Tuesday, 5 December 2023

கிராம்பு ஜஸ்ட் 2 பீஸ் போதும்.. நோயெல்லாம் பறந்துரும்



தம்மாதூண்டு துண்டு.. இரவில் ஜஸ்ட் 2 பீஸ் போதும்.. நோயெல்லாம் பறந்துரும், ஆயுசு கூடிரும்.. கமகம வாசம்

வெறும் வயிற்றில் கிராம்பு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் ஏராளம்.. இதை பற்றி நாம் ஏற்கனவே பார்த்தோம்.. ஆனால், இரவு நேரம், கிராம்பு சாப்பிடுவதால் வரும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

கார்போஹைட்ரேட், புரோட்டின், கொழுப்பு, நார்ச்சத்து, இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம், சோடியம், தாமிரம், துத்தநாகம், செலினியம், மாங்கனீசு, தயாமின், வைட்டமின் B, A, E, K, கொழுப்பு அமிலங்கள் என பல சத்துக்கள் இந்த கிராம்பில் உள்ளன.

Do you know Amazing benefits of Cloves and Amazing Uses of taking clove in night before bed
சர்க்கரை நோயாளிகள்: சர்க்கரை நோயாளிகளுக்கு கிராம்பு மிகவும் அத்தியாவசியமான பொருளாகும்.. தினமும் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.. இதனால், ரத்தத்திலிருந்து அதிகப்படியான சர்க்கரையை நீக்கி, சமநிலையை தக்கவைக்கிறது. எனினும், கிராம்பு எடுப்பதற்கு முன்பு கட்டாயம் மருத்துவரிடம் ஆலோசனை செய்ய வேண்டும்.

ஆண்டிஆக்சிடெனட் நிரம்பி உள்ள இந்த கிராம்பு, எந்தவிதமான புற்று நோய்களையும் நெருங்க செய்யாது.. நுரையீரலின் நண்பன் இந்த கிராம்பு என்று சொல்லலாம்.. அந்த அளவுக்கு சுவாச பிரச்சனையை தீர்க்கிறது..

ஆஸ்துமா: ஆஸ்துமா பிரச்சனைக்கே, சிகிச்சையளிக்க இந்த கிராம்பு உதவுகிறதாம். ஜீரண கோளாறை நீக்கும் சக்தி அபரிமிதமாக உள்ளதால்தான், அசைவ உணவுகளில் கிராம்பை அதிகம் பயன்படுத்தப்படுகிறது...

வெறும் வயிற்றில் 2 கிராம்பு சாப்பிட்டு வந்தால், கல்லீரல் பாதுகாப்புக்கு சிறந்தது... நம்முடைய உடலிருக்கும் கழிவுகள், நச்சுக்களை வளர்ச்சிதை மாற்றம் செய்து அவற்றை வெளியேற்றுவதில் கல்லீரலுக்கு பெரும் பங்கு உள்ளது.. இந்த கிராம்பில் யூஜெனால், கல்லீரல் ஆரோக்கியத்தை காக்க செய்கிறது. எனவே, கல்லீரலின் சிறந்த செயல்பாட்டுக்கு இந்த கிராம்பு உபயோகமாகிறது.

வயிற்றுப்புண்களையும், வாய்ப்புண்களையும் ஆற்றக்கூடியது.. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.. வாய் துர்நாற்றமும் நீங்கும்.. அன்றைய நாள் முழுவதும் புத்துணர்ச்சி கிடைக்கும்.. அஜீரணம் நீங்கும்.. ஜலதோஷம், சளிக்கு நிவாரணம் கிடைக்கும்.

கிராம்பு: ஆனால், இரவில் தூங்க செல்லும்முன்பு 2 கிராம்பு சாப்பிட்டு வந்தால், கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.. தூங்க செல்லும்போது, 2 கிராம்பு சாப்பிட்டு சுடுநீர் குடித்தால், மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது.. இதனால், முகப்பருக்களும் வராமல் தடுக்கப்படும்.. பல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் இந்த கிராம்பு தீர்ந்துவிடும். பற்களில் வலி, ஈறுகளில் வீக்கம், போன்றவைகளை கிராம்பு தீர்க்கக்கூடியது.. பல் வலி மட்டுமல்ல, காது வலி என்றாலும்கூட, கிராம்பு போதும்.


தொண்டை வலியும் குணமாகிவிடும். வைரஸ் தொற்று முதல் சைனஸ் பிரச்சனைவரை நிவாரணம் தரக்கூடியதுதான் இந்த கிராம்பு. வெறுமனே சாப்பிட முடியவில்லை என்றால் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து தேன் கலந்து குடிக்கலாம்.

Do you know Amazing benefits of Cloves and Amazing Uses of taking clove in night before bed
பெரும்பலன்: அல்லது கிராம்பை அப்படியே வாயில் போட்டு, லேசாக சுவைத்து ஈரமாக்கி மெல்ல மெல்ல அதன் சாறை விழுங்கி, வெதுவெதுப்பான நீர் குடித்துவிட்டு தூங்கலாம். டம்ளர் வெதுவெதுப்பான நீரை குடித்து விட்டு தூங்க வேண்டும்.

இதனால், அசிடிட்டி, டயேரியா, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் தீர்ந்து செரிமானமும் சிறப்பாக நடக்கும்.. குடல் ஆரோக்கியமும் மேம்படும்.. இரவில் கிராம்பு சாப்பிட்டுவிட்டு தூங்கினால், கை, கால் நரம்புகள் இழுப்பது போன்ற பிரச்சனைகளும் சீராகும்.

நிம்மதியான தூக்கம்: அதுமட்டுமல்ல, தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் தினமும் இரவில் படுக்கும் முன்பு, கிராம்பை வாயில் போட்டு சாப்பிட்டால், அது மன அழுத்தத்தை குறைத்து நன்றாக தூக்கம் வர உதவுகிறது.. கிராம்பு சாப்பிடுவதால் வளர்சிதை மாற்ற விகிதமும் அதிகரிக்கிறது. எடையையும் எளிதாக குறைத்துவிடலாம்.


No comments:

Post a Comment