Wednesday, 15 November 2023

குண்டு குண்டுன்னு இருக்கீங்களா.. கொண்டைக்கடலையை.. இப்படி ஊறவெச்சு சாப்பிடுங்க.. சர்னு குறையும் வெயிட்

குண்டு குண்டுன்னு இருக்கீங்களா.. கொண்டைக்கடலையை.. இப்படி ஊறவெச்சு சாப்பிடுங்க.. சர்னு குறையும் வெயிட்

சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், கட்டாயம் சாப்பிட வேண்டிய பயிறுதான் கொண்டைக்கடலை.. நோய் எதிர்ப்பு சக்தியை அபரிமிதமாக தரும் இந்த பயிறு பற்றின நன்மைகள் என்னென்ன தெரியுமா?


புரோட்டீன், மாவுச்சத்து, கலோரி, ஃபோலிக் ஆசிட், நார்ச்சத்து, தாது உப்புக்களான கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஷியம், சோடியம், பொட்டாஷியம், தாமிரம், துத்தநாகம் என அத்தனையும் அடங்கியதுதான் கொண்டைக்கடலை.


1 கப் கொண்டைக்கடலையில் 12.5 கிராம் நார்ச்சத்து இருக்கிறதாம்.. அதனால்தான், உடல் எடையை குறைப்பதில், இந்த பயிறுக்கு முக்கிய பங்குண்டு..


கொழுப்பு சத்துக்கள்: ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை தடுப்பதுடன், வயிற்றில் குடல் பகுதியில் வரும் புற்றுநோயை தடுக்கக்கூடிய தலைசிறந்த பணியை இந்த கடலை செய்கிறது.. ஓரளவு கொழுப்பு இருந்தாலும்கூட, சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், சாப்பிடக்கூடிய பயிறு வகையாகும்.. கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த பயிறு நல்லது.

தினமும் 30 கிராம் நார்ச்சத்து எடுத்துக்கொண்டால், டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் வீக்கத்தை குறைப்பதாக 2014 ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் நிரூபிணம் செய்யப்பட்டுள்ளது.

கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கொண்டை கடலை எளிதாகவே கிடைக்கும்.. இதில், சிறிய அளவிலான கறுப்பு கொண்டைக் கடலையில் நிறைய நார்ச்சத்து இருக்கிறதாம். அதனால், இந்த கடலையை முளைக்கட்டி சாப்பிடும்போது, கொழுப்பு வெகுவாக கரைந்துவிடுகிறது.. இதிலுள்ள கால்சியம் எலும்பு மற்றும் பற்களின் வலிமையை அதிகரிக்க செய்கிறது..


புற்றுநோய்: அதேபோல, மார்பக புற்றுநோய் செல்களுக்கு எதிராகவும் போராடக்கூடியது இந்த பயிறு.. ஹீமோகுளோபின் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் இந்த கொண்டைக்கடலையை முளைகட்டி சாப்பிட்ட வரலாம்.. அல்லது, கொண்டைக்கடலையை வேகவைத்து, அரைத்து, பாலில் கலந்து சாப்பிட்டாலும், நல்ல பலத்தை கொடுக்கும்..

தலைமுடி உதிர்வு நிறைய இருப்பவர்கள், புரோட்டீன் அதிகமுள்ள இந்த கொண்டைக்கடலையை சாப்பிட்டு வரலாம்.. அடிக்கடி சமையலில் கொண்டைக்கடலையை சேர்த்து வந்தால், தலைமுடியும் சீக்கிரத்தில் நரைக்காது..

அதேபோல, சரும ஆரோக்கியத்தையும் இந்த பயிறு பாதுகாப்பதால், முதுமை தோற்றமும் தள்ளிப்போடப்படுகிறது. கருப்பு கொண்டைக்கடலையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சரும ஆரோக்கியத்திற்கும் நன்மை தரக்கூடியது.



வாதநோய்: ஆனால், காலையில் கொண்டைக்கடலையை சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும்.. சிறுநீரகக்கோளாறு இருப்பவர்கள், கண்டிப்பாக இதனை தவிர்க்க வேண்டும். அதேபோல, வாத நோய் உள்ளவர்கள், மூல நோய் உள்ளவர்கள், மலச்சிக்கல் உள்ளவர்களும் இதனை தவிர்க்க வேண்டும். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அஜீரணம் ஏற்படும்.. வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை ஏற்படலாம்.


No comments:

Post a Comment