Saturday, 25 November 2023

Loneliness-தனிமை



``15 சிகரெட்டுகளை விட மோசமானது தனிமை" எச்சரிக்கும் மருத்துவர்... தீர்வு என்ன?


ஒரு நாளைக்கு 15 சிகரெட்டுகள் புகைப்பதால் ஏற்படும் பாதிப்பைவிட மோசமான பாதிப்பை தனிமை உருவாக்குகிறது. இது உலகளாவிய அச்சுறுத்தலாக உருமாறி வருகிறது... புதிய நபர்களைச் சந்திக்கும்போதும், புதிய விஷயங்களைக் காணும்போதும் தனிமை என்ற குறுகிய வட்டத்திலிருந்து வெளியே வர முடியும

தனித்து வாழ்பவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த விவேக் மூர்த்தி என்ற மருத்துவர் தனிமை பற்றி சமர்ப்பித்த தனது அறிக்கையில், "தனிமை என்பது மோசமான ஓர் உணர்வு. அது தனிப்பட்ட மற்றும் சமூக ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கிறது. இதயநோய், டிமென்ஷியா, பக்கவாதம், மனச்சோர்வு, பதற்றம் ஆகியவற்றுடன் தொடர்புடையது.





ஒரு நாளைக்கு 15 சிகரெட்டுகள் புகைப்பதால் ஏற்படும் பாதிப்பைவிட மோசமான பாதிப்பை தனிமை உருவாக்குகிறது. இது உலகளாவிய அச்சுறுத்தலாக உருமாறி வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் மருத்துவர் டெட்ராஸ் அதானோம், "உலகம் முழுவதும் தனிமை என்பது உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. போதுமான சமூக தொடர்புகள் இல்லாதவர்கள் மனச்சோர்வு, தற்கொலை எண்ணம் போன்ற ஆபத்துகளில் உள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.






“ஜப்பானில் 2018-ம் ஆண்டு தனித்து வாழ்பவர்களின் நலனுக்காக தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு அமைச்சர் பதவியும் உருவாக்கப்பட்டது. அந்த அளவுக்கு கண்காணிக்க வேண்டிய விஷயமாக தனிமை உள்ளது.



மனிதன் ஒரு சமூக விலங்கு. பண்டைய காலம் முதல் மனிதன் கும்பலாக வாழ்ந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. கடந்த 10 வருடங்களாக மனநலம் குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தனிமை பற்றி அதிகம் பேசப்படுகிறது. கொரோனா பெருந்தொற்றின்போதே மக்கள் தனிமைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.


வயதானவர்கள் தனிமையாக இருக்கும்போது டிமென்ஷியா பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்பு 50% ஆக உள்ளது. மேலும் இதயநோய் போன்ற ரத்த நாள பிரச்னைகள் அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் 30% அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

தனிமை
தனிமை
Also Read
இதை உணர்ந்துவிட்டால்... உங்கள் கவலைக்கு விடுதலை கொடுத்து விடுவீர்கள்! | மகிழ்ச்சி - 5
இதை உணர்ந்துவிட்டால்... உங்கள் கவலைக்கு விடுதலை கொடுத்து விடுவீர்கள்! | மகிழ்ச்சி - 5
தனிமை இரண்டு வகைப்படும். சூழ்நிலையினால் தனிமை படுத்தப்படுவது, மற்றொன்று மனநோயினால் ஒருவர் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்வது. இது தவிர, தானாக விரும்பி தனிமைப்படுத்திக்கொள்வது ஒரு வகை.


முதல் வகையைப் பொறுத்தவரை அந்தச் சூழல் மாறினாலோ, சரியானாலோ சரியாகிவிடும். மனநோயினால் தனிமையில் இருப்பவர்களுக்கு அதற்கான சிகிச்சை எடுத்தால் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும். தானாக விரும்பி தனிமைப்படுத்திக்கொள்வதை பற்றி கவனம் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
இளம் தலைமுறையினர் தனிமைக்குத் தள்ளப்படுவதற்கு சமூக வலைதளங்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணமாகத் திகழ்கின்றன. தனிமைமோசமான ஓர் உணர்வு. இது தனிப்பட்ட மற்றும் சமூக ஆரோக்கியத்துக்கும் தீங்கு விளைவிக்கும். இதயநோய், மறதி, பக்கவாதம், மனச்சோர்வு, பதற்றம் போன்றவை ஏற்படுவதற்கும் வாய்ப்பாக அமைகிறது தனிமை.


தனிக்குடும்பம், 'லிவிங் டு கெதர்' போன்ற கலாசாரம் தற்போது இந்தியாவிலும் பரவலாகிவிட்டது. இவற்றினால் ஏற்படும் பிரச்னைகளைப் பார்த்து பெரும்பாலானவர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் தனித்து வாழ்வதைத் தேர்ந்தெடுக்கின்றனர்.




விரும்பித் தேர்ந்தெடுக்கும் தனிமையை சிகிச்சை மூலம் சரி செய்ய இயலாது. தாங்களாகவே அதிலிருந்து வெளியே வருவதற்கு முயல வேண்டும். எடுத்துக்காட்டாக, சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுதல், விருப்பமான கிளப் அல்லது குழுக்களில் சேர்தல், ஒத்த சிந்தனை உடையவர்களுடன் நேரம் செலவிடுதல் போன்றவற்றில் ஈடுபட வேண்டும். அப்போது தனிமை மெதுவாக விலகத் தொடங்கும்.


புதிய நபர்களைச் சந்திக்கும்போதும், புதிய விஷயங்களைக் காணும்போதும் தனிமை என்ற குறுகிய வட்டத்திலிருந்து வெளியே வர முடியும். கூடுதலாக, உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு மற்றும் நல்ல தூக்கம் போன்ற நடைமுறைகளைப் பின்பற்றுவதால் தனிமையினால் ஏற்படும் எதிர்மறையான விளைவுகளைத் தவிர்க்கலாம். இந்தப் பழக்கவழக்கங்கள் தற்கொலை, தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வது போன்ற எண்ணங்கள் வராமல் தடுக்கும். சமூகத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும்.

Counseling

உதவியை நாடுவது தவறில்லை!
தனிமையின் அலைகளால் தாக்கப்படும்போது யாரிடமாவது பேசுவது நல்லது - அது நண்பராக இருக்கலாம் அல்லது மனநல ஆலோசகராக இருக்கலாம். தனிமை ஒருவரை அழுத்தும்போது தகுந்த உதவியை நாடுவதில் தவறில்லை" என்றார் அவர்.


No comments:

Post a Comment