Monday, 13 November 2023

வேர்க்கடலை நல்லதா? கெட்டதா? பச்சை வேர்க்கடலை நல்லதா? கெட்டதா? சர்க்கரை நோயாளிகள் வேர்க்கடலை சாப்பிடலாமா? வேர்க்கடலையை எப்படி சாப்பிட்டால் நல்லது?

வேர்க்கடலையை சாப்பிட்டால், கொழுப்பு சத்தும் அதிகரிக்கும் என்று பரவலாக சொல்வார்கள்.. உண்மையை சொல்லப்போனால், கெட்ட கொழுப்புகளை நீக்கி, நல்ல கொழுப்புகளை அதிகரிக்க செய்வது இந்த வேர்க்கடலையாகும். பித்தப்பை கற்களையும் கரைக்க உதவுகிறது.
கலோரிகள்: மொத்த கலோரிகளில் கிட்டத்தட்ட 25 சதவீதம் புரோட்டீன் உள்ளதாம்.. அதனால் மிகச்சிறந்த புரதத்தின் ஆதாரமாக இந்த வேர்க்கடலை உள்ளது. அத்துடன், கார்போஹைட்ரேட்டுகளும் மிகவும் குறைவு.. நார்ச்சத்தும் அதிகம் உள்ளதால், உடல் எடையை நிர்வகிப்பதில், வேர்க்கடலை பெஸ்ட் சாய்ஸாக உதவுகிறது.

ரத்த நாளங்களை வேர்க்கடலை பாதுகாப்பதால், இதய ஆரோக்கியமும் மேம்படுகிறது.. ரத்த அழுத்தம் மட்டுமல்லாமல், கொலஸ்ட்ரால் அளவையும் இந்த கடலை கட்டுப்படுத்துகிறது.. முதுமை தோற்றத்தை நீக்கி, இளமையை தக்கவைக்கிறது இந்த வேர்க்கடலை.. காரணம், வைட்டமின் C, E இரண்டுமே உள்ளதால், சருமத்துக்கு கவசம்போல இந்த வேர்க்கடலை உதவுகிறது. சருமத்திலுள்ள காயங்களையும் குணப்படுத்தும் திறன் இந்த கடலைக்கு உள்ளது. தலைமுடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

பெண்கள்: எலும்புகள் தேய்மான பிரச்சனை இருப்பவர்கள், கால்சியம் குறைபாடு உள்ளவர்கள், வேர்க்கடலையை தவிர்க்கக்கூடாது.. மாங்கனீசு, பாஸ்பரஸ், வைட்டமின் B1, நியாசின், போலேட், ஓலிக் அமிலங்கள் என ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்த வேர்க்கடலை பல்வேறு நன்மைகளை பெண்களுக்கு தரக்கூடியது.. பெண்களின் நரம்பு மண்டலத்தை பலப்படுகிறது..
வேர்க்கடலையை சாப்பிடுவதால், ஞாபக சக்தி அதிகமாகும். அதனால்தான், குழந்தைகளுக்கு இந்த வேர்க்கடலையை சாப்பிட தருகிறார்கள். புற்றுநோய் செல்களை தாக்கி அழிக்கும் சக்தி இந்த கடலைக்கு உள்ளதுஅவித்த வேர்க்கடலை: வேர்க்கடலையை எப்படி சாப்பிட வேண்டும் என்றே ஒரு முறை இருக்கிறதாம். அதாவது, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாமே தவிர, எண்ணெய்யில் போட்டு வறுத்து சாப்பிட கூடாது. அதேபோல, உப்பு சேர்த்து சாப்பிடக்கூடாது. இதனால், உடலில் சோடியம் அதிகமாகிவிடக்கூடும்.. எனவே, ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்கள், இதை தவிர்க்கலாம். அதேபோல,

ஹைப்போ தைராய்டிசம் இருப்பவர்களும், கல்லீரல் பிரச்சனை இருப்பவர்களும், அலர்ஜி இருப்பவர்களும் வேர்க்கடலையை குறைத்து கொள்ள வேண்டும்.. அலர்ஜி பிரச்சனை முதல் சுவாசம் பிரச்சனை வரை வரலாம்.. சர்க்கரை நோயாளிகளும், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களும், வாரம் ஒருமுறை, ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிட்டால் சிறந்தது என்கிறார்கள்
அதுவும், 6 மணி நேரம் ஊறவைக்கப்பட்ட வேர்க்கடலையை சாப்பிட வேண்டுமாம்.. ஊறவைக்காமல் சாப்பிட்டால் பித்தம் அதிகமாகிவிடும்.. இதுவே ஊறவைத்து சாப்பிட்டால், பித்தம் நீங்கிவிடும். ஊறவைத்து, நீரை வடிகட்டி சாப்பிட வேண்டும். அதேபோல, வேர்க்கடலையை கஞ்சியாக அல்லது வாழைப்பழம், தேன் சேர்த்து சாப்பிடுவதால், கூடுதல் பலம் கிடைக்கும். அல்லது, வாழைப்பழத்துடன், சிறிது வெல்லம், ஒரு டம்ளர் மோர் குடித்தாலே அது அன்றைய தினம் பேலன்ஸ் டயட்டாக திகழ்ந்துவிடும்.

வேர்க்கடலையை கொறிக்கக்கூடாது.. அப்படியே விழுங்கவும் கூடாது.. இது செரிமானமாக தாமதமாகும் என்பதால், மெதுவாக மென்றுதான் சாப்பிட வேண்டும். வறுத்த வேர்க்கடலையைவிட அவித்த வேர்க்கடலை நல்லது.. கசப்பாக இருக்கும் வேர்க்கடலையை சாப்பிடக்கூடாது. இது வயிறு உபாதைகள் உட்பட பல்வேறு தொந்தரவுகளை தரலாம்

No comments:

Post a Comment