரிக்குலார் வால்வு மூடிக் கொள்வதால் எழும் ஒலியாகும்.

    அடுத்த ஒலியான, *டப்* என்பது, வெண்ட்ரிக்கிள்கள் விரிவடை யும் போது , அர்த்த சந்திர வால்வு, மூடிக் கொள்ளும்போது எழும் ஒலியாகும்.

    *இந்த வால்வுகள், தனது பணியை, ஒழுங்காக செய்யா விட்டால், முரண் ஒலிகள் (Murmur) எழும்.*

    * அடுத்ததாக...
    *இரத்த அழுத்தம் :*

    * இரத்தமானது, இரத்த நாளங்களின் சுவர்களில் ஏற்படுத்தும் அழுத்தமே, இரத்த அழுத்தம் என்பதாகும்.

    இது சாதாரணமாக..
    *120/80mm Hg என்று கொள்ளப்படுகிறது.*

    *இதில் 120 என்பதானது,"சிஸ்டோலிக் அழுத்தம்".*

    *80 என்பதானது, "டயஸ்டோலிக் அழுத்தம்.*

    ஆஹா...! பதிவு ருசியாக, ரசனையாக இருக்கிறதா ? மனித உடலின் அற்புதம் இது.

    * இந்த சிஸ்டோலிக் அழுத்தம் என்பது, வெண்ட்ரிக்குள்கள் சுருங்கும் போது ஏற்படுகிறது.

    * டயஸ்டோலிக் அழுத்தமானது,வெண்ட்ரிக்குகள் விரிவடையும் போது ஏற்படுகிறது.

    *சாதாரணமாக, சிஸ்டோலிக் அழுத்தம் 100 முதல் 140 வரை இருக்கலாம்.*

    *டயஸ்டோலிக் அழுத்தம், 70 முதல் 90 வரை இருக்கலாம்.*

    * இதற்கு மேல் அதிகரித்தால்., அதிகுருத அழுத்த நோயும், குறைந்தால், குறை குருதி அழுத்த நோயும் உண்டாகும்.

    அடுத்ததாக..

    *இரத்தக் குழாய்கள் அல்லது இரத்த நாளங்கள் :*

    இந்த இரத்தக் குழாய்கள் 3−வகைப்படும்.

    *தமனி (Artery).*
    *சிரை (Vein).*
    *தந்துகி கள் (Capiuary)

    * இந்த தமனியின் வேலை... நம் உடலில் நுரையீரல் தமனி தவிர, மற்ற அனைத்து தமனிகளும், சுத்த இரத்தத்தை எடுத்துச் செல் லும்.

    * சிரை யின் வேலை ... நம் உடலில் நுரையீரல் சிரை தவிர, மற்ற அனைத்து சிரைகளும், அசுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும்.

    * தந்துகிகளின் என்பது, தமனி மற்றும் சிரைகளின் நுண்ணிய கிளைகள், தந்துகள் எனப்படும்.

    * இவற்றின் வேலை, ஒவ்வொரு செல்களுக்கும் இரத்தத்தைக் கொண்டுச் செல்லும்.*

    ஆஹா... எவ்வளவு முக்கியமான பணிகள்... !

    இவையே இதயம் பற்றியதான விளக்கம் ஆகும்.

    மீண்டும் சந்திக்கலாம் !
    Jansikannan60@gmail.com

    ReplyDelete