Friday, 22 March 2024

புதிய வீடுகளுக்கு செல்லும் போது பால் காய்ச்சுவது வழக்கம். இந்த பழக்கம் ஏன் பின்பற்றப்படுகிறது தெரியுமா?

இந்தியாவில் பலரும் புதிய வீடுகளுக்கு செல்லும் போது பால் காய்ச்சுவது வழக்கம். இந்த பழக்கம் ஏன் பின்பற்றப்படுகிறது தெரியுமா?


இந்தியாவில் இந்துக்கள் பல்வேறு சடங்குகள் மற்றும் மரபுகளைப் பின்பற்றுவது வழக்கம். அதில் ஒன்று பால் காய்ச்சுவது.


Why do we boil milk during new and rent house warming ceremony


புதிய வீட்டிற்குச் செல்லும் போது அது வாடகைக்கோ அல்லது சொந்தமான வீடோ பால் காய்ச்சுவதுதான் முதல் சம்பிரதாயமாக இருக்கும். புது வீட்டிற்கு செல்லும் போது பெரும்பாலான குடும்பங்களில் வாஸ்து பூஜை, வாஸ்து ஹவன் மற்றும் கணேஷ் பூஜையுடன் 'க்ருஹ பிரவேசம்' செய்வது வழக்கம். அதேபோல் பால் காய்ச்சுவதும் மிக முக்கியமான நிகழ்வு.



பொங்கி வழிய விடும் வரை பாலை காய்ச்சுவதுதான் இந்த வழக்கம். இந்த பாலை கடவுளுக்கு பிரசாதம் கொடுத்த பிறகு, மீதமுள்ள பாலை குடும்ப உறுப்பினர்களிடையே பகிர்ந்து கொள்ளும் மரபு உள்ளது. ஆனால் மக்கள் ஏன் இந்த சடங்கைப் பின்பற்றுகிறார்கள் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதற்கான பதிலை இங்கே பார்ப்போம்.

என்ன காரணம்; ஒரு புதிய வீட்டிற்குள் நுழைவது என்பது ஒரு 'புதிய வாழ்க்கையின்' தொடக்கமாகும், புதிய தொடக்கத்தை, தூய்மையான தொடக்கத்தை, தடைகள் இல்லாத மற்றும் திருப்தி நிறைந்த வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்பதே பால் காய்ச்சுவதின் நோக்கம் ஆகும்.


இந்து நம்பிக்கையின்படி, பாலை கொதிக்க வைப்பதும், பால் வழிவதும் நம் வாழ்வில் செல்வம், ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையை உறுதி செய்யும் நிகழ்வு ஆகும். இப்படி பொங்கும் பாலை விநியோகிப்பது குடும்ப உறுப்பினர்களிடையே மகிழ்ச்சியையும் அன்பையும் பகிர்ந்து அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

அதிலும் இப்படி பொங்கும் பால், கிழக்கு திசையில் பொங்கி விழும் போது அது "செழிப்பின் அடையாளம்" என்றும் கருதப்படுகிறது; ஏனெனில் "கிழக்கு" என்பது இந்திய வாஸ்து படி செழிப்பை, வளர்ச்சியை குறிக்கும்.

அதுவே மேற்கு திசையில் விழும் போது அன்பையும், ஆரோக்கியத்தையும் குறிக்கும் என்பதே இந்தியர்கள் இடையே பரவலாக இருக்கும் நம்பிக்கை ஆகும்.


தூய்மையைக் குறிக்கும் அடையாளமாக பால் இருப்பதால் அது புதிய தொடக்கத்தை குறிக்கும். இது வீட்டிற்குள் செல்வம் பெருகுவதைக் குறிக்கிறது. அதேபோல் பலரும் இது வீட்டில் இருக்கும் எதிர்மறையை அகற்ற உதவுகிறது என்று சிலர் நம்புகிறார்கள். அதாவது அந்த இடத்திலிருந்து எதிர்மறை சக்தியை நீக்க இந்த சடங்கு உதவும் என்று மக்கள் நம்புகிறார்கள்.

பால் நிரம்பி வழியும் போது அங்கு தங்கியிருக்கும் குடும்பத்திற்கு ஆசீர்வாதங்கள், ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி ஆகியவை அந்த இடத்தில் வந்து நிரம்பி வழியும் என்பது நம்பிக்கை ஆகும்.


No comments:

Post a Comment