Wednesday, 15 May 2024

யாராவது இறந்து போல் கனவு கண்டீர்களா? பலிக்குமா? பலிக்காதா? சாஸ்திரம் சொல்வது என்ன?


யாராவது இறந்து போல் கனவு கண்டீர்களா? பலிக்குமா? பலிக்காதா? சாஸ்திரம் சொல்வது என்ன?

சென்னை: உங்கள் கனவில் உங்களுக்கு பிடித்தவர்கள் யாராவது இறப்பது போல் வந்தால் அந்த கனவு பலிக்குமா? என்பது குறித்து பார்ப்போம்.



கனவு என்பது மிகவும் முக்கியமானது. பலருக்கு இது நிஜ வாழ்க்கையுடன் தொடர்புடையதாக இருக்கும். கனவுகளில் நிறைய விஷயங்கள் வரும். சிலருக்கு கனவுகள் லாஜிக்கே இல்லாமல் வரும்.


Do you know what will happen if you dream that some one died
பகலில் கனவு வரும், இரவிலும் கனவு வரும். அதாவது நாம் தூங்கினாலே கனவு வரும். சும்மா உட்கார்ந்து கண்ணை மூடினாலும் கனவு உலகத்திற்கு சென்றுவிடுவோம். அங்கு பார்ப்பதை மறுநாள் ஞாபகப்படுத்தி சிலர் சொல்வர்.


சிலருக்கு ஞாபகமே வராது. கனவில் பார்த்த பொருட்களையோ சம்பவங்களையோ ஆட்களையோ நேரில் சந்தித்தால் மட்டும் அவர்களுக்கு நினைவுக்கு வரும். பகல் கனவு பலிக்காது என சொல்வதால், இரவில் வரும் கனவுகளுக்குத்தான் சிலர் ஏடாகூடமாக வந்தால் அச்சப்படுவர்.

சிலருக்கு அசரிரி போல் கனவில் வந்து நடப்பதை சொல்வதுண்டு. சிவன்மலை ஆண்டவர் கோயில் உத்தரவுப்பெட்டியில் வைக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பலன் உள்ளது. பக்தர்கள் கனவில் சிவன்மலை ஆண்டவர் வந்து சொல்வார். அவர் சொன்னதை மறுநாள் கோயிலில் வந்து பக்தர்கள் சொல்வார்கள். அதை சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைப்பர்.


இப்படி கனவுகள் பல விதம் உள்ளது. கனவில் நல்லதும் வரும் கெட்டதும் வரும். கனவில் சொர்க்கத்தில் வசிப்பது போல் இருக்கும். நாம் நீண்ட நாட்களாக ஏங்கிக் கொண்டிருந்த விஷயம் நமக்கு கனவில் கிடைப்பது போல் இருக்கும். அதே வேலை நமக்கு நெருக்கமானவர்களோ இல்லை பிடித்தமானவர்களோ இறப்பது போல் கனவில் வந்துவிட்டால், மறுநாள் துடித்துவிடுவார்கள்.

அந்த விஷயத்தை சொல்லவும் முடியாது, சொல்லாமல் மெல்லாவும் முடியாது. பொதுவாக யாராவது இறப்பது போல் கனவில் வந்தால் அது நிச்சயம் நடக்குமா? என்பதை பார்க்கலாம். உயிரோடு இருப்பவர்கள் இறந்து போவது போல் கனவு கண்டால் பயப்படவே தேவையில்லை. நமக்கு பிடித்தவர்கள் இறந்து போவது போல் கனவில் கண்டால் அந்த நபருடைய வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும் என்பது அர்த்தம்.


அவர்களுக்கு அனைத்து துன்பங்களும் நீங்கி மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை வாழ்வார்கள். கனவு காண்பவரே இறப்பது போல் கனவு கண்டால் அவர்கள் வாழ்வில் ஏதோ மாற்றம் ஏற்பட போகிறது என்று அர்த்தம். உங்கள் நண்பர்கள் இறப்பது போல் கனவில் வந்தால் நீங்கள் அவர்களை நேசிக்கிறீர்கள் என்று அர்த்தம். கணவன் அல்லது மனைவி இறப்பது போல் கனவு கண்டால் எதிர்பார்த்த குணங்களில் ஏதோ குறை உள்ளது என்று அர்த்தம்.


No comments:

Post a Comment