Wednesday, 21 February 2024

சூலம்

 பஞ்சாங்கத்திலும் காலண்டரிலும் சூலம் என்று குறிப்பிட்டிருப்பார்கள். எந்த நாளில் என்ன திசையில் பயணிக்கலாம் என்றும் பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டுள்ளது. சூலம் என்று குறிப்பிடப்பட்ட திசையில் திசையில் பயணம் செய்தே ஆகவேண்டும் என்றால் அதற்கான பரிகாரத்தையும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
சூலம் என்றால் என்ன
2/6
சூலம் என்றால் என்ன: சூடு அதிகமாக இருக்கும் திசை சூலம் என்று குறிப்பிட்டிருக்கும். அந்த திசையில் பயணிக்க வேண்டாம் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய உண்மைக் கோள்கள் ஏழினையும் வார நாட்களாக ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன்,வியாழன், வெள்ளி, சனி என நாம் பெயர் வைத்திருக்கிறோம்.
எந்த திசை சூலம்
3/6
எந்த திசை சூலம்: ஒவ்வொரு கோளிற்கும் உரிய திசைக்கு எதிர்திசையை அந்த நாளுக்குரிய சூலம் காட்டும் திசையாக இருக்கும். சூரியன், சுக்கிரனின் திசை கிழக்கு என்பதால் ஞாயிறு, வெள்ளிக்கிழமைகளில் அன்று மேற்கே சூலம் என்றும், சந்திரன், சனி ஆகியோரின் திசை மேற்கு என்பதால் திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் கிழக்கே சூலம் என்றும் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
யாருக்கு சூலம் அவசியம்
4/6
யாருக்கு சூலம் அவசியம்: கர்ப்பிணி பெண்கள் பிரயாணம் செய்யும்போது அவசியம் சூலத்தைக் கணக்கில் கொள்ள வேண்டும். சூடு அதிகமாக இருக்கும் திசையில் பயணிக்கும்போது வயிற்றில் உள்ள குழந்தைக்கும், அந்தக் குழந்தையை சுமக்கும் தாய்க்கும் உடல்நலம் பாதிக்கப்படக் கூடாது என்பதனால் சூலம் பார்த்து பயணம் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கின்றனர்.
பரிகாரம்
5/6
பரிகாரம்: தாய், சேய் நலம் பாதிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் சூலம் என்று குறிப்பிட்டிருக்கும் திசையில் பயணம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தினார்கள். இதற்குப் பரிகாரமாக அன்றைய தினம் பகல்12 மணிக்கு மேல் பால் அல்லது தயிர் சாப்பிட்டுவிட்டு பயணிக்கலாம் சொல்லப்பட்டுள்ளது.
சூலம் யார் பார்க்க தேவையில்லை
6/6
சூலம் யார் பார்க்க தேவையில்லை: வேலை விசயமாக தினசரி பயணம் செல்பவர்கள் சூலம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. சூலம் குறிப்பிட்டுள்ள திசையில் பயணம் செய்ய வேண்டும் என்றால், கிழக்கு திசைக்கு தயிர், மேற்கிற்கு வெல்லம், வடக்கிற்கு பசும்பால், தெற்கிற்கு நல்லெண்ணெய் சேர்த்த ஏதேனும் ஒரு உணவு சாப்பிட்டு விட்டு கிளம்பலாம் என்ற விதி விலக்கும் இருக்கிறது.

1 comment:

  1. Tue. 27, Feb. 2024 at 7.19 pm.

    *ஜோதிடம் :*

    *வெகு நாட்களுக்குப் பின் சோதிட பதிவுக்கு வந்துள்ளோம். இன்று நாம் பார்க்கப் போவது, *சூலம்* பற்றி.

    சோதிடத்தில் சூலம் :

    சோதிட ஆய்வு தேவை ஏன் ? (சூலம் )

    உதாரணமாக :

    * திங்கள், சனி கிழமைகளில், கிழக்கு திசை சூலம். எனவே பயணம் செய்யக்கூடாது என்று *சோதிட விதி* கூறுகிறது.

    * செவ்வாய் வடக்கும், புதன் வடகிழக்கும், வியாழன் தெற்கும், வெள்ளி தென்மேற்கும், ஞாயிறு மேற்கும் சூலம் என்பது சோதிடம்.

    * ஆராய்ந்தால், அந்தந்த கிழமைகளில், அந்த கிரகங்களின் சக்தி அதிகமாக இருக்கும். (ஞாயிறு கிழமை−சூரிய சக்தி.
    திங்கள்−சந்திர சக்தி). அந்தந்த ஓரையே முதலில் அன்று ஆரம்பமாகும் என தெரிந்து கொள்ளுங்கள்.

    * ஞாயிறு எனும் சூரியனை, நீச்சமாக்கும் *துலா* ராசி இருக்கும் மேற்கிலும்...

    * புதனை நீச்சமாக்கும் *மீன* ராசி இருக்கும் வடகிழக்கிலும்...

    * வெள்ளி எனும் சுக்கிரனை நீச்சமாக்கும் *கன்னி* ராசி இருக்கும் தென்மேற்கிலும்..

    * சனியை நீச்சமாக்கும் *மேஷ* ராசி இருக்கும் கிழக்கு திசையிலும் பயணம் செய்யலாகாது.

    மேலும், அந்தந்த கிழமைகளில், அந்தந்த திசைகளில் சுபகாரியப் பயணம் செய்தால், மனம், யுக்தி திடமாக இராது. மாறாக, தோல்விகளும், நஷ்டமும், வருத்தமும் ஏற்படும். கிரஹ காரகத்துவ வேலைகள் பாதிக்கும். அதாவது மூடு அவுட்(Mood Out) . உடல் நலமிராது.

    * அதே சமயம், சந்திரன் உச்சமாகும் *ரிஷப* ராசியின் கிழக்கை நோக்கி, திங்கள் கிழமையிலும்,...

    * வியாழன் / குரு உச்சமாகும் *கடக* ராசியின் தெற்கை நோக்கி வியாழக் கிழமையிலும்....

    * செவ்வாய் உச்சமாகும் *மகர* ராசியின் வடக்கை நோக்கி செவ்வாய் கிழமையிலும் செல்வது சூலம். (அதிக சக்தி ஆபத்து என்பதால்).

    * மனோதத்துவ, உடல் தத்துவ பரிகாரமாக, வடக்கே செல்லும்போது சூலமாவதால், புளிப்புத் தன்மையுள்ள தயிரும்....

    * மேற்கே செல்லும்போது, இன்சுவையான வெல்லமும்...

    * தென்திசை பரிகாரமாக நல்லெண்ணையும்....

    * வடதிசை பரிகாரமாக பாலும் சாப்பிட்டுவிட்டு பயணம் மேற்கொள்ளலாம் என்கிறது ஜோதிடம்.

    * காரணம், *மனித மூளையின் உத்தரவுகள், நரம்புகளின் வழியே, உடலின் பல பாகங்களுக்கு, பெளதீக ரசாயன சமிக்ஞைகள் மூலம் வந்து செயலாகின்றது என்கிறது விஞ்ஞானம்.*

    *இந்த பரிகாரத்தால் சரியாகி விடுமா என்பதை, ஆராய்ச்சியாளர்களிடம் விட்டுவிடுவோம்.*

    *மீண்டும் சந்திக்கலாம் !*
    sivajansikannan@gmail.com

    ReplyDelete