சிவ அம்சம் பொருந்திய ஹனுமார்
அனுமார் மிக சிறந்த ராம பக்தர் என்பது உலகறிந்த சங்கதி ஆனால் அவரை சிவ அம்சம் பொருந்தியவர் என்று சிலர் கூறுவது ஏன்? என்று பார்க்கலாம்.
அனுமார் மிக சிறந்த ராம பக்தர் என்பது உலகறிந்த சங்கதி ஆனால் அவரை சிவ அம்சம் பொருந்தியவர் என்று சிலர் கூறுவது ஏன்? வைஷ்ணவ சம்பிரதாயத்தில் கருடாழ்வாரை பெரிய திருவடி என்று அழைப்பார்கள் அதே போலவே ஆஞ்சநேயருக்கும் சிறிய திருவடி என்ற சிறப்பு பட்டம் உண்டு. ராம அவதாரத்தில் பகவானுக்கு தொண்டு செய்து தாசானுதாசனாக வாழ்ந்ததனால் இந்த சிறப்பை அனுமன் பெறுகிறார். அத்தகைய அனுமன் சிவ அம்சம் பொருந்தியவர் என்பது அதியசயமான உண்மையாகும். திரேதா யுகத்தில் குஞ்சரன் என்ற மகாசிவபக்தன் வாழ்ந்தான். அவனுக்கு வெகுநாட்களாக குழந்தைகள் இல்லை. குழந்தைவரம் வேண்டி அதுவும் ஆண் குழந்தை வேண்டுமென்று சிவபெருமானை நோக்கி அவன் கடுதவம் மேற்கொண்டான்.
குஞ்சரனின் தவத்தை மெச்சிய கைலாச நாதன் அவன் முன்னால் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். தனக்கு அழகான ஆண்குழந்தை வேண்டுமென்று அவன் சொன்னான். அதற்கு சிவபெருமான் உனது கர்மப்படி ஆண்குழந்தை பெறுகின்ற பாக்கியம் உனக்கில்லை. ஆனால் மகாபதிவிரதையாக ஒரு மகளை பெறுவாய் அவள் மூலம் என் அம்சத்தில் உனக்கொரு பேரன் பிறப்பான் என்று வரம் கொடுத்தாராம்.. குஞ்சரன் மிகவும் சந்தோசப்பட்டான். குழந்தை இல்லையே என்று வருந்துவதை விட பிள்ளை கலி தீர்க்க பெண் குழந்தையாவது பிறக்கட்டுமென்று தவத்தை முடித்து வீட்டுக்கு போனான். அவனுக்கு சில நாளில் அஞ்சனா என்ற அழகான மகள் பிறந்தாள்
கன்னிபருவம்' எய்திய அஞ்சனா தேவி கேசரி என்ற வானர வீரனை காந்தர்வ முறையில் மணம் முடித்தாள். அஞ்சானா தேவி முன் குறத்தி வடிவாக வந்த தர்மதேவதை திருவேங்கட மலைக்கு சென்று தவம் செய். அதன் பயனாக தேஜசும் வீரியமும் நிறைந்த மகன் பிறப்பான் என்று சொன்னாள். அஞ்சனா தேவியும் திருமலை சென்று தனது தவத்தை துவங்கினாள். பக்தி சிரத்தையோடு அவள் செய்த தவம் வாய்வு பகவானுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவள் தவத்திற்கு தன்னால் முடிந்த உதவி செய்யவேண்டும் என்று விரும்பி தினசரி ஒரு பழத்தை அவள் அறியாமல் அவள் முன்னால் வைத்து போனான். ஒருநாள் சிவபூஜைக்காக வைத்திருந்த பழம் ஒன்றை எடுத்து அவள் இருந்த இடத்தில் வைத்து விட்டான். கண்விழித்து பார்த்த அஞ்சானா தேவி தன்முன்னால் இருந்த பழத்தை வணங்கி சாப்பிட்டாள். அப்போதே அவள் கர்ப்பவதியானாள். சிவனுக்கான பழம் என்பதனால் சிவ அம்சத்தோடும் வாயு பகவான் அதை கொடுத்ததினால் வாயு புத்திரனாகவும் அஞ்சனா தேவிக்கு பிறந்த அனுமான் கருதப்படுகிறார். எனவே ஆஞ்சநேயர் சைவ வைஷ்ணவ ஒற்றுமை சின்னம் என்றே கருதத்தக்கவர் ஆவார். அவரை பக்தியோடு வணங்கினால் பக்தர்கள் வேண்டி விரும்பி கேட்கும் நியாயமான கோரிக்கைகள் எதை வேண்டுமென்றாலும் நிறைவேற்றி வைப்பார்..
அய்யா. வெ.சாமி அவர்களுக்கு நமஸ்காரம். அடாயேன் சிவஞானபோதம் சூர்ணிக் கொத்து இதன் வாயிலாக பதிவு அனுப்புகிறேன்.
ReplyDeleteTue. Mar. 5, 2024 at 5.49 pm.
*சிவஞானபோதம் :*
*சூர்ணிக் கொத்து :*
சூத்திரம் : 1.
1. சகம் பிறப்பு இருப்பு, இறப்பாகிய முத்தொழிலை உடையது.
2. அது அரனாலே உடையது
3. முதல்வன் ஒருவனே.
***********
* 2− ஆம் சூத்திரம் :
1. அரன் உயிர்களின் இரண்டற நிற்பன்.
2. உயிர்களுக்கு கன்மபலனை அரனே கொடுப்பன்.
3. உயிர்கள் அச்சுமாறியே பிறக்கும்.
(( அச்சு மாறிப் பிறக்கும் என்பது, வேறு வேறு உடலாகப் பிறவி தோறும் பிறப்பது))
4. தன் தாதான்மிய சத்தியோடு இயைந்து நிற்பன். (அதாவது, அரன் சர்வ வியாபகன்).
*************
* 3−ஆம் சூத்திரம் :
1. இல்லை என்கிற அறிவுடனே, சொல்லுகையினாலே, அறிவுயிர் உண்டு.
2. எனது உடல் என்று பொருட்பிறிதின் கிழமையாகச் சொல்லுகையினாலே, உடற்கு வேறாய் உயிர் உண்டு.
3. ஐந்தையும் ஒருவனே அறிதலின், ஒவ்வொன்றை மாத்திரம் அறிகிற ஐந்திற்கும் வேறாய் உயிர் உண்டு.
4. கனவுடலை விட்டு, தனிவுடலிலே வருகையினாலே அக் கனவுடற்கு வேறாய் உயிர் உண்டு.
5. நித்திரையிலும், பிராணவாயுத் தொழில் பண்ணவும், சரீரத்துக்குப் புசிப்புத் தொழிலும் இல்லாதபடியினாலே, பிராண வாயுக்கு வேறாய் உயிர் உண்டு.
6. மறந்து மறந்து நினைக்கிறபடியினாலே மறவாமல் இருக்கிற அரனுக்கு வேறாய் உயிர் உண்டு.
7. எல்லா தத்துவங்களுக்கும் வேறு வேறு பெயர் இருக்கையினாலே அந்தந்தத் தத்துவங்களுக்கு வேறாய் உயிர் உண்டு.
*மீண்டும் அடுத்த பதிவில் !*
Sivajansikannan@gmail.com
Tue. 5, Mar. 2024 at 6.05 pm.
ReplyDeleteசிவஞான போதம் : சூர்ணிக் கொத்து :
*4−ஆம் சூத்திரம் :*
* அந்தக்கரணங்களுக்கு உயிர் உட்கூடினாலன்றித் தொழில் இல்லாதபடியினாலே, அந்தக் கரணங்களுக்கு வேறாய் உயிர் உண்டு.
* மல மறைப்பால் உயிருக்கு அறிவு விளக்கம் இல்லை.
* உயிர் 3−அவத்தைப்படும்.
*********
* 5−ஆம் சூத்திரம் :
* உயிராலே தத்துவங்கள் எல்லாம் தொழில் செய்யும்.
* அரனாலே உயிர்கள் எல்லாம் அறியும்.
*********
* 6−ஆம் சூத்திரம் :
* உயிர் அறிவினாலே, அறியப்பட்டவெல்லாம் அழியும்.
* அப் பிரமேயமாக அறியப்பட்டவனே அரன். (பிரமேயம் என்றால் காரணம். அதாவது, நியாயமாய் அளந்தறியப் பட்டது.)
***********
* 7−ஆம் சூத்திரம் :
* அரன் பாசத்தை அனுபவிப்பான்.
* ஆனால், பாசம் அரனை அனுபவியாது.
* உயிர் அவ்விரண்டையும் அறியும், அனுபவிக்கும்.
************
சிவஞான போதம் −சூர்ணிக் கொத்து :
ReplyDelete* 8−ஆம் சூத்திரம் :*
* உயிருக்கு நல்லறிவூ தவத்தினாலே வரும்.
* உயிருக்கு சற்குருவாய் வருவது அரனே.
* உயிர் பஞ்சேந்திரியங்களைப் பற்றுகையினாலே, தன்னையும் அறிய மாட்டாது.
* உயிர் பஞ்சேந்திரியங்களிலே பற்றற்றால், தன்னையும் அறியும்.
*********
* 9−ஆம் சூத்திரம் :
* உயிர் அரன் ஞானத்தினாலே அரனைக் காணும்.
* உயிர் பாசத்திலே பற்றற்றால், அரன் வெளிப்படுவான்.
* பஞ்சாட்சர ஜெபம் பண்ணினால், வாசனாமலம் போகும்.
***********
* 10−ஆம் சூத்திரம் :
* அரனுடன் ஒன்றாகி நில், மலம் நீங்கும்.
* உன் தொழிலெல்லாம் அரன் பணி என்று கொள், மாயையோடு கூடிய வினை இன்றாம்.
*********
Tue. 5, Mar. 2024 at 6.14 pm.
ReplyDeleteசிவஞான போதம் : சூர்ணிக் கொத்து :*
11− ஆம் சூத்திரம் :*
* ஞானிக்கு வருகிற விடயங்களை அரனே அநுபவிப்பான்.
* அரனை மறவாமல் அன்பு செய்தால், அவனிடத்திலே ஒன்றுபட்டு இன்புறுவான்.
*********
*12−ஆம் சூத்திரம் :*
* மும்மலங்களையும் களைக.
* சிவஞானிகளுடனே கூடுக.
* சிவஞானிகளையும், சிவலிங்கத்தை யும், சிவன் எனவே, தேறி வழிபடுக.
* வழிபடாமையை ஒழி்க.
Sivajansikannan@gmail.com.
Tue. 5, Mar. 2024 at 7.35 pm.
ReplyDelete*ஆகமம் :*
ஆகமம் பற்றி ஒரு கண்ணோட்டம் :
* சிவபெருமானே வேதங்களையும், ஆகமங்களையும் அருளிச் செய்தார் என்பது, சைவ சமயத்தின் கொள்கை.
அவற்றை அவர் அருளிச் செய்தது, *சதாசிவ மூர்த்தி* என்னும் நிலையில் இருந்தேயாகும்.
*சதாசிவ வடிவம் என்பது, 5−முகங்களும், 10−கைகளும் உடையது.*
* ஐந்து முகங்கள் என்பது, கிழக்கு முதலிய நான்கு திசைகளை நோக்கினவாக, 4−முகங்களும், அவற்றின் மேல் நடுவே, வானத்தை நோக்கியதாக ஒரு முகமும் இருக்கும்.
* இவ்வாறு, *மேல் நோக்கிய உச்சி முகம் ஈசானம்* எனப்படும்.
*கிழக்கு நோக்கிய முகம் "தத்புருடம்"* எனப்படும்.*
*தெற்கு நோக்கிய முகம் "அகோரம்"* எனப்படும்.
*வடக்கு நோக்கிய முகம் "வாமதேவம்"* எனப்படும்.
*மேற்கு நோக்கிய முகம் "சத்தியோசாதம்"* எனப்படும்.
* மேற்கூறியவாறு சிவபெருமான், *சதாசிவ வடிவம் தாங்கி நின்று கீழ் நின்ற 4−முகங்களால் 4− வேதங்களை யும்,*
*மேல் நிற்கும் ஈசான முகத்தால், சிவாகமங்களையும் அருளிச் செய்தார்.*
*உச்சியில் உள்ள ஈசானம் என்னும் ஒரு முகமே, கிழக்கு முதலிய திசைகளை முறையே நோக்கித் "தற்புருடம்" முதலிய நான்கு முகங்களாயும் நிற்கும்.*
இந்த 4−முகங்களாலும், முகம் ஒன்றுக்கு 5−ஆகமங்களாக (4×5= 20) இருபது ஆகமங்களையும், இயல்பான ஈசான நிலையில் நின்ற அம் முகத்தால் 8− ஆகமங்களையும் சதாசிவ மூர்த்தி அருளினார்.
ஆக, 20+8= 28− ஆகமங்கள்.
அடுத்ததாக....
*சத்தியோசாத முகத்தால் சொல்லப்பட்ட 5− ஆகமங்கள் :*
1. காமிகம்
2. யோகசம்
3. சிந்தியம்
4. காரணம்
5. அசிதம்
என்பன.
*வாமதேவ முகத்தால் சொல்லப்பட்ட 5-ஆகமங்கள் :*
1. தீப்தம்
2. சூக்குமம்
3. சகச்சாரம்
4. அஞ்சுமான்
5. சுப்பிரபேதம்
என்பன.
*அகோர முகத்தால் சொல்லப்பட்ட 5−ஆகமங்கள் :*
1. விசயம்
2. நிச்சுவாசம்
3. சுவாயம்புவம்
4. ஆக்கினேயம்
5. வீரம்
என்பன.
*தற்புருட முகத்தால் சொல்லப்பட்ட 5−ஆகமங்கள் :*
1. இரெளரவம்
2. மகுடம்
3. விமலம்
4. சந்திர ஞானம்
5. முக விம்பம்
என்பன.
*ஈசான முகத்தால் சொல்லப்பட்ட 8-ஆகமங்கள் :*
1. புரோற் கீதம்
2. இலளிதம்
3. சித்தம்
4. சந்தானம்
5. சருவோக்தம்
6. பாரமேசுரம்
7. கிரணம்
8. வாதுளம்
என்பன.
*இந்த 28- ஆகமங்களே "மூல ஆகமங்கள்" எனப்படுகிறது.*
*ஆகமங்கள் தொடர்ச்சி அடுத்த பதிவில் சந்திக்கலாம்.*
Sivajansikannan@gmail.com
Fri. 29, Mar. 2024 at 3.25.
ReplyDelete*பாடல் :*
என்றும் முகமன் இயம்பா தவர்கண்ணும்
சென்று பொருள் கொடுப்பர் தீதற்றோர்
−துன்றுசுவை
பூவிற் பொலிகுழலாய் பூங்கை புகழவோ
நாவிற் குதவு நயந்து.
பொருள் :
பூவின் என்றால் பூவினால்
பொலி என்றால் அழகு பெற்று விளங்குகின்ற
குழலாய் என்றால் கூந்தலை உடைய பெண்ணே
பூ என்றால் அழகிய
கை என்றால் கையானது
துன்று என்றால் மிகுந்த
சுவை என்றால் ருசியுள்ள பொருள்களை
நாவிற்கு என்றால் நாக்குக்கு
நயந்து என்றால் விரும்பி
உதவும் என்றால் கொடுக்கும் (கை அவ்வாறு செய்வது)
புகழவோ என்றால் நாக்கால்
தீது என்றால் குற்றம்
அற்றோர் என்றால் நீங்கிய மேலோர்
என்றும் என்றால் எப்பொழுதும்
முகமன் என்றால் இனிய பேச்சை
இயம்பாதவர் என்றால் பேசாதவர்கள்
கண்ணும் என்றால் இடத்திலும்
சென்று என்றால் போய்
பொருள் என்றால் அவர்களுக்கு வேண்டிய பொருளை
கொடுப்பர் என்றால் கொடுத்து உதவி செய்வர்.
இந் நன்னெறிப் பாடலின் கருத்து, *மேலோர், பயனை எதிர் பாராமலே பிறருக்கு உதவி செய்வர்,* என்பதே இந் *நன்னெறி* பாடலின் கருத்து.
மீண்டும் சந்திக்கலாம் !
Sivajansikannan@gmail.com
Mon. 1, Apl. 2024 at 12.03 pm.
ReplyDelete*நாவுக்கரசர் : 5−ஆம் திருமுறை. − தனிக் குறுந்தொகை :*
நமச்சி வாயவே ஞானமும் கல்வியும்
நமச்சி வாயவே நானறி விச்சையும்
நமச்சி வாயவே நாநவின்று ஏத்துமே
நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.
*ஞானம் என்றால் பரஞானம்.*
*நன்னெறி என்றால் சிவநெறி.*
*நானறிவிக்கை என்றால் நான் அறிந்த மந்திரமோ கலையுணர்வோ.*
*நன்னெறி என்றால் வீடுபேறு.*
*இப்பாடலின் கருத்து :*
*நமசிவாய என்னும் திருவைந்தெழுத்தே... பரஞானமும், கல்வியும், நான் அறிந்த கல்வியும், கற்ற கல்வியும், என் நாவினால் இடையீடின்றி போற்றப் பெறுவதும், அதுவே நன்னெறியைக் காட்டுவதாகும் என்பதே இப்பாடலின் கருத்து.*
மீண்டும் சந்திக்கலாம் !
Sivajansikannan@gmail.com