Sunday 26 November 2023

குங்குமப் பூ...


மினுமினுக்கும் குங்குமப்பூ.. பெண்ணின் வரப்பிரசாதம்.. இல்லறத்தை மலரவைக்கும் பூ.. அதிசய குங்குமப் பூ
வயதானவர்களுக்கு அருமருந்தாவது இந்த குங்குமப்பூக்கள்.. குறிப்பாக பெண்களுக்கு பயன்படும் அத்தனை மகத்துவமும், மருத்துவமும் இந்த குங்கும பூவில் நிறைந்துள்ளன.

குரோசின், பிக்ரோகுரோசின், சாப்ரனால் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்த குங்குமப்பூக்கள் சித்த மருத்துவத்தில் மிக முக்கிய இடத்தை பெற்று வருகிறது.. இந்த பூவை வைத்து ஆராய்ச்சி நடந்துள்ள அளவுக்கு வேறு பூக்களில் நடந்திருக்குமா என்று தெரியுமா? இப்போதுவரை ஏகப்பட்ட ஆராய்ச்சிகள் நடந்துள்ளன.. நடந்து முடிந்த ஆராய்ச்சிகளில் பலவித மருத்துவ உண்மைகள் நிரூபணமாகி உள்ளன.

Do you know Excellent Benefits of Saffron and Saffron is the Best medicinal Herbal for Women
மன அழுத்தம்: அந்தவகையில், மன அழுத்தத்தை போக்குவதற்கான குணங்கள் இந்த குங்குமப்பூவில் இருக்கிறதா.. குங்குமப்பூவை 6 வாரங்கள் தந்து, ஆய்வு நடத்தப்பட்டுள்ளதில், அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன அழுத்தம் குறைந்திருந்தது கண்டறியப்பட்டதாம். இந்த பூக்களை மருந்தாக சாப்பிடும்போது, செரடோனின் என்ற பொருள் நம்முடைய உடலில் சுரப்பதன் மூலம் மன உளைச்சல் நீங்குகிவதாக கூறுகிறார்கள்.




மன அழுத்தம் மட்டுமல்ல, பதட்டம், டென்ஷன், மனம் தளர்ச்சி, ஞாபக மறதி போன்ற நரம்பு மண்டல சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை இந்த குங்குமப்பூ தடுக்கிறதாம்.. அத்துடன், நினைவாற்றலையும் அதிகப்படுத்துகிறது.

இல்லற வாழ்வு: இல்லற வாழ்வுக்கு இந்த குங்குமப்பூக்கள், பெரும்பங்கு வகிப்பதை மறுக்க முடியாது. இந்த பூக்களை தூள் செய்து, குறிப்பிட்ட அளவு சாப்பிட்டு வந்தால், ஆண்களின் உயிரணுக்கள் உற்பத்தி அதிகரிக்கிறதாம்.

மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு ஏற்படும் இன்னல்களை இந்த பூக்கள் தீர்க்கின்றன.. அதிலும் மெனோபாஸ் நேரத்தில் ஏற்படும் மன அழுத்தம், உடல்சோர்வு போன்ற பிரச்சனைகளை தீர்ப்பதுடன், முதுமையையும் தள்ளிப்போடக்கூடிய பண்புகள் குங்குமப்பூக்களுக்கு உள்ளது. நரம்பு மண்டலத்திற்கு தேவையான அத்தனை நன்மைகளும் இந்த பூக்களில் உள்ளன. புற்றுநோயை தடுப்பதிலும் இந்த பூவின் பங்கு மிக அதிகம்..

உடல் எடை: ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இந்த பூக்கள் கொலஸ்ட்ராலை குறைக்கின்றன.. பசியை தடுக்கின்றன.. அதனால்தான், உடல் எடையை குறைக்கவும் இந்த பூக்களை பயன்படுத்துகிறார்கள். அதனால்தான், கருவுற்ற பெண்களுக்கு இந்த பூக்களை பாலில் கலந்து தருவார்கள். இதனால், தாய்க்கும், வயிற்றிலுள்ள குழந்தைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும். இதய தமனிகளில் ஏற்படும் அடைப்புகளை நீக்குவதால், ரத்த அழுத்தமும் கட்டுப்படுகிறது.. மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாயங்களும் நீங்குகின்றன.

சைனஸ் இருப்பவர்கள், மற்றும் மூக்கடைப்பு, தலைவலி பிரச்சனை இருந்தால், குங்குமப்பூவை பாலுடன் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்று போட்டால், நிவாரணம் கிடைக்கும். அதேபோல, சருமத்தின் பாதுகாவலனாக இந்த பூக்கள் திகழ்கின்றன..


பருக்கள், தழும்புகள், போன்றவற்றிற்கு இந்த பூக்களை அரைத்து தடவலாம். இதனால் முகமும் பொலிவு பெறும். அதனால்தான், சருமத்துக்கு உபயோகப்படுத்தும், அழகு தயாரிப்புகளிலும், மூலப்பொருட்களாக இந்த குங்குமப்பூக்கள் இன்றும் சேர்க்கப்படுகின்றன.

சரும பாதுகாப்பு: சருமத்துக்கு உபயோகமாக இருப்பதைபோலவே, தலைமுடிக்கும் இந்த பூக்கள் உதவுகின்றன. வெறுமனே குங்குமப்பூவை தண்ணீரில் கலந்து குடிப்பதாலே, தலைமுடி வலுவடைவதுடன், முடிஉதிர்வதும் நின்றுவிடும்.

நன்மைகள் பல இருந்தாலும், அதிகமாக இந்த பூக்களை எடுத்து கொண்டால், வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு உபாதைகள் வரலாம். அதேசமயம் டாக்டர்களின் ஆலோசனைகளை பெறாமல், மருந்தாக யாருமே உட்கொள்ளக்கூடாது


2 comments:

  1. அய்யா வெ.சாமி அவர்களுக்கு நமஸ்காரம். அடியேன், 2023−ஆம் வருட திருக்கார்த்திகை திருவிழா வாழ்த்து வேண்டி பதம் பணிகிறேன். ஆசீர்வதியுங்க... அய்யா.

    ReplyDelete
  2. Fri. 8, Dec. 2023 at 10.45 pm.

    *குங்குமப் பூ (Crocus Sativus) :*

    * குங்குமப் பூ, காஷ்மீர் மாநிலத் தில் பயிரிடப் பெறும், ஒரு சிறு செடி இனம்.

    * இதனின் மகரந்தத் தாள்களே மருத்துவப் பயனுடையவை.

    * செம்மஞ்சள் நிறமுடைய இப் பூ.. நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

    *இதனின் குணம்... நாவறட்சி, தாது நட்டம், குடல் வாதம், கீல் பிடிப்பு, கபஆதிக்கம், விருண வாதம், பயித்தியம், தலைவலி, கண் சம்பந்தப்பட்ட நோய்கள், கண்ணில் பூ விழுதல், காது மந்தம், வாந்தி, வாயினிப்பு, பிரசவமலினம், மேக நீர் ஆகியன நீங்கும்.*

    * இதனின் செய்கை..
    *அங்காகர்ஷணநாசினி, உதர வாதஹரகாரி, உற்சாககாரி,காமவிர்த்தினி, ருதுவர்த்தன காரி.

    * இதனில், அங்காகர்ஷண நாசினி என்பது, இசுவு ரோகங்களைத் தடுக்கும் மருந்து. (Antispasmodic).

    * உதரவாதஹரகாரி என்பது (Carminative), வயிற்றில் உஷ்ணத்தை உண்டாக்கி வாயுவைக் கண்டிக்கும்.

    * உற்சாககாரி என்பது, (Stimulant) நாடி நடையையும், சரீரத்தில் உஷ்ணத்தையும் அதிகரிக்கும்.

    * காமவிர்த்தினி என்பது (Aphrodisiac ) காமத்தை அதிகப் படுத்தும் மருந்து.

    * ருதுவர்த்தனகாரி என்பது (Emmenagogue) சுரோணி தத்தை வெளியாக்கி, சுபாவத் தன்மைக்கு கொண்டு வரும் மருந்து.

    *உபயோகிக்கும் முறை :*

    * ஒரு குன்றிமணி அளவு தாம்பூலத்துடன் சேர்த்து வர, கர்ப்பமுள்ள ஸ்திரீகளுக்கு, சீதள சம்பந்தமான நோய்கள் அணுகாது.

    * ஒரு விராகனெடை குங்குமப் பூவை 3− அவுன்ஸ் பெருஞ்சீரகக் கியாழத்தில் (சோம்பு) கரைத்து, உள்ளுக்குள் கொடுக்க எளிதாக பிரசவமாகும்.
    (குறிப்பு : 1விராகனெடை என்பது, 32 குன்றிமணிகள்.)

    * இரண்டு விராகனெடை குங்குமப் பூவை, நீர் விட்டு அரைத்து உள்ளுக்குள் கொடுக்க, வயிற்றினுள் மரித்த குழந்தை வெளியாகும்.

    * அதுபோல், வேளைக்கு மூன்று குன்றிமணி அளவு, குங்குமப் பூவை, தினம் 3− வேளை வெற்றிலையில் வைத்துத் தின்னும்படி கொடுக்க, பிரசவித்த ஸ்திரீகளுக்கு உண்டான உதிரச் சிக்கலை வெளியாக்கும்.

    * தாய்ப்பாலில், குங்குமப் பூவை அரைத்து, கரைத்து, வடிகட்டி கண்களில் இரண்டொரு துளி விட, கண்ணீர் முட்டல் குணமாகும்.

    * குங்குமப் பூவை தாய்ப் பாலிட்டு அரைத்து, நெற்றிக்குப் பற்றுப்போட தலைவலி நீங்கும்.

    இதனை மாத்திரையாகவும் செய்து பயன்படுத்தலாம்.

    *மாத்திரை தயார் செய்ய சேர்க்க வேண்டிய சரக்குகள்...*

    *சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், கிராம்பு, சாதிக்காய், கடுக்காய், தான்றிக்காய், நெல்லி வற்றல், சந்தனத் தூள், தேவதாரு, கடுகுரோகணி வகைக்கு அரை பங்கு, கோரோசனம் கால் பங்கு, குங்குமப் பூ பலம் ஒன்று, இவை அனைத்தையும் சூரணித்துக் கல்வத்திற் போட்டு, எலுமிச்சை பழச்சாறு, கண்டங்கத்திரிப் பழச் சாறு, இஞ்சிச் சாறு, இவற்றை வரிசையாக அரைத்து, மும்மூன்று சாமம் அரைத்து, குன்றிமணி அளவு மாத்திரைகளாகச் செய்து, நிழலில் உலர்த்திப் பத்திரப் படுத்தி, குழந்தைகளுக்கு 1/2 குன்றிமணி அளவு மாத்திரை யும், பெரியோர்களுக்கு ஒரு குன்றிமணி அளவு பிரமாணம் , தேனிலோ அல்லது, இஞ்சி சுரசம், அவ்வாறின்றியும் வெற்றிலைச் சாற்றிலும், அநுபானஞ் செய்து கொடுக்க, நாவறட்சி, சிர பாரம்(தலை பாரம்), தலைவலி, ஜலதோஷம், ஜுரம், சூதகக் கட்டு இவைகள் குணம் ஆகும்.

    *குறிப்பு :* வயதிற்கு ஏற்றாற்போல், அளவைக் கூட்டிக் குறைத்து பயன்படுத்த வேண்டும்.

    (குறிப்பு : பலம் என்பது, 3− தோலா. 1தோலா என்பது, 1ரூ.எடை .

    *அடுத்து, குங்குமப் பூ நெய் :*

    குங்குமப் பூவை, வகைக்கு ஒரு விராகனெடை எடுத்துக் கல்வத்தில் போட்டு, சிறிது பசும் பாலில் அரைத்து, ஆழாக்குப் பசுவின் பாலில் கலந்து, சுத்தமான ஆழாக்குத் தேங்காய் எண்ணெய் கூட்டிப் பதம் வர காய்த்துப், வடிகட்டி சீசாவில் பத்திரப்படுத்தி, நாசியில், 5−6 துளி விட்டுக் கொண்டே வரச் சகல பீநசரோகமும் குணமாகும்.

    *குங்குமப் பூ நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.*

    *மீண்டும் சந்திக்கலாம்...*
    Jansikannan60@gmail.com

    ReplyDelete