Sunday, 24 March 2024

மரவள்ளிக்கிழங்கு பெஸ்ட்.. சரும கவசம் + ரத்தம் பெருகும்..


மரவள்ளிக்கிழங்கு பெஸ்ட்.. சரும கவசம் + ரத்தம் பெருகும்.. "இவங்க" மட்டும் மரவள்ளிக் கிழங்கு தொடாதீங்க
மரவள்ளிக்கிழங்கில் ஏராளமான சத்துக்கள் உள்ளன என்றாலும், வைட்டமின் C, பொட்டாசியம் இவைகள் இரண்டுமே நம்முடைய அன்றாட ஆரோக்கியத்துக்கு பெரிதும் உதவுகின்றன.. எப்படி தெரியுமா?


மரவள்ளிக்கிழங்குகளில், கலோரி, கார்போஹைட்ரேட், வைட்டமின், தாதுக்கள் நிறைந்துள்ளன.. முக்கியமாக, இந்த கிழங்கிலுள்ள வைட்டமின் A, கண் பார்வை கோளாறுகளை போக்குகிறது.. கண்களிலுள்ள வறட்சியையும் போக்குகிறது..


Fantastic Medicinal Benefits in the Maravalli Kizhangu and What are the Super Health Uses of Cassava Maravalli Kilangu
சத்துக்கள்: வைட்டமின் K சத்துக்கள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்குகிறது.. செரிமான மண்டலத்தை சீராக்குகின்றன.. போலேட் (folate) மற்றும் வைட்டமின் C சத்துக்கள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலமாக்குகிறது.
அனைத்து பாக்டீரியாக்களையும் எதிர்த்து போராடும் ஆன்டிஆக்சிடன்டுகளும் இந்த கிழங்கில் ஒளிந்திருக்கின்றன. கால்சியம் சத்துக்கள் உள்ளதால், எலும்புகளுக்கும் பற்களும் வலுவை தருகிறது. அத்துடன், நினைவுத்திறனையும் அதிகரிக்க செய்வதால், வளரும் பிள்ளைகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய கிழங்கு இதுவாகும். ரத்தசோகை பிரச்சனை உள்ளவர்களுக்கு அருமருந்து இந்த கிழங்கு...

Bengaluru Water Crisis: பாதிக்கப்படும் Hospitals; Techies-க்கு Work From Home! | Oneindia Tamil
சிவப்பணுக்கள்: ரத்த விருத்திக்கும், சிவப்பணுக்களை அதிகரிக்கவும் உதவ தூண்டுகிறது. இந்த கிழங்கில் கஞ்சி செய்து குடித்தால், உடலில் எனர்ஜி கிடைக்கும். ஏராளமான நார்ச்சத்துக்கள் உள்ளதால், கெட்ட கொழுப்புகளை உடலிலிருந்து நீக்குகிறது.. மேலும், உடலிலுள்ள கழிவுகள் மட்டுமல்ல, குடலிலுள்ள கழிவுகளையும் நீக்கி உடல் எடையை குறைக்க பேருதவி செய்கிறது.

அனைத்து பாக்டீரியாக்களையும் எதிர்த்து போராடும் ஆன்டிஆக்சிடன்டுகளும் இந்த கிழங்கில் ஒளிந்திருக்கின்றன. கால்சியம் சத்துக்கள் உள்ளதால், எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலுவை தருகிறது. அத்துடன், நினைவுத்திறனையும் அதிகரிக்க செய்வதால், வளரும் பிள்ளைகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய கிழங்கு இதுவாகும். ரத்தசோகை பிரச்சனை உள்ளவர்களுக்கு அருமருந்து இந்த கிழங்கு...


வைட்டமின் C: வைட்டமின் C அபரிமிதமாக உள்ளதால், காயங்களை விரைவாக ஆற்றும் குணம் இந்த மரவள்ளிக்கிழங்குக்கு உண்டு.. அதனால்தான், சருமத்தில் தழும்புகள், காயங்கள் இருந்தாலும், இந்த கிழங்கின் தோல்களை அரைத்து பூசுவார்கள்..

மரவள்ளிக்கிழங்கின் தோலை சீவி, பேஸ்ட் போல அரைத்து, கட்டிகள், ரணங்கள், தழும்புகள், காயங்கள் மீது தடவினால் உடனடி நிவாரணம் கிடைக்கும். அல்லது இந்த கிழங்கின் இலையிலுள்ள உள்ள பசையையும் காயங்களின் மீது பிழிந்து பூசலாம்.
கொலாஜின்: உடலில் தோல் திசுக்களிலுள்ள கட்டமைப்பு கூறுகளில் கொலாஜினும் நிறைவாக உள்ளன.. இந்த கிழங்கின் வைட்டமின் C சத்துக்களே, கொலாஜனுக்கு அடிப்படையாக உதவுகிறது.. அன்றாடம் நமக்கு தேவைப்படும் வைட்டமின் C, சத்துக்களை இந்த மரவள்ளிக்கிழங்கை உணவில் சேர்ப்பதன் மூலம் நாம் எடுத்து கொள்ளலாம்.


இந்த கிழங்கினை நமக்கு விருப்பமான முறையில் சமைத்து சாப்பிடலாம் என்றாலும், சாலட் போல சாப்பிடுவது கூடுதல் பலனை தருகிறதாம்.. அதாவது, கிழங்கினை மேலுள்ள தோலை நீக்கி, கழுவி சுத்தம் செய்து, நறுக்கி வைத்து கொள்ள வேண்டும். ஒரு
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, இந்த துண்டுகளையும் சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும்.

தேன் சாலட்: வேக வைத்த கிழங்கை மசித்து, அதனுடன் தேங்காய்த் துருவல், தேனை இரண்டையும் சேர்த்து கலந்தால், சாலட் தயார். வழக்கமாக சாலட் என்றால் உப்பு, மிளகுதூள் சேர்த்து சாப்பிடுவார்கள். ஆனால், இந்த சாலட்டில் தேன் இருப்பதால், உப்பு, மிளகுத்தூள் இரண்டுமே தேவையில்லை. இப்படி சாப்பிடுவதால், மரவள்ளிக்கிழங்கின் முழு சத்தும் நமக்கு கிடைக்கும்.


இத்தனை சத்துக்களை தந்தாலும், சர்க்கரை சத்துக்கள் நிறைந்துள்ள இந்த கிழங்கினை, சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கலாம்.. அதேபோல, இந்த மரவள்ளிக்கிழங்கு ஒருசிலருக்கு அலர்ஜியை தந்துவிடும்.. அதாவது, வீக்கம், வாந்தி, சுவாசிப்பதில் சிரமம் போன்றவற்றை சிலருக்கு ஏற்படலாம். சிலருக்கு உதடுகள், நாக்கில் வீக்கம் ஏற்படலாம். இப்படியிருந்தால் உடனடியாக டாக்டரை சந்திக்க வேண்டும்.

தவிர்க்கலாம்: இந்த கிழங்கில், இயற்கை நச்சு ஹைட்ரோசியானிக் அமிலம் உள்ளதால், சயனைடு உற்பத்தியை செய்துவிடக்கூடும்.. எனவே, இந்த கிழங்கை நன்றாக வேகவைத்துதான் சாப்பிட வேண்டும்.. அப்படி வேகவைக்கும்போது, ஹைட்ரோசியானின் அமிலம் அழிந்து, நமக்கு பாதுகாப்பான உணவாக மாறிவிடும்.


No comments:

Post a Comment