Friday, 3 May 2024

வீட்டில் கெட்ட காலம் தொடங்கியதற்கு இதுதான் அறிகுறி..



சாணக்கிய நீதி: வீட்டில் கெட்ட காலம் தொடங்கியதற்கு இதுதான் அறிகுறி.. கவனமா இருங்க!
சாணக்கிய நீதி: வீட்டில் கெட்ட காலம் தொடங்கியதற்கு இதுதான் அறிகுறி.. கவனமா இருங்க!
Sanakiyar quotes | பலரும் வாழ்க்கையில் சாணக்கியரின் நெறிமுறைகளை பின்பற்றுகின்றனர். அப்படி கெட்ட சகுணத்தை குறிக்கும் சில விஷயங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.




வீட்டில் வரவுள்ள நிதி நெருக்கடியை சில அறிகுறிகள் மூலம் நம்மால் கண்டுபிடிக்க முடியும் என சொல்லப்படுகிறது. சாணக்கிய நிதியில் கூறப்படும் இந்த அறிகுறிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

சாணக்கியர் நம் வாழ்வுடன் தொர்புடைய பல விஷயங்களை கூறியுள்ளார். அவர் தனது நெறிமுறைகளில் இதை பற்றிய நிறைய எழுதியுள்ளார். அவர் சொல்லும் நெறிமுறைகள் நம் வாழ்வில் இலக்குகளை அடைய தூண்டுகிறது. இதனாலேயே பலர் சாணக்கிய வழியை பின்பற்றி வருகின்றனர். அப்படி நம் வாழ்வில் கெட்ட நேரம் தொடங்கிவிட்டதை எப்படி கண்டுகொள்ளலாம் என சாணக்கியரின் கூற்றை பார்க்கலாம்.


வாடும் துளசி செடி:
பொதுவாக துளசி செடியை பலர் வீடுகளில் வைத்திருப்பார்கள். ஆனால் உங்கள் வீட்டில் இருக்கும் துளசி செடி உங்க கெட்ட காலத்தை முன்கூட்டியே உணர்த்தும் என்று சாணக்கியர் கூறுகிறார். அதாவது துளசி செடி வீடுகளில் வாடினால் உங்களுக்கு பொருளாதார பிரச்சனை வரவுள்ளதாக தெரிகிறது. அதனால் துளசி செடி வாடினால் உங்களுக்கான கெட்ட காலத்தை உணர்த்துவதை நினைவில் கொள்ளுங்கள்.

தினசரி சண்டை:
உங்கள் வீட்டில் எப்போதும் சண்டை சச்சரவுகள் இருந்து கொண்டே இருந்தால் அந்த வீட்டில் லட்சுமி தேவி தங்க மாட்டார் என சாணக்கியர் கூற்று கூறுகிறது. இதனால் உங்கள் நிதி நிலை மோசமடைந்து, கெட்ட நேரம் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

கண்ணாடி உடைதல்:
வீட்டில் கண்ணாடி உடைவது ஒரு கெட்ட சகுணத்தை பிரதிபலிக்கிறது. சாணக்கியர் கூற்றுபடி வீட்டில் கண்ணாடி உடைந்தால் யாருக்காவது பிரச்சனை வரும் என்று சொல்லப்படுகிறது.


பூஜை இல்லாத வீடு:
வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஏற்பட சாணக்கியர் கூற்றுப்படி தவறாமல் பூஜை செய்வது அவசியமாக கருதப்படுகிறது. தினமும் வீட்டில் பூஜை செய்வதன் மூலம் உங்கள் வீட்டிற்கு லட்சுமி தேவி வருவார் என்று சொல்லப்படுகிறது. பூஜை அறை தூசி படிந்து காணப்படுவதும் கெட்ட சகுணத்தை உணர்த்துவதாகும்.

பெரியோரை அவமரியாதை செய்வது:
சாணக்கியரின் கூற்றுப்படி, பெரியவர்களை மதிக்காத வீட்டில் லட்சுமி வசிக்க மாட்டார் என்று சொல்லப்படுகிறது. மேலும் வீட்டிற்குள் மகிழ்ச்சியும் வராது. அதனால் தான் எப்போதும் உங்களை பெரியவர்களை மதித்து பழக வேண்டும் என்று சொல்கிறார்கள்.



No comments:

Post a Comment